முட்டை பொரியல்

தேதி: March 5, 2011

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

2
Average: 2 (2 votes)

 

1. முட்டை - 5
2. சின்ன வெங்காயம் - 10
3. உப்பு - தேவைக்கு
4. எண்ணெய் - 1 மேஜைக்கரண்டி

வறுத்து பொடிக்க:

1. மிளகாய் வற்றல் - 2
2. மிளகு - 1/2 தேக்கரண்டி
3. சீரகம் - 1/2 தேக்கரண்டி
4. உளுந்து - 1 தேக்கரண்டி
5. எண்ணெய் - 1 தேக்கரண்டி


 

கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் வறுத்து பொடிக்க வேண்டியவற்றை வறுத்து உப்பு சேர்த்து மிக்ஸியில் பொடிக்கவும்.
முட்டை வேக வைத்து தோல் நீக்கவும். அதை 4 துண்டுகளாக வெட்டி வைக்கவும்.
சின்ன வெங்காயத்தை தோல் நீக்கி பொடியாக நறுக்கவும்.
கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கி, முட்டை சேர்த்து பொடித்த தூள் சேர்த்து வதக்கி எடுக்கவும்.


சின்ன வெங்காயம் சேர்த்து செய்வதால் சுவை கூடும்.

மேலும் சில குறிப்புகள்