Rh+ அம்மாவுக்கு Rh- குழந்தை

ஒரு Rh+ அன்னைக்கு Rh- குழந்தை உருவானால், அதில் ஏதேனும் சங்கடங்கள் உள்ளதா? அந்த குழந்தையை அது பாதிக்குமா. அல்லது அந்த தாய்க்கு ஏதேனும் பாதிப்பு வருமா? என் தோழி ஒருவர் Rh+, அவருக்கு Rh- குழந்தை உருவானால் ஏதேனும் பிழை வருமா. உங்களுக்கு தெரிந்தவர்களுக்கு இதுபோல் ஏதேனும் நிகழ்ந்துள்ளதா?

தோழிகளே, மருத்துவம் அறிந்தவர்கள் இருந்தால் இந்த கேள்விக்கு விடையளிக்கவும், தெரியாதவர்களும் பிறரிடம் கேட்டு அல்லது உங்கள் அனுபவத்தில் தெரிந்த விஷயங்கள் கொண்டு விடை அளியுங்கள். ப்ளீஸ்.

யோகலெட்சுமி எனக்கு நன்றாவே தெரியும் Rh+ தாய்க்கு Rh- குழந்தையால் எந்த பிரச்சனையும் இல்லை. தாய்க்கு Rh- இருந்தால் மட்டுமே பிரச்சனை. ஒரு Rh+ தாய் Rh- (or) Rh+குழந்தையயோ எந்தவித சிக்கலும் இன்றி பெறலாம். ஆனால் தாய் Rh- வாக இருந்தால் குழந்தையும் அதே Rh- இல் இருந்தால் தொல்லையில்லை. குழந்தை Rh+ இருந்தால் மட்டுமே 2 வது குழந்தை பெறுவதில் பிரச்சனை வரும். அதனால் தான் குழந்தை பிறந்ததும் ஒரு injection தாய்க்கு போடுவார்கள் .

எனக்கும் Rh- தான். எந்த டாக்டரும் கேட்டதும் நெற்றியை மேலே ஏற்றுவார்கள். என் கணவருக்கும் அதே குரூப் என்றதும் தான் அவர்களின் முகம் தெளிவடையும். அதனால் தான் ஹாஸ்பிட்டலில் Rh- தாய்க்கு அவர்களுடைய file ல் பெரிதாக -ve என்று எழுதி வைப்பார்கள்

ஒவ்வொருவரும் உலகத்தை மாற்ற நினைக்கிறார்களேயொழிய தம்மை மாற்றிக்கொள்ள நினைப்பதில்லை.

உங்கள் விடைக்கு மிக்க நன்றி. மிகவும் விளக்கமாக தெளிவாக பதில் கூறி இருக்குறீர்கள் :) ஓரளவிற்கு தெளிவாகி இருக்கிறேன். என் தோழி ஒருவருக்கு இதனால் சில குழப்பங்கள், அவருக்காகவே கேட்டேன். அவரும் தெளிவடைவார் என நினைக்கிறேன், மீண்டும் நன்றி.

இன்னும் தோழிகளுக்கு தெரிந்தால் கூறுங்கள். உதவியாக இருக்கும்.

இதுவும் கடந்து போகும்.

உங்கள் விடைக்கு மிக்க நன்றி. மிகவும் விளக்கமாக தெளிவாக பதில் கூறி இருக்குறீர்கள் :) ஓரளவிற்கு தெளிவாகி இருக்கிறேன். என் தோழி ஒருவருக்கு இதனால் சில குழப்பங்கள், அவருக்காகவே கேட்டேன். அவரும் தெளிவடைவார் என நினைக்கிறேன், மீண்டும் நன்றி.

இன்னும் தோழிகளுக்கு தெரிந்தால் கூறுங்கள். உதவியாக இருக்கும்.

இதுவும் கடந்து போகும்.

எனக்கும்rh-ve தான் முதல் குழந்தை rh-ve அதனால் injection போடவில்லை இரண்டாவது குழந்தை growth இல்லாமல் 3 மாதம் தானகவே வெளியாகிவிட்டது. அதன் பிறகு injection போட்டார்கள்.

adi maram kolirnthalthan nooni maram valarum

என் தங்கைக்கு B+ அவள் கணவருக்கும் B+ அவளுடைய மகளுக்கு வயது 16. இப்போதுதான் அவளுக்கு A1 B+யென தெரிய வந்தது. இப்படி இருக்கக் கூடுமா? பதில் சொல்லுஙள் தோழிகளே. அவசரம். அவள் மிகுந்த குழப்பத்தில் இருக்கிறாள்.

ஜெயா.

நீங்க கேட்பதே எனக்கு புரியல... ரத்தம் குடும்பத்தில் யாருடையது வேணுமானாலும் இருக்கலாமே... அதாவது வாரிசுகள் அப்பா அம்மா ரத்த க்ரூப் தான் இருக்கனும்னு ஒன்னுமில்லயே. அப்படி எதாவது இருக்கா என்ன?

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

நானும் குழம்பிட்டேன் ;(

கீழ இருக்க லின்க் பாருங்க:

http://askville.amazon.com/B%2B-parents-give-birth-AB%2B-child/AnswerViewer.do?requestId=8349586

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

இப்பொழுது நானும் குழம்பி விட்டேன். என் தங்கச்சிக்கு என்ன சொல்லணும்னு புரியவில்லை. அந்த link படிச்சும் எனக்கு சரியா விளங்கி கொள்ள முடியவில்லை.
ஜெயா

நான் அந்த லின்க் கூடவே இன்னும் 2, 3 லின்க் பார்த்தேன்... அதில் எல்லாம் b+ mother, b+ father'னா b or o group குழந்தை தான் பிறக்கும்னு சொல்லிருக்கு. ஒரு முறை எல்லாம் ரத்தமும் செக் பண்ணா தெரியும். ஏன்னா எதாவது ஒன்னு தப்பா இருக்க வாய்ப்பு இருக்கே. ஆனா எனக்கு இதை பற்றிலாம் ஐடியா இல்லை... அதனால் தோழிகள் என்ன சொல்றாங்கன்னு பாருங்க, இன்னொரு முறை ரத்தம் பரிசோதித்து பின் டாக்டர் ஆலோசனை பெருவது சரி.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

அன்பு வனி

நன்றி. எனக்காக நேரம் செலவு செய்து பதில் சொன்னதுக்காக. மறுபடியும் செக் பண்ண சொல்கிறேன்.

ஜெயா

மேலும் சில பதிவுகள்