nafia fairness cream

Hi frenz

am very confused,please help.i have dark skin .i planned to buy nafia fairness magic cream(ultimate fairness cream).anyone used this cream before?how effective is this?shall i buy?want to improve to some extent(not fair)

செல்வி... இந்த க்ரீம்'லாம் உண்மையான்னு எனக்கு தெரியல. எதுவும் யாருக்கும் பலன் கொடுத்தும் நான் இதுவரை கண்டதில்லை. நீங்க சொல்றது ஹெர்பல்... விரும்பினா ட்ரை பண்ணுங்க. கூடவே ஒவ்வொரு க்ரீம் ஒவ்வொரு ஸ்கின்'கு பொருந்தும் ஒவ்வொரு ஸ்கின்க்கு ஒத்துவராது. அதனால் நீங்க வாங்க நினைக்கும் க்ரீம் பற்றி நீங்களே பயன்படுத்தி தான் முடிவெடுக்கணும்'னு எனக்கு தோணுது. தோழிகள் யாராவது சொல்றாங்களான்னு பார்ப்போம்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

செல்வி

எந்த க்ரீமும் தோலின் நிறத்தை மாற்றாது.. தயிரை தினமும் அப்ளை பண்ணுங்க.. முட்டை வெள்ளை கரு போடுங்க.. தக்காளி முகத்துக்கு நல்லது.. ஸ்கின்னை ஹெல்த்தியா வச்சுக்குங்க.. அது போதும்.. நீங்க கலரா இருந்து இப்போ கருப்பாயிருந்தால் க்ரீம் ஏதாவது பலன் கொடுக்கலாம்.. இல்லை நிறமே அது தான் அப்படினா க்ரீம் ஒன்னும் செய்யாது.. நிறம் ஒன்றும் அழகை நிர்ணயிப்பதில்லை..

வெயிலில் அதிகம் போகாதீங்க.தேவா குறிப்புகளை படிங்க

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

ஹாய் எனக்கும் சந்தேகம் தீர்த்து வையுங்கள்:
நான் இந்த தளத்தை முழுக்க பார்வை இட்டதில்,சில நேரங்களில் பழங்களையும்,சில நேரங்களில் பால்,தயிர்,வெள்ளரி,முட்டை,பாசி பருப்பு,கடலை மாவு பொடி,தேன்,கிளிசரின்,புதினா,மஞ்சள்,உருளை,இன்னும் நிறைய அழகு குறிப்புக்ள் உள்ளன்,எனக்கு வறண்ட சருமம்,இவற்றில் எதை உபயோகிப்பது,எதை விடுவது என்றே தெரியவில்லை,தினமும் ஏதாவது ஒன்றை மாறி மாறி அப்ளை பண்ணலாமா?இதனால் சருமம் பாதிக்குமா என்று யாராவது கூற முடியுமா?

எனக்கு முகம் கருமை,வறட்சி,சுருக்கம் எல்லாமே உள்ளது,என்னவெல்லாம் தினமும் அப்ளை பண்ணுவது யாராவது கூறுங்கள்

மஞ்சு ரொம்ப குழம்பிப் போயிருக்கீங்க மற்றும் ரொம்ப அவசரமா எதெதுவோ ட்ரை பண்ரீங்கன்னு நினைக்கிறேன்..நல்ல பியூடீஷியனை பார்த்துட்டு அதுக்கு தகுந்த படி ஹெர்பலாவே எதாவது ட்ரீட்மென்ட் முறையா பண்ணுங்க போதும்னு நினைக்கிறேன்..இருக்கிறதை கெடுத்துக்காதீங்க முகமாச்சே

மேலும் சில பதிவுகள்