cord around the neck --- என்னோட பயத்தை போக்க உதவுங்கள் தோழிகளே

டியர் தோழிகளே ...

எனக்கு 9 மாசம் தொடங்கி இருக்கிறது ...33 வது வாரம்....ஸ்கேன் எடுத்து பார்த்தோம்...அதுல எல்லாமே நார்மல் ஆக இருக்கிறது... ஆனால் cord around the neck என்று இருந்தது...நான் ரொம்ப பயந்தேன் ....டாக்டர் அது ஒன்றும பிரச்னை இல்ல.டெலிவரி அப்போ சரி ஆய்டும் னு சொன்னாங்க...இருந்தாலும் எனக்கு பயமாக இருக்கிறது...என்னுடைய குழந்தைக்கு ஒன்றும் ஆக கூடாது.... தோழிகளே உங்களில் யாருக்காது இந்த மாதிரி இருந்ததா?அதனால் ஒரு problem ilaye ...plz என்னோட பயத்தை போக்குங்க ....

எதுக்குப்பா வீணா பயபடுறீங்க...டாக்டர் சொல்லிடாங்கள்ள...தயவுசெய்து பயபடாதீங்க ...உங்க குழந்தையும் பயப்படும்..உங்க குழந்தைய சந்தோசமா வச்சுகங்க....சந்தோசமா இருங்க...நீங்க நல்லபடியா குழந்தைய பெத்தெடுக்க எனதன்பு வாழ்த்துக்கள்.....

அன்பிற்காக எதையும் விட்டுகொடுக்கலாம்..கண்டிப்பாக எதற்காகவும் அன்பை விட்டுகொடுக்காதீர்கள்...

enaku payama tha iruku pa....plz enaku yarathu help panuga...plzzzzzzzz

Hope is necessary in every condition:)

ரேகா பயப்படாதீங்க. சந்தோசமாக இருங்க. ஒண்ணும் ஆகாது. தோழிங்க யாரவது அனுபவசாலிங்க வந்து உங்க பயத்தை போக்குவாங்க. தைரியமாக இருங்க.

பயப்படாதீங்க,குழந்தையின் அசைவுகளை கவனிச்சுட்டே இருங்க.டாக்டர் பிரச்சனை இல்லை என்று சொன்னாங்க தானே.தைரியமா இருங்க.சுக பிரசவமாக வாழ்த்துக்கள்.

அன்பு ரேகா... பயம் வேண்டாம். சமீபத்தில் என் சகோதரிக்கும் இப்படி தான் சொன்னார்கள். "இதனால் பிரெச்சனை வரும் என்று ஏதும் இல்லை, பயம் வேண்டாம்", BP அதிகமாலோ அல்லது குழந்தையின் அசைவு தெரியாமல் இருந்தாலோ உடனடியாக ஹாஸ்பிடல் வர சொன்னார்கள். மற்றபடி பயம் தேவை இல்லை, குழந்தை உள்ளே பொஷிஷன் மாறி கொண்டே இருக்கும், தானாக சரியாகிவிடும். என் தங்கைக்கு பயப்படும்படி ஏதும் நடக்கல, நல்லபடி குழந்தை பெற்றெடுத்துட்டா. அதனால் பயந்து BP அதிகமாயிடாம சந்தோஷமா இருங்க. நல்லபடியா குழந்தை பிறக்க வாழ்த்துக்களும் பிராத்தனைகளும். :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

பதில் அளித்த தோழிகள் அனைவர்க்கும் நன்றி ....4 நாட்களாக ரொம்ப பயந்து நிம்மதி இல்லாமல் இருந்தேன்...உங்களது பதில்கள் எனக்கு மிகுந்த ஆறுதல் தந்தது ..

Hope is necessary in every condition:)

Hi,

Me too got this same condition. But nothing to worry on this.

Actually i delived my baby before 20 days from my due date by cesarean, that too he was not prematured.He is now 1.4 yrs old, very naughty and healthy........

Cesarean is only due to my overweight, because i was 45 in my 2 month, i became 72 in 9th month.

Nothing to worry, be happy.........

மேலும் சில பதிவுகள்