கீரை காய்கறி கூட்டு

தேதி: March 3, 2011

பரிமாறும் அளவு: 4 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

பாலக் கீரை----------- ஒருகட்டு
பாசிப்பருப்பு----------- அரை கப்
பொடிசாக நறுக்கிய காய்கறி கலவை----------1கப்
துருவிய தேங்காய்--------------- அரை கப்
மஞ்சப்பொடி------------------- அரைடீஸ்பூன்
கடுகு------------------------ அரை டீஸ்பூன்
உளுந்து--------------------- அரை ஸ்பூன்
மிளகாய்-------------------- 5
கறி வேப்பிலை------------- சிறிதளவு
நெய்------------------- ஒரு ஸ்பூன்
உப்பு---------------- தேவையான அளவு


 

கடாயில் தண்ணீர் கொதிக்க வைத்து, பருப்பு, பொடிசாக நறுக்கிய கீரை, காய்களைச்சேர்த்து, மஞ்சப்பொடி சேர்த்து குழைய வேக விடவும்.
நன்கு வெந்ததும் உப்பு சேர்த்து 5 நிமிடங்கள் கொதிக்க விட்டு இறக்கவும்.
நெய்யில், கடுகு, உளுந்து, கறிவேப்பிலை தேங்காய் மிளகாய் தாளிக்கவும்.


கீரை எல்லா காய் வகை களும் சேர்ப்பதால் மிகவும் சத்தான கூட்டு இது.

மேலும் சில குறிப்புகள்