கர்ப்பிணி பெண்கள் - உணவு

1. கர்ப்பிணி பெண்கள் என்ன என்ன உணவு எடுத்து கொள்ளவேண்டும். என்ன என்ன உணவு எடுத்து கொள்ளக்கூடாது.
உதா: பீர்க்கங்காய், பூசணிக்காய் உண்ணலாமா..........

2. எதை உண்டால் தேவையற்ற எடை போடாமல் தவிர்க்கலாம்.

உங்கள் கருத்துக்காக ஆவலுடன் எதிர்ப்பார்க்கிறேன். நன்றி.

ஆரம்ப காலத்தில் FOLICACID நிறைந்த உணவு சாப்பிடவும்.
கொழுப்பு உள்ள உணவை தவிர்க்கவும்.
உடல் எடை 8- 10 கிலோ வரை குடுவது அவசியம்
தண்ணிர் நிறைய குடிக்க வேண்டும்.
அப்பா -அம்மா யாருக்கவது சுகர் இருந்தால் இனிப்பு உன்பதை குறைத்து கொள்ளவும்
WWW.Americanbaby.com
WWW.Babycenter.com
WWW.Babyfit.com
These all very useful links about baby development

(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா

டியர் வாணி,
நிறைய இரும்புச் சத்து உள்ள உனவுகளை எடுத்துக் கொள்ளுங்கள். குறிப்பாக பேரீச்சை, மாதுளை, கீரை வகைகள் ( அதிகம் முருங்கை கீரை), வெல்லம் சேர்த்த உணவு வகைகள் உண்ணலாம். இரவில் பொதுவாகவே சாதம் சாபிடுவதை தவிர்த்து அதிகம் எண்ணை இல்லாமல் எளிதில் செரிக்கும் உணவுகளை உண்ணலாம். காபி, டீ குடிப்பதை தவிர்க்கலாம். பதிலாக பாலுடன் வேறு ஏதாவது கலந்து குடிக்க வேண்டும். காலையில் பழச் சாறு (குறிப்பாக ஆரஞ்சு ஜூஸ்) அதிகம் குடிக்க வேண்டும்.

Vazhga Tamil!!!

டியர் ரேணுகா and சித்ரா,

உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி.........

நன்றி...

பீர்க்கங்காய் தாராளமாக உண்ணலாம்.
ஆப்பிள் ஐ தோலுடன் சாப்பிடவும்.அப்பொழுது தான் நார் சத்தால் கர்ப்ப காலத்தில் மல சிக்கல் ஏற்படாது.சூடு நிறைந்த பழங்களை சாப்பிடாமல் இருப்பது நல்லது.என் பையன் தூங்கும் நேரத்தில்தான் என்னால் கருத்துகளை அனுப்ப முடியும் .சிறிது சிறிதாக நேரம் கிடைக்கும் போது அணுப்புகிறேன்.

(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா

அன்புள்ள Renuka,

உங்கள் கருத்துக்கு நன்றி..........
நேரம் கிடைக்கும் போதே அனுப்புங்கள்.........நானும் என் பொண்ணு தூங்கின பிறகு தான் BROWSE பண்ணுவேன்.

நன்றி...

கர்பிணி பெண்களூக்கென்று ஒரு தனிபட்ட,உணவு என்று எதுவும் இல்லை.அவங்களுக்கு பிடித்தமான எல்லா விதமான உணவையும் சாப்பிடலாம்.தாராளமாக/கட்டாயமாக பத்து கிலோ வரை எடை கூட வேண்டும்.தண்ணீரும், பழரசமும், நிரைய குடிக்க வேண்டும்.மற்றபடி எனக்கு தெரிந்தவரை விசெஷமான எந்த உணவு கட்டுபாடும் கிடையாது.இது என் சொந்த அனுபவம்.

எப்படி இருக்கீங்க?
கிட்டதட்ட ஒரு வருடம் கழித்து உங்கள் பதிவைப்பார்த்தேன்...தாமதமாக பதில் எழுதுவதற்க்கு மன்னிக்கவும்... மிக்க நன்றி...
நான் பத்து கிலோ அல்ல இருபது கிலோ கூடிவிட்டேன்...குறைப்பதன் வழி தான் தெரியவில்லை...இப்போதைக்கு வாக்கிங், உணவு கட்டுபாடு அவ்வளவுதான்...
நன்றி மேடம்...

நன்றி...

என்னங்க டியர்,கிட்டதட்ட ஒரு வருடம் கழித்து எனது பதிவைப் பார்வையிட்டதாக எழுதியிருந்தீர்கள்!!!,மீண்டும் ஏதாவது விசேசமா? (சும்மா விளையாட்டாக கேட்டேன்) மன்னிப்பு கேட்கும் அளவிற்கு என்னுடைய அந்த பதில் யாருக்குமே உதவி இருக்காது, அதில் வெறும் என்னுடைய அனுபவத்தை தான் குறிப்பிட்டிருந்தேன். இருந்தாலும் அதற்கும் பதில் எழுதியதற்கு மிக்க நன்றி.

என்னங்க...மீண்டும் விஷேசமான்னு கேக்கறிங்க? அம்மோ நினைத்தாலே பயமா இருக்குது...
இல்லைங்க...அனி gestational diabetes-க்கு உணவு பற்றி கேட்டிருந்தாங்க....அதனால் தேடிப்பார்தேன்...
நன்றி...

நன்றி...

ஹலோ வாணி ஏங்க பயப்படறீங்க, என்னைக்கேட்டால் வாழ்க்கை முழுவதும் கூட கர்பமாக இருக்க முடிந்தால் சந்தோசமாக இருப்பேன்.ஏன்னென்றால் என் கணவர் என்னை தாங்குவார் பாருங்கள் அவ்வளவு பிரியம் என் மீது அல்ல குழந்தையின் மீது தான்.என் அம்மாவே ஆச்சரியப்படும் படியாக இருக்கும்.எல்லாம் குழந்தை வயிற்றில் இருக்கும் வரை தான், இப்பொழுது புரிந்திருக்கும் நான் ஏன் அவ்வாறு கூறினேன் என்று. என்னச் செய்வது கணவர் மீது ஆசை மட்டும் வைத்திருந்தால் பரவாயில்லை பேராசை அல்லவா வைத்து விட்டேன், நம்ம கொடுத்து வைத்தது அவ்வளவு தாங்க. நன்றி டியர்.

மேலும் சில பதிவுகள்