ராஜ்மா சுண்டல்

தேதி: March 7, 2011

பரிமாறும் அளவு: 5 நபர்களுக்கு.

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

சிகப்பு ராஜ்மா-- ஒரு கப்
சமையல் சோடா-- அரை டீஸ்பூன்
பெருங்காயம்-- சிறிதளவு
மிளகா வத்தல்-- 3
தனியா-- ஒருஸ்பூன்
எண்ணை-- ஒருடேபிள் ஸ்பூன்
மஞ்சபொடி-- அரை டீஸ்பூன்
உப்பு-- தேவையான அளவு
கடுகு-- அரை டீஸ்பூன்
கறிவேப்பிலை-- சிறிதளவு


 

ராஜ்மாவை இரவே நன்கு அலம்பித்ண்ணீரும் சோடாமாவும் கலந்து ஊர வைக்கவும்.
மறு நாள் 4, 5 தடவை நன்கு கழுவி பிரஷர் பேனில் நன்கு குழைய வேக விட்டு தண்ணீரை வடிய வைக்கவும்.
வெரும் கடாயில் தனியா, மிளகா வத்தல், பெருங்காயம் சிவக்க வறுத்து பொடிக்கவும்.
கடாயில் எண்ணை ஊற்றி, கடுகு தாளித்து, வெந்து வடிய வைத்த ராஜ்மா, செய்து வைத்திருக்கும் பொடியைப்போட்டு நன்கு கிளறவும்.
மேலாக கருவேபிலை தூவி இறக்கவும்.


மிகவும் சத்தான சுண்டல்.

மேலும் சில குறிப்புகள்