மல்ட்டிதால் சட்னி

தேதி: February 16, 2011

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.5 (2 votes)

 

கடலை பருப்பு - 2 ஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 2 ஸ்பூன்
நிலக்கடலை - 1 ஸ்பூன்
வரமிளகாய் - 4
தேங்காய் துருவல் - 1 கப்
தக்காளி - 1
பூண்டு - 10 பல்
சின்ன வெங்காயம் - 10
மல்லி விதை - 1 ஸ்பூன்
பெருங்காயம் - 1 சிறு துண்டு
புளி
உப்பு
கடுகு, உ. பருப்பு, கறிவேப்பிலை - தாளிக்க


 

கடாயில் எண்ணை விட்டு வரமிளகாய், மல்லி விதை, நிலக்கடலை, உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு பெருங்காயம் இவற்
றை ஒன்று ஒன்றாக வறுத்து வைக்கவும்.

பின் பூண்டு, வெங்காயம், தக்காளி தேங்காய் துருவல் இவற்றை வதக்கிக் கொள்ளவும்

ஆறியதும் உப்பு, புளி சேர்த்து அரைத்தெடுக்கவும். கடுகு, உ.பருப்பு, கறிவேப்பிலை தாளிக்கவும். இட்லி தோசைக்கு நல்ல காம்பினேஷன்.


மேலும் சில குறிப்புகள்


Comments

சூப்பர் சட்னி தோசை இட்லிக்கு நன்றாக இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை
வாழ்த்துக்கள் ...

வாழு, வாழவிடு..