பீட்ரூட் ரசம்

தேதி: May 9, 2006

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

பீட்ரூட் - 2
ரசம் பொடி - 2 தேக்கரண்டி
தக்காளி - ஒன்று
பூண்டு - 4 பல்
கொத்தமல்லி - சிறிது
கறிவேப்பிலை - சிறிது
பச்சை மிளகாய் - ஒன்று
பெருங்காயத் தூள் - சிட்டிகை
கடுகு - அரை தேக்கரண்டி
சீரகம் - அரை தேக்கரண்டி


 

பீட்ரூட்டை சிறு சிறுத் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். தண்ணீர் சேர்த்து குக்கரில் வேக வைக்கவும்.
பிறகு பீட்ரூட் தண்ணீரில் ரசம் பொடி, நறுக்கிய பச்சை மிளகாய், நறுக்கிய தக்காளி, பூண்டு, சேர்த்து கலந்து வைக்கவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, சீரகம் போட்டு தாளித்து, கறிவேப்பிலை போட்டு அதில் பீட்ரூட் கலவையை ஊற்றவும்.
கொதி வந்ததும் கொத்தமல்லி மற்றும் பெருங்காயம் போட்டு இறக்கவும்.


குழந்தைகள் விரும்பி உண்ணுவார்கள். உடலுக்கும் மிகவும் நல்லது.

மேலும் சில குறிப்புகள்


Comments

பீட்ரூட் ரசம் வித்தியாசமான ஐடியா... சுவையாக இருந்தது....

இப்படிக்கு,
சந்தனா

இப்படிக்கு,
சந்தனா