கேரள சிக்கன் ப்ரை

தேதி: March 1, 2011

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.3 (21 votes)

 

சிக்கன் - அரைக் கிலோ
வெங்காயம் - ஒன்று (பெரியது)
குடைமிளகாய் - 2
பொடியாக நறுக்கிய பூண்டு - 2 தேக்கரண்டி
துருவிய இஞ்சி - 2 தேக்கரண்டி
மிளகாய் - 2 (நறுக்கியது)
முந்திரி பருப்பு - 10 எண்ணிக்கை
இஞ்சி, பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி
மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி
சக்தி கறி மசாலா தூள் - 1 1/2 தேக்கரண்டி
எலுமிச்சை பழம் - 1(சிறியது)
உப்பு - தேவைக்கு
சோயா சாஸ் - ஒரு மூடி
தக்காளி சாஸ் - ஒரு மூடி
அஜினமோட்டோ - ஒரு பின்ச்
கார்ன் ப்ளார் மாவு - ஒரு தேக்கரண்டி
ரெட் கலர் பொடி - சிறிது
எண்ணெய் - தேவையான அளவு


 

கோழியை கழுவி சுத்தம் செய்து வைத்துக் கொள்ளவும். குடைமிளகாய், பச்சை மிளகாய் நறுக்கி வைக்கவும். வெங்காயத்தை நான்கு துண்டுகளாக நறுக்கி பின் தனித்தனியாக பிரிக்கவும்
கோழியில் இஞ்சி பூண்டு விழுது, மிளகாய் தூள், கறி மசாலா தூள், கார்ன் ப்ளார், ரெட் கலர் பொடி, உப்பு, எலுமிச்சை சாறு போட்டு 2 மணி நேரம் ஊற வைக்கவும்.
அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி கோழியை போட்டு பொரித்து எடுக்கவும்
அதேப் போல் எல்லா கோழித்துண்டுகளையும் பொரித்து எடுத்துக் கொள்ளவும்.
பின் எண்ணெயை அடி கப்பி இல்லாமல் வடிக்கவும். வடித்த எண்ணெயை கடாயில் ஊற்றி முந்திரியை போட்டு வறுத்து தனியாக வைக்கவும். பின்னர் கடாயில் பூண்டு, இஞ்சி, வெங்காயம், மிளகாய், குடைமிளகாய் போட்டு வதக்கவும்.
அதனுடன் சோயா சாஸ், தக்காளி சாஸ், அஜினமோட்டோ போட்டு சிறிது நேரம் சிம்மில் வைத்து பின் பொரித்த கோழித்துண்டுகளை போட்டு ஒரு கிளறு கிளறி இறக்கவும்.
மல்லி இலை வறுத்த முந்திரி போட்டு பரிமாறவும். கேரளா சிக்கன் ரெடி


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

பாக்கவே கலர்புல்லா இருக்கு,சாப்பிடனும் போல இருக்கு புது புது ரெசெபிசா தரிங்க,வாழ்த்துக்கள் சீக்கிரமே செய்து பார்கிறேன் .

நல்ல குறிப்பு,படங்கள் நல்ல தெளிவா இருக்கு.வாழ்த்துக்கள்.

அஸ்ஸலாமு அலைக்கும் ஃபாத்தி அக்கா.
பார்க்கும் போதே சூப்பராக இருக்கு அக்கா...
செய்முறை விளக்கமும் படங்களும் மிகவும் அருமையாக உள்ளது.
வாழ்த்துக்கள்.

என்றும் அன்புடன்,
அப்சரா.

எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.

hai,
nalla oru vithyasamana chicken fry seithuparkanum.

Raihana

பாத்திமா மேடம் சூப்பர்!!! பார்க்கும் போதே சாப்பிடனும் போல இருக்கு வாழ்த்துக்கள்:)))

உன்னை போல பிறரையும் நேசி.

தொடரட்டும்.....

எனது குறிப்பைவெளியிட்ட அட்மின்குழுவினருக்கு நன்றி

கல்பனா முதல் ஆளாய் வந்து வாழ்த்து தெரிவிச்சதுக்கு நன்றி
சீக்கிரமே செய்துட்டு சொல்லுங்கள் வருகைக்கு நன்றி

ரீம் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி

வலைக்கும் சலாம்... அப்சரா நலமா?
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிமா

firdouse வருகைக்கு நன்றி செய்துபாருங்கள்

தேவிவருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி

சூப்பர் குறிப்பு..

பார்க்கவே டெலிசியஸ்,.. கண்டிப்பா செய்துடறேன் வாழ்த்துக்கள்

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

கலருக்கே சாப்பிடனும் போல தோணுதே.... சூப்பர் டிஷ்...

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

சலாம் மா..
ரொம்ப அழகா செய்து இருக்கீங்க...
சிக்கன் ஃப்ரயில் உங்களை அடித்துக் கொள்ள முடியாது...
அவ்வளவு அழகாக செய்றீங்க..........
வாழ்துக்கள்...

ஹசீன்

பாக்கவே கலர்புல்லா சூப்பரா இருக்கு வாழ்த்துக்கள் ஃபாத்திமா....

வாவ் பாக்கவே சூப்பரா இருக்கு உங்க வீட்டுக்கு வரனுங்கிர ஆசையை அதிக படுத்திக்கிட்டே இருக்கீங்க ...... வாழ்த்துக்கள்....

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

ரம்யா கண்டிப்பா செய்துடுங்க சரியா வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி

சுகி வருகைக்கு நன்றிடா

வலைக்கும்சலாம்.....
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிடா

சுமதி வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி

ஸ்வர்ணா வாங்க எதிர்பார்க்குறேன் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி

அம்மா, எப்படியிருக்கீங்க? முதல்ல என்னை மன்னிக்கனும். ரொம்ப நாள் கழிச்சு உங்க குறிப்புக்கு பின்னூட்டம் தர்றேன். கேரள சிக்கன் ரொம்ப சூப்பர் மா. உங்க நான் வெஜ் குறிப்புகள் அத்தனையுமே சூப்பர் தான். புதுமையான, விளக்கமான,எளிமையான,ருசியான செய்முறை குறிப்புகள். வெற்றிகரமாக தொடரட்டும் உங்கள் சமையல் யுத்தம் :) வாழ்த்துக்கள் மா :)

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

பாத்திமா... தொடர்ந்து வித்தியாசமான குறிப்புகளா கொடுத்து அசத்தறீங்க. வாழ்த்துக்கள்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

பார்க்கும் போதே நாக்குல தண்ணி வருதே. இன்னிக்கு try பண்ணி பார்த்துட்டு சொல்லறேன். thank u for ur delicious recipe.

Rani Antony

Be Happy Always.......

கலப்பா எப்படி இருக்கே குட்டீஸ் எப்படி இருக்காங்க? வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிடா பேத்தி ஊர்ல இருந்து வந்து இருக்கா அதான் லேட்டான பதில் சாரி

வனி வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி
ராணி வருகைக்கு மிக்க நன்றி

hi fathima akka....itha try pani paathen...veetla yellarum orey paaratu!!!romba nalla irunthichi....really superb!

supera eruku

ஹாய் அக்கா உங்களுடை இந்த டிஸ்ஸ பாக்கவே நாக்குல எச்சில் ஊருது இத படிக்கும் போது அப்படியே சாப்பிட்ட மாதிரி ஒரு பீலிங் ரொம்ப நன்றி.

உப்பிட்டவரை உள்ளவுநினை

Enaku piditha chicken arumayaga seithu kaatiyathirku nanri. Arusuvai parthu naan seitha Samayall athigam muthanmurayaga karuthu therivikka vanthullen I like arusuvai.com. Thank u arusuvai team...