மெகந்தி டிசைன் - 7

தேதி: February 28, 2011

5
Average: 4.4 (14 votes)

 

மெகந்தி கோன்

 

அரபிக் மெகந்தி டிசைனுக்கு போடுவது போல் உள்ளங்கையின் மேடான பகுதியில் ஒரு மொட்டும், அதன் மேல் ஆறு இதழ் கொண்ட பூ வடிவம் வரைய வேண்டும்.
முதல் இதழின் இடையில் வளைவு போன்ற டிசைன் வரைந்து அதன் உட்பகுதியில் கோடுகளால் நிரப்பவும். இந்த வளைவை தொடுவது போல் மேலும் ஒரு வளைவு வரைந்து அதனையும் கோடுகள் வரைந்து நிரப்பவும்.
இந்த இரண்டு வளைவுக்கும் சற்று தள்ளி இதேப்போல் மேலும் ஒரு வளைவு வரையவும். அதன் உள்ளே சிறுகோடு வரைந்து அக்கோட்டின் மேல் புள்ளிகள் வைத்து நிரப்பவும்.
வரைந்த வளைவின் மேல்முனையில் ஒரு மாங்காய் பிஞ்சு டிசைன் வரையவும். அதன் உள்ளே வட்டம் மற்றும் கோடுகளால் நிரப்பவும்.
மாங்காய் பிஞ்சின் ஓரத்தில் நான்கு பூ இதழ்களை வரையவும். அவ்விதழின் இருப்புறமும் கோடு போன்ற டிசைன் வரையவும்.
பூவின் நுனிப்பகுதியிலிருந்து மாங்காய் பிஞ்சு டிசைன் வரையவும், அதனை ஆள்காட்டி விரல் முழுவதும் தொடரவும்.
மற்ற விரலுக்கும், மாங்காய் பிஞ்சு போன்ற டிசைன் வரைந்து அதனுள் புள்ளிகள் மட்டும் வைத்து முடிக்கவும்.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

மேலும் சில கைவினைகள்


Comments

simply super desin.keep it up.with regards.g.gomathi.

சுகி மெகந்தி டிசைன் சிம்பிள் டிசைனா நல்லா இருக்கு. பேக்ரவுண்ட் ப்ளெயினா இருந்தா இன்னும் டிசைன் எடுப்பா தெரிஞ்சு இருக்கும் நினைக்கிறேன். தவறா நினைக்க வேண்டாம் சுகி.

சுகன் டிசைன் ரொம்ப அழகா இருக்குடா. ரொம்ப சிம்பிள் அதோடு தெளிவாக இருக்கு. சுகன் நீ லெமன் சுகர் கலந்து வைக்கிறியா இல்லையாடா. ஆரஞ்சு கலராவே இருக்கு அதான் கேட்டேன். ஒரு வேளை எடுத்து உடனே இந்த கலரில் தான் இருக்குமோ அடுத்தடுத்த நாள் தான் மாறும்.

அழகா இருக்கு

எனக்கும் மெகந்தி டிசைன் போட தெரியும் எப்படி அனுப்பனும்..என்று சொல்லுங்க தோழி

என்றும் அன்புடன்.....

•´ ¸.•*´¨) ¸.•*¨)
(¸.•´ (¸.•* குமாரி ♥♥♥...♪♪♪

டிசைன் வெளியிட்ட அட்மின் குழுவிற்கு மிக்க நன்றி

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

கோமதி - எப்பவும் போல உங்க வாழ்த்து எனக்கு கிடைச்சு இருக்கு. ரொம்ப நன்றி

வினோஜா - //பேக்ரவுண்ட் ப்ளெயினா இருந்தா இன்னும் டிசைன் எடுப்பா தெரிஞ்சு இருக்கும் நினைக்கிறேன்/// நானும் அதையே தான் நினைச்சேன், இதுல தப்பா நினைக்கறக்கு என்ன இருக்கு டா? அடுத்த முறை நல்ல பேக்ரவுண்ட் வெச்சு எடுக்கறேன்.

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

லெமன் இருந்தா தான் போடுவேன், இல்லைனா வெறும் சர்க்கரை தண்ணி வைப்பேன். இந்த முறை சரியா கலர் வரல, மருதாணி எடுத்த உடனே துணி துவச்சுட்டேன். அதான் கலர் போய்டுச்சு.. :)) :))

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

நீங்களும் இதே மாதிரி ஒரு ஒரு ஸ்டேப் ஹ போட்டோ எடுத்து, arusuvaiadmin@gmail.com அனுப்புங்க. அட்மின் குழு அதை வெளியிடுவாங்க. உங்க டிசைன் விரைவில் எதிர்பார்க்கிறேன்

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

இரண்டு நாள் முன் தான் நான் என் கைல டிசைன் போட்டேன் ,,இல்லனா நாளைக்கே அனுப்பி இருப்பேன் சுகந்தி ..

என்றும் அன்புடன்.....

•´ ¸.•*´¨) ¸.•*¨)
(¸.•´ (¸.•* குமாரி ♥♥♥...♪♪♪

அடுத்த முறை போடும் பொது, மறக்காம போட்டோ எடுத்து அனுப்புங்க. நங்கள் காத்து இருப்போம்...

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

சிம்பிளா அழகா இருக்கு,வாழ்த்துக்கள் சுகந்தி....

ரொம்ப அழக இருக்கு

டிசைன் அழகா இருக்கு சுகந்தி.

‍- இமா க்றிஸ்

simply superb design.... great....

Sukanya Muralidharan

இதுவும் கடந்து போகும்

Hi !superb designi'll try today

ஹலோ செல்லம்
என் பெயர் binta உள்ளது
உங்கள் சுயவிவர மிகவும் அழகாக ஏனெனில் நான், இன்று உங்கள் சுயவிவரத்தை பார்த்தேன் நீங்கள் தெரிந்து கொள்ள ஆர்வமாக பெற, இங்கே என் மின்னஞ்சல் முகவரி (bintajaafar@yahoo.com) நான் நீங்கள் என் புகைப்படங்கள் அனுப்ப மற்றும் இன்னும் சொல்ல என்று என்னை ஒரு மின்னஞ்சல் அனுப்ப தயவு செய்து உள்ளது என் சுய பற்றி,. தூரம் நினைவில், நிறம், மதம் அல்லது பழங்குடி பிரச்சினையில்லை ஆனால் விஷயங்களில் மிகவும் நேசிக்கிறேன் இல்லை (bintajaafar@yahoo.com) எனக்கு மின் அஞ்சல்.
binta முத்தம்
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

Hello Dear
My name is binta
I saw your profile today and get interested to know you, because you look very nice in your profile, here is my email address (bintajaafar@yahoo.com) please send me an email so that i will send you my photos and tell you more about my self,mail me at(bintajaafar@yahoo.com).Remember distance,color,religion or tribe does not matter but love matters a lot.
kiss binta