சோயா கிரேவி

தேதி: February 24, 2011

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.9 (15 votes)

 

குட்டி சோயா - ஒரு கப்
தக்காளி - 2
வெங்காயம் - 2
அரைக்க:
தேங்காய் துருவல் - 3 மேசைக்கரண்டி
இஞ்சி - ஒரு துண்டு
பூண்டு - 6 பல்
சோம்பு - சிறிதளவு
மிளகாய் தூள் - 4 மேசைக்கரண்டி
முந்திரி - 6
தாளிக்க:
சோம்பு - சிறிதளவு
பட்டை - 2


 

முதலில் தேவையான பொருட்கள் அனைத்தையும் தயார்படுத்தி வைத்துக் கொள்ளவும்.
அரைக்க தந்துள்ள பொருட்களை அரைத்து கொள்ளவும். வெங்காயம், தக்காளியை பொடி பொடியாக நறுக்கவும். சோயாவை சுடு தண்ணீரில் போட்டு 5 நிமிடம் வேக வைக்கவும்.
கடாயில் என்ணெய் ஊற்றி சோம்பு, பட்டை போட்டு வதக்கவும்.
பின்னர் வெங்காயம் போட்டு பொன்னிறம் ஆகும் வரை வதக்கவும்.
அதன் பின்னர் தக்காளி போட்டு வதக்கவும்.
தக்காளியை நன்கு வெங்காயத்துடன் சேர்த்து கலக்கவும். பின் சோயாவையும் சேர்த்து வதக்கவும்.
5 நிமிடத்திற்கு பின், அரைத்து வைத்துள்ள கலவையை சேர்த்து வதக்கவும்.
பச்சை வாசனை போகும் வரை, நன்கு கொதிக்க விடவும். தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.
கொதித்த பின், கொத்தமல்லி தழை தூவி இறக்கி வைத்து பரிமாறவும். இந்த கிரேவி, இட்லி, தோசை, சப்பாத்தி, பூரிக்கு சூப்பர் காம்பினேஷன். காரம் தேவைக்கு தகுந்தாற் போல், அதிகப்படுத்தி கொள்ளவும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

சுகி... விடுறதா இல்லை போல... ஒரே ஆரோக்கிய உணவா வருது!!! கலக்குங்க. நானும் செய்துட்டு சொல்றேன். வாழ்த்துக்கள்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

super. keep it up . i will make soya without cocount. i will try your recipe and send back review.with regards.g.gomathi.

இப்படி குட்டி சோயா இருக்கா சுகன். சூப்பரா கலர்புல்லா இருக்கு சுகன். வாழ்த்துக்கள். ரொம்ப சத்தான குறிப்பா கொடுக்கற சுகன். தொடரட்டும்.

குரிப்பு சூப்பர் பா ஆனா இந்த சோயா அதான் புரியல பா அது என்னது

அன்புடன்
ஸ்ரீ

ஹாய் சுகந்தி நலமா...?
சோயா கிரேவி பார்க்க கலர்ஃபுல்லா சூப்பராக இருக்கு.
சிறிய சோயா இதுவரை நான் வாங்கி பார்த்ததே கிடையாது.
செய்து பார்க்கும் ஆவலையே தூண்டிட்டீங்க சுகந்தி.
வாழ்த்துக்கள்.ம்ம் இன்னும் நிறைய அசத்துங்க...

என்றும் அன்புடன்,
அப்சரா.

எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.

ஹாய் சுகி சோயா வைத்து கிரேவி பண்ணலாமா? வித்தியாசமா இருக்கு சூப்பர் வாழ்த்துக்கள்......

உன்னை போல பிறரையும் நேசி.

குறிப்பை வெளியிட்ட அட்மின் அவர்களுக்கு மிக்க நன்றி

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

முதல் ஆளா வந்து பின்னூட்டம் தந்ததுக்கு நன்றி. கண்டிப்பா பண்ணி பாத்துட்டு சொல்லுங்க. உங்களோட அடுத்த பின்னூட்டத்துக்காக காத்திருக்கிறேன்...

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

என்னோட எல்லா குறிப்புகளுக்கும் வந்து பின்னூட்டம் தந்து என்னை வளர்த்து விடறீங்க. உங்க வாழ்த்துக்கு ரொம்ப நன்றி. தேங்காய் போட்டு பண்ணி பாருங்க..

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

உன் வாழ்த்துக்கு ரொம்ப நன்றி மா...குட்டி சோயா இருக்கு டா, நீ கடைல கேட்டு பாரு. சைஸ் பாக்கரக்கே அழகா இருக்கும் :) :)

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

சோயா பா, நீங்க வெஜ் பிரியாணிக்கு எல்லாம் உறண்டையா சாக்லேட் கலர் ல போடுவீங்க.நியாபகம் வந்துடுச்சா?? அதே சோயா தான், அதுலயே குட்டி மா. பக்கத்துல இருக்க கடைல கேட்டு பாருங்க

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

சோயா கிரேவி குறிப்பு சூப்பரா இருக்கு, ,சோயாவை சுடு தண்ணீர் ல போட்டு எடுத்தா ,தண்ணீர உருஞ்சுகிட்டு பிறகு வதக்கும் பொது தண்ணீ விடுதே,சோயாவ தண்ணி இல்லாம பிழிந்துகனுமா????

நீங்க பண்ணாத குறிப்பை நான் அனுப்பி இருக்கேனா, அடடே சந்தோசம் தாங்க முடியல போங்க. கண்டிப்பா பண்ணி பாத்துட்டு மறுபடியும் வந்து சொல்லுங்க

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

குட்டி சோயா அழகா இருக்கு. Departmental ஸ்டோர்ஸ்- ல கிடைக்குமா? நான் வசிப்பது அபுதாபி- இல்.

வாழ்க வளமுடன்

ஹாய் தோழிஸ், அதை மீல்மேக்கர் அல்லது சோயா உருண்டை என்று கேட்டு வாங்குக்க. உதிரியாக்வும் கிடைக்கும். அணில் சோயா உருண்டைகளும் கிடைக்குது. பொருளாதாரத்திற்க்கு ஏற்றமாதிரி வாங்கிகலாம். சுகி, வாழ்த்துக்கள்!

தேவி - உன் வாழ்த்துக்கு நன்றி மா

கல்பனா - சோயாவ சுடு தண்ணில போட்டு, எடுத்துட்டு ஜூஸ் வடிக்கட்டுற, பில்ட்டர் ல சோயாவ போட்டு, அதுமேல ஒரு plate வெச்சு, நல்லா அமுத்துங்க. அப்ப, தண்ணி எல்லாம் நல்லா வடுஞ்சுடும். நீங்க உஸ் பண்ணும் பொது தண்ணி வெளிய வராது

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

நித்யா - கண்டிப்பா எல்லா கடைகளிலும் கிடைக்கும், நீங்க போகும் போது கேட்டு பாருங்க...

பிரியா - தெளிவான விளக்கம் தந்து இருக்கீங்க. நன்றி

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

சுகி, சூப்பர் குறிப்புகளா தந்து தொடர்ந்து கலக்கிட்டு வர்றே. சோயா கிரேவி சூப்பர் மா. அதென்ன குட்டி சோயா? நான் இப்பதான் கேள்விபடுறேன் சுகி. இங்கே பெரிய சோயா தான் கிடைக்கும். அண்ணாவுக்கு சோயா ரொம்ப பிடிக்கும். சப்பாத்திக்கு நல்ல காம்பினேஷன். நான் பெரிய சோயாவிலயே செய்துட்டு நல்லாருந்தா நான் சாப்டுடுட்வேன்....இல்லாட்டி உனக்கு அனுப்பிடறேன் ;)) வாழ்த்துக்கள் பா.

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

நல்ல குறிப்பு

வாழ்த்துக்கள் சுகந்தி

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

சோயா கிரேவி வாசம் தூக்குது அழகா டிஸ்பிளே பன்னியிருக்கிங்க
ஆமா எனக்கு ஒரு டவுட் .என்னோட கடாய் மாதிரில்ல இருக்கு
எப்ப வந்து எடுத்துட்டு போனீங்க சும்மா ஹி ஹி ஹி வாழ்த்துக்கள் ...

வாழு, வாழவிடு..

சுகி நல்ல குறிப்பு வாழ்த்துக்கள்

என்னோட ஃபேவரிட் சோயா மீட். உங்க குறிப்பையும் ஒரு நாள் பண்ணிப் பார்த்துருறேன் சுகி.

//எடுத்துட்டு ஜூஸ் வடிக்கட்டுற, பில்ட்டர் ல சோயாவ போட்டு, அதுமேல ஒரு plate வெச்சு, நல்லா அமுத்துங்க.// நான் என்ன பண்ணுவேன் சொல்லட்டா? முறுக்கு உரல்ல போட்டு அமுக்கிருவேன். தண்ணி வடிஞ்சுரும்.

‍- இமா க்றிஸ்

சீக்கிரமாக ஸ்டார் வாங்க என் வாழ்த்துக்கள்.இங்கு பெரிய சோயா தான் கிடைக்கும்.அதில் செய்யலாமா.

Expectation lead to Disappointment

சுகி

சூப்பரான குறிப்பு.. கடைசி படத்துல ஃபோட்டோகிராஃபி நல்லா இருக்கு.. மூடியோட சேர்த்து எடுத்தது

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

சுகி சூப்பர் ரெசிப்பி. செய்து பாத்துட்டு சொல்ரேம்பா.

hello madam,
shall we do this with big soya.

enjoy everyday

சுகி... சோயா கிரேவி இப்போ தான் செய்தாங்க. சாப்பிட்டு தான் வரேன். சப்பாத்திக்கு சூப்பரான காம்பினேஷன். என் பிள்ளைகள் கூட விரும்பி சாப்பிட்டாங்க. எல்லாருக்கும் ரொம்ப பிடித்தது. சுவையான குறிப்புக்கு மிக்க நன்றி. உங்ககிட்ட சொல்லிட்டு தான் அடுத்த வேலைன்னு ஓடி வந்துட்டேன்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ரொம்ப நன்றி மேடம், இந்த கிரேவி யை நான் செய்தேன்... மிகவும் நன்றாக இருந்தது..

பாக்கும்போதே சாப்பிட தோனுது. நல்ல குறிப்பு குடுததுக்கு நன்றி.

KEEP SMILING ALWAYS :-)

சுகி உங்க சோயா கிரேவி சப்பாத்திக்கு செய்தேன்,நல்லா இருந்துச்சு.நல்ல காம்பினேஷன் .
போனவாரம் காலிப்ளவர் சப்பாத்தியும் ,ஓட்ஸ் ஊத்தாப்பமும் செய்தேன்,நல்ல சுவை.பதிவு போடத்தான் தாமதம்.குறிப்புக்கு நன்றிப்பா

Kalai

seithu parthu karuthu solkiren