காய்கறி பொங்கல்

தேதி: March 2, 2011

பரிமாறும் அளவு: 7 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (1 vote)

 

பச்சரிசி ஒரு கப்
பயத்தம் பருப்பு அரை கப்
பொடிசாக நறுக்கிய காய்கறிக்கலவை. ஒருகப்
(உருளை,கேரட்,குடைமிளகா,பட்டாணி,தக்காளி, வெங்காயம், பீன்ஸ்)
கறி வேப்பிலை, கொத்தமல்லி சிறிதளவு.
நெய் ஒரு கரண்டி
ஜீரகம் மிளகு அரை டீஸ்பூன்+அரைடீஸ்பூன்
பட்டை 2
லவங்க், ஏலம் 2+3
உப்பு தேவையான அளவு


 

அரிசி பருப்பை கலந்து அலம்பி ஒன்றுக்கு மூணு பங்கு தண்ணீர் ஊற்றி உதிரி சாதமாக வடிக்கவும்.
வாணலியில் நெய் ஊற்றி,ஜீரகம்,மிளகு, ஏலம், லவங்கம், பட்டை தாளிக்கவும்.
எல்லாம் நன்கு பொரிந்ததும் காய்களைச்சேர்த்து நன்கு வதக்கவும். நன்கு சுறுள
வதங்கியதும் உப்பு சேர்க்கவும்.
வடித்த சாதத்தையும் சேர்த்து நன்கு கல்க்கவும்.


எல்லா காய்களும் சேர்ப்பதால் நல்ல சத்துள்ள உணவு இது.

மேலும் சில குறிப்புகள்


Comments

கோமு மேம் நீங்க வித்தியாசமான டிஷ்ஷா கொடுத்து அசத்துறீங்க.படங்களுடன் கூடிய டிஷ் அனுப்புங்கள்.காய்கறி பொங்கல் செய்வது ரொம்ப ஈஸியா இருக்கு.டிரை பண்ணி பார்க்கிறேன் மேம்.

Expectation lead to Disappointment