ப்ரெட் தயிர் வடை

தேதி: March 3, 2011

பரிமாறும் அளவு: 4 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

3
Average: 3 (2 votes)

 

ப்ரெட் ஸ்லைஸ்-- 8
தயிர்-- ஒருகப்
பால்-- அரை கப்
துருவிய தேங்காய் பூ-- ஒரு மூடி
இஞ்சி, பச்சைமிளகாய்-- சிறியதுண்டு& 3
மிளகாய்ப்பொடி-- அரைடீஸ்பூன்
ஜீரகப்பொடி-- அரை டீஸ்பூன்
கொத்துமல்லித்தழை -- ஒரு கொத்து
உப்பு-- தேவையான அளவு


 

ப்ரெட் ஸ்லைசின் ஓரங்களை நீக்கி விடவும்.
ப்ரெட்டை 2 நிமிடங்களுக்கு தண்ணீரில் ஊற வைக்கவும்.
தேங்காய், மிளகாய், இஞ்சி உப்பு சேர்த்து மிக்சியில் நைசாக அரைக்கவும்.
அரைத்தவிழுதில் பாதியை ஊறவைத்தப்ரெட்டுடன் சேர்த்துப்பிசைந்து வடைகளாக தட்டி வைக்கவும்.
மீதி விழுதை பால், தயிர் கலவையில் கலந்து, தட்டி வைத்திருக்கும் வடைகளைப்போடவும்.
மேலாக மிளகாய்ப்பொடி, ஜீரகப்பொடி,கொத்துமல்லி இலைகளைத்தூவவும்.


புரத சத்தும் கொழுப்பும் சேர்த்த இந்த ப்ரெட் தயிர்வடை வளரும் குழந்தைகளுக்கு ஏற்ற,உணவாகும்.

மேலும் சில குறிப்புகள்