கத்தரிக்காய் சட்னி

தேதி: March 2, 2011

பரிமாறும் அளவு: 4 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

2
Average: 1.7 (3 votes)

 

கத்தரிக்காய் கால் கிலோ
பெரிய வெங்காயம் 3
தக்காளி 3
மிளகா வத்தல் 8
எண்ணை 2 ஸ்பூன்
உப்பு தேவையான அளவு
கடுகு, உளுத்தம் பருப்பு அரை, அரை டீஸ்பூன்


 

கத்தரிக்கா, வெங்காயம், தக்காளியை பொடிசாக நறுக்கவும்.
வாணலியில் எண்ணை ஊற்றி முதலில் மிளகாயை வறுத்துபிறகு காய்களையும் சேர்த்து சுருள வதக்கவும்.
நன்கு ஆறியதும் உப்பு சேர்த்து மிக்சியில் அரைக்கவும்.
கடுகு, உளுத்தம் பருப்பு தாளிக்கவும்.


இந்த சட்னி சூடுசாதமுடன் பிசைந்து சாப்பிடவும், இட்லி தோசையுடன் தொட்டுக்கொள்ளவும் சுவையாக இருக்கும்.

மேலும் சில குறிப்புகள்