தொண்டையில் புண்

எனக்கு 1 வாரமாக வறட்டு இருமல் உள்ளது, இப்பொழுது இருமல் கொஞ்சம் சரியாகிவிட்டது, இருந்தாலும் இருமி இருமி தொண்டையில் புண்ணாகிவிட்டது,இப்பொழுது படுத்தால் குமட்டிக்கொண்டு இருமல் வருகிறது, இருமல் நிற்கவே இல்லை, புண்ணான இடத்தில் குத்திக்கொண்டே இருக்கிறது. யாராவது உங்களுக்கு தெரிந்த வீட்டு வைத்தியத்தை சொல்லுங்கள்.

ஹாய் ஹேமி, எப்படியிருக்கீங்க? எங்களை ஞாபகம் வச்சிருக்கீங்களா?அம்மா எப்படியிருக்காங்க? சிங்கை வந்துட்டீங்களா? தொண்டை புண்ணுக்கு கைகண்ட வைத்தியம் நான் அனுபவத்தில் கண்டது இரவு தூங்க போவதற்கு முன்பு மிளகை தூளாக்கி பாலில் சிறிது மஞ்சள் தூளுடன் சேர்த்து குடித்தால் ஒருவாரத்தில் குணமாகும்.இந்த வைத்தியம் தொண்டை சம்பந்தப்பட்ட அனைத்து பிரச்சனைகளுக்கும் பொருந்தும். மிக மிக அற்புதமான வரப்பிரசாதம் மிளகு. இதை முயற்சி செய்துவிட்டு மறக்காமல் சொல்லுங்கள் ஹேமி.

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

nallamilahu podiudan honey mix chaithu chappittal irumal sariyahum.3 neram chappidavum

உங்கள் பதிலுக்கு நன்றி, நேற்றிலிருந்து நீங்கள் சொன்னமாதிரி கடைபிடித்து வருகிறேன், இன்று ஓரளவு பரவாயில்லை, அம்மா நல்லாருக்காங்க, ஆமாம்பா சிங்கைலதான் இருக்கேன்,இப்ப அதிகமா அரட்டைக்கு வர முடிவதில்லை, கொஞ்சம் பிஸி.

உன் மீது மற்றவர்கள் பொறாமை படுகிறார்கள் என்றால் அதுவும் ஒருவித புகழ் மாலை தான்.

அன்புடன்
ஹேமா

நீங்கள் சொன்ன வைத்தியம் மிகவும் உதவியா இருந்ததுப்பா, நேற்று உடனே என் ஹப்பி போய் டாபர் ஹனி வாங்கி கொடுத்து குடிக்க சொல்லிட்டார். இப்பொழுது பரவாயில்லப்பா, நன்றி

உன் மீது மற்றவர்கள் பொறாமை படுகிறார்கள் என்றால் அதுவும் ஒருவித புகழ் மாலை தான்.

அன்புடன்
ஹேமா

மேலும் சில பதிவுகள்