புளித்த கீரை (கோங்கூரா) கடைசல்

தேதி: May 8, 2006

பரிமாறும் அளவு: நான்கு நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

புளித்த கீரை - ஒரு கட்டு
மஞ்சள் பொடி - ஒரு டீ ஸ்பூன்
பொடியாக நறுக்கிய வெங்காயம் - ஒன்று
கடுகு - தாளிக்க
வர மிளகாய் - ஐந்து
சீரகம் - ஒரு டேபிள் ஸ்பூன்
எண்ணை - மூன்று டேபிள் ஸ்பூன்
உப்பு - ஒன்றரை டீ ஸ்பூன்


 

முதலில் கீரை இலையை தனி தனியாக எடுத்து அதில் உள்ள நாரை நீக்கி சுத்தம் செய்யவும்.
குக்கரில் ஒன்றரை டம்ளர் தண்ணீர் விட்டு கீரை, மஞ்சள் பொடி சேர்த்து வேக வைக்க வேன்டும்.
ஒரு விசில் வந்ததும் இறக்கி நீரை வடித்து விடவும்.
பிறகு அதில் அரை டம்ளர் தண்ணீர் விட்டு, தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக மசிக்கவும்.
அடுப்பில் வணலியை வைத்து கடுகு, வர மிளகாய், சீரகம் தாளித்து பிறகு வெங்காயம் சேர்த்து வதக்கி, கீரைக் கடைசலை ஊற்றி சுருள கிண்டவும்.


இதை சாதத்தில் போட்டு நெய் சேர்த்து சாப்பிட்டால் மிக சுவையாக இருக்கும்.

மேலும் சில குறிப்புகள்