ஜிகர்தண்டா சமையல் குறிப்பு - படங்களுடன் - 18272 | அறுசுவை


ஜிகர்தண்டா

வழங்கியவர் : Vani Vasu
தேதி : புதன், 02/03/2011 - 16:45
ஆயத்த நேரம் :
சமைக்கும் நேரம் :
பரிமாறும் அளவு :
3.933335
15 votes
Your rating: None

 

  • கடல் பாசி - சிறிது (அ) பாதான் பிசின் - கால் தேக்கரண்டி
  • சர்க்கரை - தேவைக்கு
  • பால் - 3 கப்
  • ரோஸ் (அ) நன்னாரி சிரப் - ஒரு மேசைக்கரண்டி
  • ஃப்ரெஷ் க்ரீம் - ஒரு மேசைக்கரண்டி [விரும்பினால்]
  • ஐஸ்க்ரீம் - ஒரு ஸ்கூப்
  • நட்ஸ் - சிறிது பொடியாக நறுக்கியது [விரும்பினால்]

 

பாதாம் பிசின் பயன்படுத்தி செய்வதாக இருந்தால், பாதாம் பிசினை நன்றாக கழுவி நீரில் 8 மணி நேரம் ஊற வைக்கவும்.

கடல் பாசி கொண்டு செய்வதாக இருந்தால், கடல் பாசியை வழக்கம் போல் தயார் செய்து செட் ஆகும் போது கிளறி விடவும். அப்படி செய்து ஃப்ரிட்ஜில் வைத்தால் தூள் தூளாக வரும், நறுக்கும் வேலை இருக்காது. இதை ஃப்ரிட்ஜில் வைக்கவும்.

பாலை திக்காக காய்ச்சவும். இதனுடன் சர்க்கரை சேர்த்து கரைந்ததும் ஃபிரிட்ஜில் வைக்கவும்.

ஒரு கப்பில் ஒரு மேசைக்கரண்டி கடல் பாசி போடவும். அதன் மேல் ரோஸ் (அ) நன்னாரி சிரப் ஊற்றவும். மேலே ஃப்ரெஷ் க்ரீம் சேர்க்கவும்.

இதில் குளிர்ந்த பால் ஊற்றி, மேலே ஒரு ஸ்கூப் ஐஸ்க்ரீம் போட்டு கொடுக்கவும்.

பாதாம் பிசின் என்றால் ஊற வைத்தது ஜெல்லி போல் மாறி படத்தில் உள்ளது போல் இருக்கும்.

கப்பில் ஊறிய பாதாம் பிசின் போட்டு அதன் மேல் நன்னாரி சிரப் ஊற்றவும்.

இதில் குளிர்ந்த பால் ஊற்றி, மேலே ஒரு ஸ்கூப் ஐஸ்க்ரீம் போட்டு கொடுக்கவும். சுவையான குளிர்ச்சியான ஜிகர்தண்டா ரெடி.

கடல் பாசியில் ரோஸ் சிரப் சேர்த்து செய்தும் சேர்க்கலாம். விரும்பினால் ஜவ்வரிசியை ஊற வைத்து பாலில் வேக வைத்து சேர்க்கலாம். முந்திரி பாதாம் போன்றவை பொடியாக நறுக்கி சேர்க்கலாம். இன்னும் சுவை கூடும். கடல் பாசி, பாதாம் பிசின், நன்னாரி சிரப், ரோஸ் சிரப் அனைத்துமே உடலுக்கு குளிர்ச்சி தரும். கோடைக்கு ஏற்ற பானம்.

இந்தப் பிரிவில் மேலும் சில குறிப்புகள்..வனி

வாவ்,படம் வேற போட்டு ஆசையை தூண்டிவிட்டீங்க,கடல்பாசி வெச்சாவது செய்றேன்,எனக்கு பாதாம் பிசின் தான் பிடிக்கும் ஆனா இங்க கிடைக்காது.

வனி

வனி ஜிகர்தண்டா சூப்பர். கோடைக்காலம் வந்துட்டு உங்க குறிப்ப பார்த்தாலே தெரியுது. இதுவரை ஜிகர்தண்டா சாப்பிட்டது இல்லை. விரைவில் செய்து பார்த்து சொல்வேன்.

ஹாய் வனி..,

ஹாய் வனி நலமா..?
இந்த ஜிகர்தாண்டாவை பற்றி கேள்விபட்டதுண்டு.
அதை ஒரு நாள் டீவியுலும் காண்பித்தார்கள்.
ஆனால் செய்முறை சீக்ரெட் என்று சொல்லிவிட்டார்கள்.
அதை எப்படியாவது சாப்பிட்டு பார்க்க வேண்டும் என்று ஆசை.
இந்த முறையில் முடிந்த போது செய்து பார்க்க வேண்டியதுதான்.
நீங்க வேற இன்னும் ஆசையை அதிகமாக்கிட்டீங்கல்ல....
இந்த குறிப்பை பகிர்ந்து கொண்டதர்க்கு மிகவும் நன்றி வனி.
வாழ்த்துக்கள்.

என்றும் அன்புடன்,
அப்சரா.

எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.

வனி

வனி

முகப்பில் பார்த்ததுமே நினைத்தேன். நீங்களா தன் இருக்கும்னு.. வாழ்த்துக்கள்

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

வாவ்... ஜில் ஜில் ஜிகர்தண்டா!!

வனி,
உங்க ஜிகர்தண்டா, சும்மா ஜில் ஜில் ஜிகர்தண்டாவா சூப்பரா இருக்கு! :) அப்படியே எடுத்து சாப்பிடனும் போல தோனுது!. ஆனால், இப்பதான் த்ரோட் இன்பெக்ஷனுக்கு மெடிசின் எல்லாம் எடுத்து சரியாகி இருக்கு. தண்ணி எல்லாம் கூட சூடாதான் குடிச்சிட்டு இருக்கேன்.
அதனால் என்ன, இதோ இங்கயும் சம்மர் வந்துட்டே இருக்கு. அப்ப கட்டாயம் ட்ரை பண்ணிடறேன். புதுமையான குறிப்புக்கு வாழ்த்துக்கள், நன்றி!

அன்புடன்
சுஸ்ரீ

ஹாய் வனி அக்கா .... !!

ஹாய் வனி அக்கா .... நலமா ?? வர இருக்கும் கோடை காலத்திற்கு ஏற்ற ரெசிபி .. நிச்சயம் செய்துவிடனும் ... வாழ்த்துக்கள் ..!!

Express Yourself .....

வனி அக்கா

ஹாய் வனி அக்கா...
வாவ்.. சுப்பெர்ப் ஜிகர்தண்டா....
கண்டிப்பாக செய்துப் பார்பேன்...
வாழ்த்துகள்.....

ஹசீன்

வனி,

நீங்க பண்ணி இருக்கறதா பாத்தா ஆசையா இருக்கு. ஆனால் எனக்கு பாதாம் பிசின், கடல் பாசி ரெண்டும் எப்படி பண்ணனும்/எங்க கிடைக்கும் ன்னு தெரியலையே :) :). உங்களுக்கு தெருஞ்சா சொல்லுங்க. எங்க வீட்டு குட்டீஸ்க்கு இதுன்னா ரொம்ப இஷ்டம்..

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

வனி

ஹாய் வனி சூப்பர் ஜிகர்தண்டா ஞாபகப்படுத்திட்டிங்களே...... வாழ்த்துக்கள்

வனிக்கா

வாவ் வனிக்கா சூப்பரா இருக்கு இப்பவே சாப்பிடனும்னு ஆசையா இருக்கு. ஆனால் எனக்கும் பாதாம் பிசின், கடல் பாசி ரெண்டும் எப்படி பண்ணனும்/எங்க கிடைக்கும் ன்னு தெரியலை...அதனால நா இந்தியா வரும்போது உங்க வீட்டுக்கு வந்துடுறேன்,எனக்கு செய்து குடுத்துருங்க...