வெல்ல போவது யாரு?

இந்தியாவின் மதங்களில் ஒன்றாக மாறி விட்ட கிரிக்கெட் (மட்டை பந்து) உலக கோப்பை போட்டிகள் இன்னும் சில நாட்களில் துவங்க இருப்பது நாம் அனைவரும் அறிந்ததே. அதை பற்றிய கொஞ்சம் விரிவா பேசுவோமா?

கிரிக்கெட் உலக கோப்பை 1975 ஆம் ஆண்டில் இருந்து தொடங்கப்பட்டு இது வரை 9 முறை நடந்து உள்ளது. இதில் 1975, 1979,1983 &1999 ஆம் ஆண்டுகளில் இங்கிலாந்திலும், 1987 & 1996 - தெற்கு ஆசியாவிலும், 1992 - ஆஸ்திரேலியா/நியுஸி யிலும், 2003 - ஆப்பிரிக்காவிலும், 2007 - மேற்கு இந்திய தீவுகளிலும் நடந்து உள்ளது. இதை தொடந்து 10வது உலக கோப்பை தொடரை இம்முறை மீண்டும் தெற்கு ஆசியா அணிகளுக்கு போட்டி நடத்த வாய்ப்பு அளிக்கப்பட்டு உள்ளது. இம்முறை இந்தியா, இலங்கை, பங்களாதேஷ் நாடுகளில் 14 அணிகள் பங்கு பெற மொத்தம் 49 போட்டிகள் பிப்ரவரி 19 முதல் ஏப்ரல் 2 ம் தேதி வரை நடைபெற உள்ளது.

டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் 10 அணிகள் தானாகவே உலக கோப்பை போட்டிக்கு தகுதி உடையதாகும், மற்ற நான்கு அணிகள் அதற்கான தகுதி போட்டிகளில் விளையாடி வந்தவை. அவை - கென்யா, கனடா, அயர்லாந்து & நெதர்லாந்து. இந்த 14 அணிகள் இரு குழுக்களாக பிரிக்கப்பட்டு தலா 6 போட்டிகளில் மோதும். அதில் அந்தந்த குழுவில் முதல் 4 இடங்களை பெறும் அணிகள் கால் இறுதி போட்டிக்கு தகுதி பெறும். பின் அரையிறுதி, இறுதி போட்டிகள். நம் இந்திய அணி குழு ஆ வில் உள்ளது. அதனுடன் இங்கிலாந்து, பங்காளதேஷ், தென் ஆப்பிரிக்கா, மேற்கு இந்திய தீவுகள், அயர்லாந்து & நெதர்லாந்து அணிகளும் உள்ளது. குழு அ வில் ஆஸ்திரேலியா, நியுஸிலாந்து, இலங்கை, பாகிஸ்தான், ஜிம்பாவே, கென்யா & கனடா அணிகள் இடம் பெற்று உள்ளனர்.

இது வரை நடைபெற்ற போட்டிகளில் மேற்கு இந்திய தீவுகள் இரு முறையும், இந்தியா, பாகிஸ்தான், இலங்கை தலா ஒரு முறையும், ஆஸ்திரேலியா நான்கு முறையும் கோப்பையை வென்று உள்ளனர். இதில் கடந்த மூன்று முறையாக ஆஸ்திரேலியா வெற்றி பெற்று இருப்பதும் குறிப்பிடத்தக்கது. இது போக இரு முறை இரண்டாம் இடத்தையும் அந்த அணி பிடித்து உள்ளது. ஆன மொத்தம் நடந்த 9 தொடர்களில் அந்த அணி ஆறு முறை இறுதி போட்டிக்கு தகுதி பெற்று மிக வலிமையாக காட்சி அளிக்கிறது. அது போக இங்கிலாந்து அணி மூன்று முறை தகுதி பெற்றும் கோப்பை வெல்ல முடியவில்லை. இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், மேற்கு இந்திய தீவுகள் தலா ஒரு முறை இறுதி போட்டி வரை வந்து தோல்வியுற்று உள்ளனர்.

இது வரை நடந்த போட்டிகளில் அதிக ரன்களை சச்சின் டெண்டுல்கரும், அதிக விக்கெட்களை கிளேன் மெக்கிராத் எடுத்து உள்ளார்கள். அதிக முறை கோப்பை வென்ற கேப்டன்கள் லாயிட் & பாண்டிங் (இரு முறை)அதிகபட்ச ரன்களை இந்தியாவும், குறைந்தபட்ச ரன்களை கனடாவும் எடுத்து உள்ளனர். கீப்பரில் கில்கிறிஸ்டும், காட்ச் ல் பாண்டிங்கும் முன்னிலை வகிக்கிறார்கள். உலக கோப்பை தொடர்களில் இது வரை பாகிஸ்தான் இந்தியாவை வென்றது இல்லை. இது போன்ற புள்ளி விபரங்கள் பல இருந்தாலும் வரும் போட்டிகளில் திறமையை நிருபிக்க போற அணிக்கு தான் வெற்றி என்பதால் அணிகளின் பலம்/பலவீனங்களை பார்க்கலாம்.

பங்களாதேஷ், கென்யா, கனடா, நெதர்லாந்து, ஜிம்பாவே, அயர்லாந்து போன்ற அணிகளின் வெற்றி வாய்ப்பு இத்தொடரில் ரொம்பவே சிரமம் தான். பங்களாதேஷ் போன முறை சிறப்பாக விளையாடி இருந்தாலும் 6 போட்டிகள் அடங்கிய முதல் சுற்று முடிவில் தேறி வருவது கடினம் தான். இந்த ஆறு அணிகளில் பங்களாதேஷ், அயர்லாந்து ஏதாவது அதிசியம் நிகழ்த்த முயலக் கூடிய அணிகள். கென்யா வின் தரமும் கொஞ்சம் கவனிக்க வைக்கிறது. மொத்தத்தில் இந்த அணிகளின் பலம் இந்த அணிகள் மீது எந்த ஒரு எதிர்பார்ப்பும் யாருக்கும் கிடையாது. மற்றவை எல்லாம் பலவீனமே.

மேற்கு இந்திய தீவுகள்/பாகிஸ்தான் - இந்த இரு அணிகளும் மிக வலுவாக இருந்து கால போக்கில் பல காரணங்களால் மிகவும் பலவீனம் அடைந்து வந்து கொண்டு இருக்கிறது. இந்த இரு அணிகள் மீது இம்முறை யாருக்கும் அவ்வளவாக நம்பிக்கை இல்லை. போலார்ட், சந்தர்பால், சர்வான் போன்றவர்கள் சிறிது விளையாடினால் இந்த அணி கால் இறுதி வரை வரலாம். அதே போல் பாகிஸ்தான் அணியும். அப்திரி, ரசாக், அக்மல் சகோதரர்கள் போன்றவர்கள் விளையாடினால் கால் இறுதி நிச்சயம். மற்றபடி கால் இறுதி தாண்டி வருவது இரு அணிகளுக்குமே சிரமம் தான். அதிசயம் நிகழ்ந்தால் உண்டு.

இங்கிலாந்து/நியுஸிலாந்து - இந்த இரு அணிகளும் உலக கோப்பை தொடர்களில் மட்டும் எப்பொழுதுமே சிறப்பாக விளையாடி வரும் அணிகள். தற்பொழுது இந்த இரு அணிகளும் ஒரு நாள் போட்டிகளில் தொடர்ந்து சொதப்பி வருவதால் இம்முறை அந்த பெருமையை தக்கவைத்து கொள்வார்களா என்பது கேள்வி குறியே. இந்த இரு அணியிலும் திறமையான வீரர்கள் பலர் இருந்தும் ஒரு ஒருங்கிணைப்பு இல்லாமல் விளையாடுவதும் அவர்களின் தோல்விக்கு முக்கிய காரணம். பீட்டர்சன், கோலிங்வுட், ஆண்டர்சன் இங்கிலாந்தின் முக்கிய வீரர்கள், இவர்கள் கை கொடுத்தால் கால் இறுதியை தாண்டலாம். ரோஸ் டைலர், ரைடர் மற்றும் விட்டோரி நியுஸிலாந்தின் நம்பிக்கை நட்சத்திரங்கள். இவர்கள் துணையுடன் கால் இறுதியை தாண்ட முயலும் நியுஸிலாந்து.

தென் ஆப்பிரிக்கா - தற்போதைய நிலையில் மிகவும் வலிமை வாய்ந்த அணி என்றால் அது தென் ஆப்பிரிக்கா தான். பேட்டிங், பவுலிங், பீல்டிங் என அனைத்திலும் சிறப்பாக விளங்குவது இவர்களின் பலம். உலக கோப்பை போட்டியில் இது வரை பெரிதாக சாதிக்கவில்லை என்பதும், முக்கியமான போட்டிகளில் சொதப்புவதும் இவர்களின் பலவீனம். காலிஸ், அம்லா, ஸ்டைன், மோர்கல் போன்றவர்களின் நிலையான பார்ம் இவர்களுக்கு ஒரு பெரிய வரபிரசாதம். அது போக கை கொடுக்க ஸ்மித், டி வில்லர்ஸ், டுமினி போன்றவர்களும் உள்ளனர். கோப்பையை வெல்ல வாய்ப்பு இருக்கும் அணிகளில் இதுவும் ஒன்றாக கருதப்படுகிறது.

ஆஸ்திரேலியா - டெஸ்ட் போட்டிகளில் தொடர் தோல்வியை சந்தித்து வந்தாலும் ஒரு நாள் போட்டிகளில் முதல் இடத்தை இன்னும் தக்க வைத்து இருக்கும் ஆஸ்திரேலியாவிக்கு இந்த தொடர் மிகுந்த சவால் அளிக்க கூடியதாக தான் இருக்க போகிறது. முண்ணனி பேட்ஸ்மேன் களின் தொடர் சொதப்பல்களும், அனுபவம் வாயந்த பந்து வீச்சாளர்கள் இல்லாமையும் இவர்களின் பலவீனமாக உள்ளது. உலக கோப்பை போட்டிகளில் தொடர் வெற்றியும்/கோப்பையும், வாட்சன், ஜான்சன் இருவரின் பார்ம் மும், பீல்டிங், நெவர் செ டை என்ற போராட்ட குணமும் இவர்களின் பலமாகும்.

இலங்கை - அனுபவம் வாய்ந்த வீரர்கள் இருப்பதும், நல்ல பார்மில் அனைவரும் தொடர்ந்து இருப்பதும், பீல்டிங், சொந்த மண் என பலமாக இருக்கும் இந்த அணிக்கு பந்து வீச்சில் சில ஒட்டைகள் உள்ளனர். கோப்பையை வெல்ல வாய்ப்பு இருக்கும் அணிகளில் இதுவும் ஒன்று. முரளிதரனின் கடைசி தொடர் என்பதால் தன்னால் முடிந்த அளவு சிறப்பாக செயல்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியா - சொந்த மண்/ரசிகர்கள், தொடர் வெற்றி, பலமான பேட்டிங் வரிசை, தோனியின் அதிர்ஷ்டம் போன்றவை நம் அணியின் பலம். எந்த நேரத்தில் சொதுப்புவார்கள் என்பதும், திட்டமிடல், பந்து வீச்சு போன்றவை பலவீனங்கள். சச்சின், கோலி, யூசுப், சேவாக் போன்றவர்கள் கவனிக்கபட வேண்டியவர்கள். இவர்களின் பேட்டிங்கை நம்பியே களம் இறங்குகிறது நம் அணி.

மேற்சொன்னவைகளை வைத்து பார்த்தால் இந்தியா, தென் ஆப்பிரிக்கா, இலங்கை, ஆஸ்திரேலியா போன்ற அணிகள் அரையிறுதி வரை வரலாம். இறுதி போட்டிக்கு இந்தியா, இலங்கை முன்னேறலாம். அப்படி நடைபெற்றால் இந்தியாவிற்கு கோப்பை வெல்லும் வாய்ப்புகள் அதிகம். பார்ப்போம் வெல்ல போவது யாரு என்று?

கால்பந்து உலக கோப்பை, ஒலிம்பிக்ஸ் பிறகு உலக நாடுகளில் அதிக அளவில் ஒளிபரப்பு செய்யப்படும் கிரிக்கெட் உலக கோப்பை போட்டிகளை காணுங்கள்/ரசியுங்கள். உங்களுக்கு பிடித்த அணியை சப்போர்ட் செய்யுங்கள். But Dont Miss the action.

இன்று நடைபெற்று கொண்டு இருக்கும் உலக கோப்பையின் முதல் போட்டியில் இந்தியாவும் பங்களாதேஷ் அணியும் மோதிக் கொண்டு உள்ளனர்.

டாஸ் வென்ற பங்களாதேஷ் இந்திய அணியை பேட் செய்யும்படி கேட்டுக் கொண்டது. முதலில் பேட் செய்த இந்திய அணி சேவாக் மற்றும் கோலி யின் சிறப்பான ஆட்டத்தால் 4 விக்கெட் இழப்புக்கு 370 ரன்கள் எடுத்து உள்ளது.

அடுத்து பேட் செய்து கொண்டு இருக்கும் பங்களாதேஷ் அணி சிறப்பான தொடக்கத்தை கொடுத்தாலும் ஒரு விக்கெட் இழப்புக்கு பின் அதனின் ரன் ரேட் குறைந்து கொண்டே வருகிறது. தற்போது அந்த அணி 20 ஒவருக்கு ஒரு விக்கெட் இழப்புக்கு 118 ரன்கள் எடுத்து உள்ளது. இன்னும் 253 ரன்கள் 30 ஒவரில் தேவை.

ரன் ரேட் குறைந்துக் கொண்டே வருவதால் தேவைப்படும் ரன் ரேட் அதிகமாகி கொண்டே வருகிறது. அந்த பிரஷர் காரணமாக பங்காளதேஷ் வீரர்கள் விரைவில் அவுட் ஆகும் வாய்ப்புகள் அதிகம். அதனால் இந்தியா இந்த போட்டியை எளிதாக வெல்லும் என்பது என் எண்ணம்.

இல்லை என்றால் வழக்கம் போல் போராடி பரபரபான கட்டத்திற்கு கொண்டு சென்று இந்தியா வெற்றி பெறும். போன உலக கோப்பையில் பங்காள்தேஷ் அணியிடம் தோற்றதே நாம் அந்த தொடரில் இருந்து வெளியேற காரணமாக அமைந்தது. அதற்கு பழி தீர்க்கும் வகையில் இந்த வெற்றி அமையும் என்று எதிர்ப்பார்ப்போம்.

நட்புடன்
நாகை சிவா

"Follow your heart and your dreams will come true."

சிவாண்ணா,

//பேசாம வர்ணனை செய்ய முடியுமா என்ன ;) அதுவும் போக பெரிய அண்ணன் பாபு இருக்கும் போது நான் எல்லாம் கிரிக்கெட் பற்றியே பேசக் கூடாது. :))//இது தான் வலிய வந்து மாட்டிக்கறதுங்கறதா???;(( பெரிய அண்ணன் இப்போ பங்களாதேஷில் மேட்ச் பார்த்திட்டு இருக்காராம் தெரியாதா?? இப்ப இப்ப தான் டிவியில் ஜூம் பண்ணி காமிச்சாங்க:)

பங்களாதேஷின் ரன் ரேட் குறைந்து வந்தாலும், நீங்க சொல்ற மாதிரி நம்மாளுங்களுக்கு டென்ஷன் ஏத்தி விடறது’னா ரொம்ப பிடிக்குமே, மேட்ச் முடியும் இவங்களை நம்பி ஒண்ணும் சொல்லிட முடியாது, என்றாலும் வெல்வது இந்தியா தான். நீங்க பேசிட்டே வர்ணனை கொடுங்க:)

அன்புடன்
பவித்ரா

நல்ல தொடர் போகுதே இங்கே... இப்ப தான் கவனிக்கிறேன்....

மேட்ச் பாத்துட்டே இருக்கேன்... சேவாக் 200 அடிச்சுடுவார்ன்னு ரொம்பவே எதிர்பார்த்தேன். அப்படி அடிச்சுருந்தா வேல்ட் கப் ரிக்கார்ட் ஆகியிருக்கும்.. (இதுவரை அதிக ரன் உலக கோப்பையில் எடுத்தது பாகிஸ்தான் வீரர் சையத் அன்வர்- 194 ரன்) அதை முறியடிப்பார்ன்னு பாத்தேன்.. அவர் சோகமா மூஞ்ச தொங்க போட்டுட்டு போன மாதிரி நானுமே கொஞ்சம் சோகமாகிட்டேன்...

அப்பறம் சச்சின் ரொம்பவே அவசரப்பட்டுட்டு ஓடி வந்துட்டார்... ஆனா 370 ரன் கொடுத்து பங்க்லாதேஷை திணறடிச்சது ரொம்பவே ஓவர் ;)

//பங்காள்தேஷ் அணியிடம் தோற்றதே நாம் அந்த தொடரில் இருந்து வெளியேற காரணமாக அமைந்தது. அதற்கு பழி தீர்க்கும் வகையில் இந்த வெற்றி அமையும் என்று எதிர்ப்பார்ப்போம்.//
அதையே தான் என்னவரும் சொன்னார். இதை படிச்சதும் எனக்கும் சிரிப்பு வந்துச்சு....

ரொம்ப நல்லா எழுதுறீங்க சிவா... முடிஞ்ச அலவுக்கு நானும் உங்களோட கலந்துக்குறேன்

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

@ பவித்ரா : பெரிய அண்ணன் பங்காளதேஷ் வீதிகளிலும் கிரிக்கெட் கிரவுண்ட் டிலும் தென்பட்டது எல்லாம் ஒரு காலம். அதாவது போன நூற்றாண்டில் :))) இப்ப முழுக்க முழுக்க நாகை கோட்டையில் மட்டுமே :)))

@ ஆமினா : எல்லா கிரிக்கெட் ரசிகர்களும் இருக்கிற அதே எண்ணம் தான் எனக்கும் உங்க வீட்டுக்காரருக்கும் :)))
பின் அன்வர் எடுத்த ரன்கள் உலக கோப்பையில் கிடையாது. அதனால் அவர் அந்த வரிசையில் வர மாட்டார். ஒரு நாள் போட்டிகள் என்று எடுத்துக் கொண்டால் அவர் 3 வது இடம். முதலிடம் சச்சின் :))

உலக கோப்பையை பொறுத்தவரை கேரி கிரிஸ்டன் எடுத்த 188 ரன்கள் தான் முதலிடம். 2. கங்குலி (183) 3. விவியன் ரிச்சர்ட்ஸ் (181) 4. கபில்தேவ் (175) 5. சேவாக்(175). இந்த போட்டியில் அடித்த 175. கபில் & சேவாக் இருவருமே 175 எடுத்து இருந்தாலும் கபில் அந்த போட்டியில் நாட் அவுட் என்பதால் அவருக்கு 4 ம் இடம்.

என்னுடன் இந்த தொடரில் கலந்து கொள்வதற்கு நன்றி. முடிந்த அளவு எல்லாம் போட்டிகள் போதும் ஒரு முறையாவது கருத்தை பதிய முயல்கிறேன். அப்படி இல்லாத பட்சத்தில் இந்தியா விளையாடும் போட்டிகளில் கண்டிப்பாக பதிவு இடுகிறேன். வந்துடுங்க :))

நட்புடன்
நாகை சிவா

"Follow your heart and your dreams will come true."

எதிர்பார்த்தது போலவே இந்தியா 87 ரன்கள் வித்தியாசத்தில் பங்களாதேஷ் அணியை வீழ்த்தி வெற்றிகரமாக தன்னுடைய கணக்கை தொடங்கியுள்ளது. இது தொடர வேண்டும் என எதிர்பார்ப்போம். Man of the Match : Shewag

நட்புடன்
நாகை சிவா

"Follow your heart and your dreams will come true."

இன்று சென்னையில் நடைபெறும் நியுஸிலாந்து Vs கென்யா போட்டியில் டாஸ் வென்ற கென்யா அணி முதலில் பேட் செய்ய களம் இறங்கியது. அந்த அணியின் விக்கெட்கள் சீட்டு கட்டு போல் சரிய 69 ரன்களுக்கு ஆல் அவுட். அதனை தொடர்ந்து களம் இறங்கி உள்ள நியுஸி இந்த இலக்கை (70) சுலபமாக அடைந்து விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நட்புடன்
நாகை சிவா

"Follow your heart and your dreams will come true."

எதிர்பார்த்தது போலவே கென்யா வை நசுக்கியது நியுஸிலாந்து. 8 ஒவர்களிலே விக்கெட் இழப்பின்றி வெற்றிக்கு தேவையான ரன்கள் எடுத்து இமாலய வெற்றியுடன் தன் கணக்கை தொடங்கி உள்ளது நியுஸிலாந்து.

இன்று நடைபெற இருக்கும் அடுத்த போட்டியான இலங்கை Vs கனடா இன்னும் சில மணி நேரங்களில் ஆரம்பம் ஆக உள்ளது. இந்த போட்டியில் இலங்கை எளிதாக வெற்றி பெறும் என்று எதிர்பாக்கப்படுகிறது. கனடா இங்கிலாந்து வுடன் ஆடி பயிற்சி போட்டிகளில் அந்த அணிக்கு கடும் சிரமத்தை ஏற்படுத்தியது. அது போன்று இந்த போட்டியிலும் கடுமையான மோதல் கொடுக்க முயற்சி செய்தால் ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும். கடந்த 2003 ம் ஆண்டு உலக கோப்பையின் போது கனடா இலங்கையிடம் 36 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது. இது தான் உலக கோப்பையின் குறைந்தபட்ச ஸ்கார் ஆகும்.

நட்புடன்
நாகை சிவா

"Follow your heart and your dreams will come true."

எதிர்பார்த்தது போலவே இலங்கை கனடா வுக்கு எதிராக இமாலய வெற்றியை பெற்றது. முதலில் பேட் செய்த இலங்கை அணி ஜெயவர்த்தே மற்றும் சங்கர்கரா வின் சிறப்பான ஆட்டத்தால் 7 விக்கெட் இழப்புக்கு 332 ரன்கள் குவித்தது. தொடர்ந்து களம் இறங்கிய கனடா 36.5 ஒவர்களிலே 122 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்து 210 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

ஆட்டநாயகன் விருது - ஜெயவர்த்னே

நட்புடன்
நாகை சிவா

"Follow your heart and your dreams will come true."

இன்று (21.2.2011) நடைபெறும் ஆஸி Vs ஜிம்பாவே போட்டியில் சுவாரஸ்சியம் ஏதும் இருக்காது என்றே எண்ணினேன். டாஸ் வென்ற ஆஸி பேட் செய்ய களம் இறங்கிய பிறகு என் எண்ணத்தை மாற்றிக் கொள்ளும் வகையில் ஜிம் அணியின் பந்து வீச்சு இருந்தது. முதல் 20 ஒவர்களில் ஜிம் பந்து வீச்சாளர்களின் பந்து வீச்சை எதிர்கொள்ள ஆஸி ரொம்பவே சிரமப்பட்டது. கடந்த 29 உலக கோப்பை போட்டிகளில் ஒரு முறை கூட தோல்வி அடையாத சாம்பியன்ஸ் அணியின் ஆட்டம் போலவே அல்ல அவர்களின் ஆட்டம். வாட்சன் ஆரம்பத்தில் தாக்கு பிடித்து நிற்க பின் க்ளார்க் அருமையான ஆட்டத்தின் மூலம் 6 விக்கெட் இழப்புக்கு 262 ரன்கள் எடுத்து உள்ளது. ஜிம் வீரர்களின் பீல்டிங்ம் பாராட்டதக்க வகையில் இருந்தது.

இந்த ஸ்கோர் எடுக்க ஜிம் ரொம்பவே சிரமபட வேண்டி இருக்கும். ஆனால் ஜிம் வீரர்கள் இது வரை இந்த போட்டியில் காட்டிய Spirit (So far) யை தக்க வைத்து விளையாடினால் வெற்றி கனியை தட்டி பறிக்க முடியும். விடாக்கொண்டன் ஆஸி யிடம் இவர்களின் பாச்சா பலிக்குமா என்பதையும் கடந்த 10 வருடங்களில் உலக கோப்பையில் தன்னுடைய முதல் தோல்வியை பெறுமா என்பதையும் பொறுத்து இருந்து பார்ப்போம்.

நட்புடன்
நாகை சிவா

"Follow your heart and your dreams will come true."

This time the indian team achive this world cup championship

Dhoni Is the Very Lucky Person..
He Won This Many Tri-Series And T-20 World Cup

next Fully Youngster Team in india . So COnform India Won this Cup

Ini Oru Vithi Seivom..
Jai Ho..........................................

மேலும் சில பதிவுகள்