எளிய முறை மோர்குழம்பு

தேதி: May 7, 2006

பரிமாறும் அளவு: மூன்று நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (1 vote)

 

தயிர் - இரண்டு கப்
சீரகப் பொடி - ஒரு டீ ஸ்பூன்
ம. பொடி - ஒரு டீ ஸ்பூன்
உப்பு - ஒன்றரை டீ ஸ்பூன்
சி. வெங்காயம் - ஐந்து
பூண்டு - மூன்று பல்
வர மிளகாய் - மூன்று
ரீபைண்டு ஆயில் - ஒரு டேபிள் ஸ்பூன்
கடுகு & உளுந்து - தாளிக்க
கறிவேப்பிலை - ஒரு கொத்து


 

முதலில் தயிரில் சீரகப் பொடி, உப்பு, மஞ்சள் பொடி போட்டு மிக்ஸியில் ஒரு நிமிடம் அடித்துக் கொள்ளவும்.
வெங்காயம், பூண்டை மெலிதாக நீளமாக வெட்டிக் கொள்ளவும்.
அடுப்பில் வாணலியை வைத்து எண்ணை ஊற்றி உளுந்து,கிள்ளிய வரமிளகாய் போட்டு சிவந்ததும் கடுகு போட்டு வெடித்ததும் வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்கவும்.
நன்கு வதங்கியதும் கறிவேப்பிலை போட்டு மோரை ஊற்றவும்.
அடுப்பை சிம்மில் வைத்து நுரைத்து வந்ததும் அணைக்கவும். (கொதிக்க விடகூடாது)


மேலும் சில குறிப்புகள்