அருமையான ஓவியம், வண்ணம் தீட்டும் Starter Kit!

ஹாய் ப்ரண்ட்ஸ்,

எல்லோரும் நலம்தானே? தோழிகள், அதிலும் முக்கியமாக ஓவியம் வரைதல், பெயிண்டிங் வேலைப்பாடுகள் செய்யும் தோழிகள் எனக்கு ஒரு உதவி செய்ய வேண்டும்.

என் மகளுக்கு எப்பவும் ஓவியம் வரைதல், பெயிண்டிங் எல்லாம் ரொம்ப இஷ்டம். இப்ப அவளுக்கு கிட்டத்தட்ட 11 வயது!. அவளுக்கு ஒரு நல்ல ஓவிய வண்ணங்கள் கொண்ட ஸ்டார்டட் கிட் ஒன்னு வாங்கி கொடுக்கலாமென்று நினைத்துக்கொண்டு இருக்கேன்.

என்ன ப்ராண்ட், எப்படிப்பட்ட கிட் வாங்க வேண்டும் என்று அனுபவம் உள்ள தோழிகள் தங்களுக்கு தெரிந்தவற்றை கொஞ்சம் பகிர்ந்துகொள்ளுங்களேன். இதில், இரண்டு முக்கியமான விஷயங்கள் ‍
1. இங்கே US-ல் கிடைப்பதாக இருந்தால் ரொம்ப நல்லது, ஏனென்றால் உடனே கடைக்கு சென்று வாங்கிவிட வசதி! :)
2. இந்த வயது குழந்தைக்கு ஏற்றதாக உள்ள ப்ராடக்ட்டை சொல்லுங்கள். கூடவே வேறு என்ன மாதிரி ஐய்ட்டம்ஸ் வாங்கவேண்டும் என்றும் சொல்லுங்கள்.

இங்கே Hobby Lobby, Joann போன்ற கடைக்கு சென்று பார்த்தால், ஏகப்பட்டது இருக்கிறது. அதான் ஒரே குழப்பம். உதவுவீர்களா?! நன்றி!

(கொஞ்சம் நல்ல டிபரண்டான செட்டாக இருந்தால் நலம். ஏனென்றால் ஏற்கனவே நிறைய மார்க்கர்ஸ் & கலரிங் செட் வைத்து இருக்கிறாள்.)

அன்புடன்
சுஸ்ரீ

சுஸ்ரீ எப்படி இருக்கீங்க? மகளுக்கு பிறந்த நாள் வருதா??
இந்த மாதிரி கிராஃட் ஐட்டம்ஸ் எல்லாம் Michaels- ல கிடைக்கும்.இங்கே ரொம்ப நல்லா இருக்கும் நான் அங்கே தான் வாங்குவேன். மற்ற இடமெல்லாம் என்னை பொறுத்தவரை இதற்கு அடுத்து தான். நீங்க போய் பார்த்து உங்களுக்கு பிடிச்ச, வீட்டில் இல்லாத பொருளை வாங்கலாம்.

Check it out...
http://www.michaels.com/

உமா இது அநியாயம் அக்குருமம்... இது ஆண்டவனுக்கே அடுக்காது...
நாங்க எல்லாம் உங்களை எவளோ மாசமா தேடறோம் தெரியுமா? யாருக்குமே பதில் தராம இப்ப திடிருன்னு சுஸ்ரீ க்கு மட்டும் பத்தி தரத, எங்கனால எப்படி தாங்க முடியும்... :)) :)) :)) அம்மே அம்ம்மே

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

michaels மட்டும் இல்லங்க hobbylobby,joann -யும் தான்.ட்ரை பன்னிப்பாருங்க. முதழில் ,உங்க பொண்ணுக்கு எந்த medium ஆரம்பிக்கப்போரீங்கன்னு முடிவு பன்னுங்க.பென்சிலா,ஆயிலா,ஆக்ரலிக்கா- ந்னு முடிவு பன்னி சொல்லுங்க.இந்த வயதுக்கு முதழில் பென்சில் ட்ராயிங் பெஸ்ட்.அதில் ஷெட்ஸ் கற்றுக்கொள்ளட்டும்.அதற்கு நிரைய புத்தகம் உள்ள்து.வாழ்த்துக்கள் உங்கள் மகளுக்கு.

hi

ஹாய் உமா,
எப்படி இருக்கிங்க? ரோஹித் நலமா?

உங்களுக்கு 100 வயசு உமா. இப்பதான் ஒரு வாரம் முன்னாடி எதோ வொர்க் அவுட் பத்தி நினைச்சிட்டு இருக்கும்போது உங்களை பத்தி நினைச்சுகிட்டேன்.
நிஜமாவே ஆனந்த ஆச்சரியம்தான் போங்க! ரொம்ப நாள் கழித்து நீங்க வந்து பதில் போட்டதில் + என் மகளோட பிறந்தநாளை தெரிந்துகொண்டதில்! :)

ஆமாம், வரும் வாரம் அவளுக்கு பர்த்டே வருது உமா. அதான் எதாவது சர்ப்பிரைசா வாங்கலாம்னு. நிச்சயம் Michaels‍ ஒரு விஸிட் அடிக்கிறேன். இங்க பக்கத்திலே இருக்கிற ஹாலி லாபி மட்டும் போய் பார்த்துட்டு வந்தேன். எங்க, எதிலிருந்து ஆரம்பிக்க என்று ஒன்னும் புரியலை! :)

(பி.கு. சுகந்தி, நலமா?! நான் வேற புகையை ரொம்ப கிளப்பி விட்டுறலையே?!! ;))

அன்புடன்
சுஸ்ரீ

ஹாய் ச‌ஹேலி,

உங்க பேரை சரியா சொன்னேனான்னு தெரியலை. இல்லாத பட்சத்தில் ஸாரி!. உங்களோட பதிலுக்கு மிக்க நன்றி!

ஹாபி லாபி விஸிட் பண்ணேன். எனக்கு ஆக்சுவலா, நிறைய டைப்ஸ் ஆஃப் பெயிண்டிங் இருக்கிறதுனால.... எங்கே எதிலிருந்து அவளுக்கு ஆரம்பிக்கலாம் என்பதில்தான் ஒரே குழப்பம். உங்களோட சஜஷனுக்கும் ரொம்ப தேங்ஸ். எனக்கும் பென்சில் ஆர்ட் அவளுக்கு பிடிக்கும் என்றே தோன்றுகிறது. அவளுக்கு சின்ன பசங்களுக்கான 'How to Draw' என்ற மாதிரியான புக்ஸ் வாங்கி கொடுத்து இருக்கேன். அதை வைத்துக்கொண்டு அப்பப்ப நிறைய வரைந்து பார்ப்பாள். இப்ப இந்த டைப்புக்கு ஏற்ற மாதிரி, பென்சில் செட் வாங்கிக்கலாமா? நான் இந்த கடைகளுக்கு எல்லாம் மீண்டும் ஒரு முறை விஸிட் அடித்து பார்த்தால் எதாவது நல்லதா கிடைக்கும் என்றே நம்புகிறேன்.

மீண்டும் ஒரு முறை உங்க பதிவிற்கும், மகளுக்கான வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி!

அன்புடன்
சுஸ்ரீ

hi,susri.நார்மல் hb பென்சிலே போதும்.கலர்புல்லாக வேண்டும் என்றால் fabercastell or steadler பென்சில் வாங்குங்கள்,அதில் வாட்டர் கலர் பென்சில் வாங்கினால் ச்ட்ரொக் மற்றும் ஸேட்ஸ்,இரண்டும் செய்யாலாம்.ஆனால் வாட்டர் கலராக பயன்படுத்தும்போது,நீரில் அப்படியே முக்காதீங்க.லைட்டா brush ஜ நீரில் தொட்டு பென்சிலில் தடவி வரையவும்.இங்கே எனது pencil shading paintingஐ காட்டலாம் என்ரால் லின்க் தரகூடாது.நீங்க எப்போ வலைக்கு வருவீர்கள் என்று சொல்லுங்கள்,அதே நேரம் நானும் வந்து காட்டுகிரேன்.உடனே அழித்து விடலாம். சிறிது நாள் கழித்து அக்ரலிக் மற்றும் ஆயில் முறையாய் ஆரம்பிக்கலாம்.பக்கத்தில் அர்ட் டீச்சர் இல்லையா,இருந்தால் ச்ட்ரொக் கற்றுக்கொள்ள சுலபமாக இருக்குமே?.

hi

ஹாய் Saheli

மீண்டும் உங்க பதிலுக்கு நன்றி. நீங்க சொன்ன ப்ராண்ட்ஸ் குறித்துக்கொண்டேன். நாளை சென்று மைக்கேல்ஸ்ல பார்க்கலாம்னு இருக்கேன். இந்த ப்ராண்ட் அங்க கிடைக்கும்தானே?! சொல்லுங்க, இல்லைன்னா ஹாபி லாபில ட்ரை பண்ணறேன்.

அப்புறம் நான் வரும் நேரம் என்றால், யூஷுவலா, லன்ச் டைமில் ஒரு விஸிட் அடிப்பேன். அதுபோக எதாவது கேள்வி போட்டு இருந்தால், அதற்கு எதாவது பதில் இருக்கா என்று செக் பண்ண ஆபிஸ் விட்டு கிளம்பரதுக்கு முன்னாடி கொஞ்சம் எட்டிப்பார்ப்பேன். (இப்ப எனக்கு மார்ச் 1st, 4:15 p.m. ) அப்ப நாளை காலை ஒரு 11 மணிக்கு வரப்பார்க்கிறேன். நீங்க அப்ப பதிவு போடுங்க. நான் லிங்க் நோட் பண்ணதும் நீங்க அழித்துவிடலாம்.

ஆர்ட் க்ளாஸ், ப‌க்க‌த்தில‌ ந‌ல்ல‌ டீச்ச‌ரா பார்த்துட்டு இருக்கேன். நான் தேடுவ‌து போல‌ அமைந்தால் க‌ட்டாய‌ம் க்ளாஸ் சேர்த்துவிட‌ ஐடியா இருக்கு! அவ‌ளிட‌ம் இருக்கும் ந‌ல்ல‌ திற‌மையை வ‌ள‌ர்த்துக்கொள்ள‌ ஊக்க‌ம‌ளிக்க‌வேண்டுமென்று நினைத்திருக்கிறேன். ஓக்கே, அப்ப நாளை சந்திக்கலாம். நன்றி!

அன்புடன்
சுஸ்ரீ

வந்துட்டீங்களா susri

hi

ஆமாம் saheli, வந்துட்டேன்... :)

அன்புடன்
சுஸ்ரீ

மேலும் சில பதிவுகள்