சுண்டைக்காய் வத்தக்குழம்பு

தேதி: March 2, 2011

பரிமாறும் அளவு: 4 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

3
Average: 3 (1 vote)

 

சுண்டைக்காய் வற்றல் அரை கப்
குழம்பு மிளகாப்பொடி ஒரு கரண்டி
புளி எலுமிச்சை அளவு
வெந்தயம் அரை டீஸ்பூன்
கடுகு அரை டீஸ்பூன்
பெருங்காயம் ஒரு ஸ்பூன்
கறிவேப்பிலை ஒரு ஆர்க்
உப்பு தேவையான அளவு.
நல்லெண்ணை ஒரு குழிக்கரண்டி


 

வாணலியில் எண்ணை ஊற்றி, கடுகு, வெந்தயம், கறிவேப்பிலை தாளிக்கவும்.
நன்கு பொரிந்ததும் சுண்டைக்காய் சேர்த்து வறுக்கவும்.
நன்கு பொறிந்ததும்புளியை கெட்டியாக கரைத்து விடவும்.
குழம்பு மிளகா பொடியை சிறிதளவு நீரில் கரைத்து சேர்க்கவும்,
எல்லாம் சேர்ந்து புளிவாசனைபோக கொதித்ததும் உப்பு சேர்த்து 5 நிமிடங்களுக்கு கொதிக்கவிட்டு இறக்கவும்.


சுண்டைக்காய் கால்சியம் சத்து நிறைந்தது. பெண்களுக்கு சத்து நிறைந்த குழம்பு இது. சூடான சாதத்துடன் பிசைந்து சாப்பிட மிகவும் நன்றாக இருக்கும்.

மேலும் சில குறிப்புகள்


Comments

கோமு... இன்னும் ஒரு தடவை ப்ரூஃப் பார்த்துருங்க. ஸ்பேஸ் அட்ஜஸ்ட் பண்ணலாம் போல இருக்கு. ;)
அன்புடன் இமா

‍- இமா க்றிஸ்

யோசனைக்கு நன்றிம்மா.