ஓட்ஸ் ஊத்தாப்பம்

தேதி: February 19, 2011

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.2 (27 votes)

 

ஓட்ஸ் - ஒரு கப்
வெள்ளை ரவை - ஒரு கப்
புளித்த தயிர் - 2 கப்
கேரட் - ஒன்று
முட்டைக்கோஸ் - ஒன்று
கொத்தமல்லித் தழை - சிறிதளவு
வெங்காயம் - ஒன்று
உப்பு - தேவைக்கு


 

ஓட்ஸை மிக்ஸியில் பொடியாக அரைத்துக்கொள்ளவும். அதனுடன் தயிர் சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
முட்டைக்கோஸ் மற்றும் கேரட்டை துருவி வைக்கவும். வெங்காயம் மற்றும் கொத்தமல்லித் தழையை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
ஓட்ஸ் தயிர் கலவையுடன் உப்பு, ரவை சேர்த்து கலக்கவும். தேவைப்பட்டால் தண்ணீர் சேர்க்கவும். இந்த கலவை ஒரு 20 - 30 நிமிடம் ஊற வைக்கவும்.
தோசைக் கல்லில் ஊத்தாப்பம் போல் மாவை ஊற்றி, அதன் மேல் காய்கறி கலவையை நன்றாக தூவ வேண்டும். மொறு மொறுப்பு கிடைப்பதற்காக ஊத்தாப்பத்தின் ஓரங்களில் ரவையை தூவ வேண்டும். காய்கறி கலவையை நன்றாக அழுத்தி விடவும்.
பின்னர் திருப்பி போட்டு எடுத்து சூடாக பரிமாறலாம். அரிசி மாவு ஊத்தாப்பத்தை விட ரொம்ப நன்றாக இருக்கும். சத்தான, ஓட்ஸ் ஊத்தாப்பம் ரெடி


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

so nice to see, i will try this mam

சூப்பரோ சூப்பர்.எங்களோட favourite list-ல இந்த டிஷ்யையும் சேர்த்தாச்சு. ரொம்ப ஈஸியா இருக்கு.வெஜிடபுள் எல்லாவற்றையும் மாவில் ஊற்றி பிறகு தோசை சுடலாமா சுகந்தி.

Expectation lead to Disappointment

ஹாய் சுகந்தி நலமா?

ஓட்ஸ் ஊத்தாப்பம் சூப்பர்.பார்க்கவே கலர்புல்லா அழகா இருக்கு.
வாழ்த்துக்கள்.

ஹசீன்

நான் செய்யும் ஊத்தப்பத்தில் கடலைமாவு சேர்ப்பேன்ப்பா. அப்புறம் காய்கள் அதே தான், ஆனால் மாவிலேயே கலந்திடுவேன் தனியா மேலே தூவுவதற்கு பதிலா. நல்ல சத்தான குறிப்பு வாழ்த்துக்கள்:)

அன்புடன்
பவித்ரா

மன்னிச்சு:) 2 முறை பதிவாகிவிட்டது

அன்புடன்
பவித்ரா

சுகி ஓட்ஸ் ஊத்தாப்பம் சூப்பர் கலர்புல்லா இருக்கு சீக்கிரம் ஸ்டார் வாங்க வாழ்த்துக்கள்டா

என்ன ஸ்டார் வாங்காமல் விடறதில்லைன்னு முடிவு கட்டிடிங்களா
எனது அட்வான்ஸ் வாழ்த்துக்கள் நன்றி..

வாழு, வாழவிடு..

ரொம்ப எளிமையா இருக்கு

வாழ்த்துக்கள் சுகந்தி

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

super.i added to my favorite list. keep it up.with regards.g.gomathi.

ஹாய் சுகந்தி, நலமா?
மிகவும் சத்தான குறிப்பை கொடுத்திருக்கீங்க...
பார்க்கும் போதே நன்றாக இருக்கு.
வாழ்த்துக்கள்.

என்றும் அன்புடன்,
அப்சரா.

எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.

குறிப்பை வெளியிட்ட அட்மின் குழுவிற்கு ரொம்ப நன்றி...

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

வர்ஷா - உங்க பதிவுக்கு நன்றி. மேம் எல்லாம் வேண்டாம். சுகின்னு கூப்பிடுங்க போதும்.

மீனாள் - உங்க வாழ்த்துக்கள் ரொம்ப நன்றி.
//வெஜிடபுள் எல்லாவற்றையும் மாவில் ஊற்றி பிறகு தோசை சுடலாமா// --- அப்படி சுட்டா மாவு ஊத்தாப்பம் மாதிரி ரவுண்டு ஹா வராது. பிஞ்சு பிஞ்சு போயிடும். நீங்க ஊத்தாப்பம் ஊத்திட்டு, அதுமேல வெஜிடபுள் போட்டு, நல்லா அமுத்தி விடுங்க.

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

ஹசீனா - நான் நல்லா இருக்கேன். நீங்க எப்படி இருக்கீங்க? இந்த ஊத்தாப்பம் சூப்பர் டேஸ்ட் ஹ இருக்கும். பண்ணி பாருங்க.
உங்க வாழ்த்துக்கு ரொம்ப நன்றி...

பவி - மாவிலேயே கலந்தா, கொஞ்சம் மொந்தமா தோசை வரும் டா. அதான் நான் மேல தூவி விட்டேன். நான் இது வரைக்கும் கடலை மாவு சேத்தி பண்ணினது இல்லை. நீ சொன்ன மாதிரி ட்ரை பண்ணி பாக்கறேன். வாழ்த்துக்கு நன்றி டா

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

பாத்திமா அம்மா - உங்க வாழ்த்துக்கு நன்றி, உங்கள் எண்ணம் போலவே சீக்கரம் ஸ்டார் வாங்கிடறேன்...

ருக்ச்சனா - உங்கள் வாழ்த்துக்கு நன்றி டா

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

ஆமி - கண்டிப்பா இதை உங்க குட்டிக்கு பண்ணி குடுத்துட்டு, அவரோட கமென்ட் சொல்லுங்க...

கோமதி- உங்க வாழ்த்துக்கு நன்றி

அப்சரா - நான் நல்லா இருக்கேன். நீங்க குட்டீஸ் நலமா? உங்க வாழ்த்துக்கு நன்றி. கண்டிப்பா பண்ணி பாருங்க...

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

சுகி... சத்தான ஓட்ஸ் குறிப்பு... பார்க்கவே அழகா சாப்பிடனும்'னு தோணுது. வாழ்த்துக்கள்.

உங்க சாக்லேட் குறிப்பும் ரொம்ப அருமை. அந்த குறிப்பை நானும் ரொம்ப நாளா கொடுக்க நினைச்சேன்... முடியல. நான் அனுப்பிருந்தா கூட இத்தனை அழகா இருந்திருக்காது.... நீங்க சூப்பரா அனுப்பி இருக்கீங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

சுகி'

நல்ல சத்தான குறிப்பு.. வாழ்த்துக்கள்.. ;)

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

உங்க வாழ்த்துக்கு ரொம்ப நன்றி. எவளவோ பண்ணிடீங்க, இதையும் பண்ணீட்டு கண்டிப்பா சொல்லுங்க.
/நான் அனுப்பிருந்தா கூட இத்தனை அழகா இருந்திருக்காது.... நீங்க சூப்பரா அனுப்பி இருக்கீங்க.// - ஒரே வெக்க வெக்கமா வருது போங்க....நீங்க சொன்னஹ்டுல ரொம்ப சந்தோசம்

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

உங்க வாழ்த்துக்கு ரொம்ப நன்றி டா :)

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

சூப்பர் பா நல்லா கல்ர்ஃபுள்ளா இருக்கு டா. இதுக்கு என்ன சய்ட் டிஷ் நல்லா இருக்கும் டா ம்ம்ம் இப்பவே சமையல்ல கல்க்குர போ அப்ப மாமியார்வீட்ல அசத்திடுவ

அன்புடன்
ஸ்ரீ

மிகவும் சத்தான குறிப்பை கொடுத்திருக்கீங்க...வாழ்த்துக்கள் சுகி...

Hi Suganthi,

i am new for this site and I saw you rcipe looks delicious. Shall I add non-vege items to this recipe such as chicken that cooked ?

nalla rusi

அன்புள்ள சுகந்தி, எப்படி இருக்கீங்க? நான் உங்களிடம் முதல் தடவை பேசுகிறேன். நேற்று இரவு ஓட்ஸ் ஊத்தப்பம் செய்தேன். மிகவும் நன்றாக இருந்தது. நல்ல குறிப்பு. மேலும் பல குறிப்புகள் தர வாழ்த்துக்கள். நன்றி.

என்றும் அன்புடன்,
ஆர்த்தி...

எண்ணம் அழகானால், எல்லாம் அழகாகும்!

என்றும் அன்புடன்,
ஆர்த்தி...

கொஞ்ச நாளா ஓட்ஸ் பக்கம் போகாம இருந்தேன்... 2 பேக் அப்படியே இருந்தது. உங்க புன்னியத்தில் கொஞ்சம் செலவாச்சு. நல்ல சுவையான சத்தான குறிப்பு. எல்லாருக்கும் பிடிச்சுது. மிக்க நன்றி.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

Vanakkam suganthi ungaludaiya menu oats seithu parthen migavum arumai Thenks
(appadiye oru thalmaiyana vendukol ) ennaku Oven payan padu patriyum ithil sila kurippu koduthal nalam pls ezhuthu pilaigalai porthukkollavum pls
Mohanam0672

வணக்கம்
எனக்கு ஒரு உதவி நுனழைஅடுப்பு (மைக்ரொவெவ்) பயன்படுதும் முறைபட்ரி விளக்கம் தருவீர்காள? தயவு செய்து கீரில்லில் நம்மிடம் உள்ள எவெர் சில்வர் பாத்திரங்களை பயன் படுத்தலாம? மோகனம்0672