வெங்காய சட்னி - 2

தேதி: May 5, 2006

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

வெங்காயம் - 2
காய்ந்த மிளகாய் - 4
புளி - சிறிது
தக்காளி - ஒன்று
எண்ணெய் - 2 தேக்கரண்டி
உப்பு - தேவைக்கேற்ப


 

வெங்காயத்தை நீளமாக நறுக்கிக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டுக் காய்ந்ததும் மிளகாய் போட்டு வதக்கவும். வதங்கியதும் வெங்காயத்தை போட்டு நன்கு வதக்கவும்.
அதன் பிறகு தக்காளி போட்டு நன்கு வதக்கவும். அதை ஒரு தட்டில் கொட்டி ஆற விடவும்.
பின்னர் மிக்ஸியில் உப்பு மற்றும் சிறிது புளி சேர்த்து அரைத்து கொள்ளவும்.


இட்லிக்கு தொட்டு கொள்ள ருசியாக இருக்கும்.

மேலும் சில குறிப்புகள்


Comments

டியர் வாணி,
இந்த சட்னியை செய்து பார்த்தேன்... மிக நன்றாக இருந்தது.... நன்றி.

Vazhga Tamil!!!

டியர் சித்ரா,

உங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி.......

நன்றி...