சாக்லேட் கேக்

தேதி: February 16, 2011

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

Average: 3 (1 vote)

 

பால் பவுடர் - 1 கப்
கொக்கோ பவுடர் - 7 ஸ்பூன்
வெண்ணை - எலுமிச்சை அளவு
சர்க்கரை - 11/2 கப்
முந்திரி, பாதாம் - தலா 10


 

பால் பவுடர், கோக்கோ பவுடர் இரண்டையும் சேர்த்து 4, 5 முறை சலிக்கவும்.
முந்திரி, பாதாமை வறுத்து ஒன்றிரண்டாக உடைத்து வைக்கவும்
11/2 கப் சர்க்கரையை கெட்டிபாகு வைக்கவும் பாகை எடுத்து தட்டில் போட்டால் ஒட்டாமல் இருக்கும் பதம் வந்ததும் அடுப்பை அணைத்துவிடவும்.
பின் வெண்ணையை சேர்த்து கரைந்த்ததும் சலித்து வைத்துள்ள பால்பவுடர் கலவையை தூவி கைவிடாமல் கிளரவும்.

சுருள் பதமாக வந்ததும் நெய் தடவிய டிரேயில் ஊற்றி சமப்படுத்தவும். வறுத்து வைத்துள்ள நட்ஸை தூவி லேசாக அழுத்திவிடவும்.

ஆறியதும் துண்டுகள் போடவும்.


கோக்கோ பவுடருக்கு பதில், பூஸ்ட், போர்ன்விட்டாவும் பயன்படுத்தலாம்

மேலும் சில குறிப்புகள்


Comments

நான் ரெடிமேட் பாக்கெட் வாங்கிதான் செய்வேன்..இதுபோல் செய்வது ஈசி
கண்டிப்பா செய்துட்டு பதிவிடுகிறேன்...

வாழு, வாழவிடு..