ஸ்பெஷல் தேங்காய் சட்னி

தேதி: May 9, 2006

பரிமாறும் அளவு: நான்கு நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

தேங்காய் - அரை மூடி
பொட்டுக் கடலை - இரண்டு டேபிள் ஸ்பூன்
ப. மிளகாய் - மூன்று
பூண்டு பல் - ஒன்று
சி. வெங்காயம் - ஒன்று
இஞ்சி - மிக சிறிய துண்டு
உப்பு - ஒரு டீ ஸ்பூன்
எண்ணை - ஒரு டீ ஸ்பூன்
கடுகு & உளுந்து - ஒரு டேபிள் ஸ்பூன்
கறிவேப்பிலை - இரண்டு கொத்து


 

முதலில் தேங்காயை துருவி, அந்த துருவலுடன் பொட்டுக் கடலை, ப. மிளகாய், இஞ்சி, சி. வெங்காயம், பூண்டுப் பல், உப்பு சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும்.
ஒரு கிண்ணத்தில் அரைத்த சட்னியை கொட்டி அரை டம்ளர் தண்ணிர் ஊற்றி நன்கு கலக்கவும்.
அடுப்பில் வாணலியை வைத்து எண்ணை ஊற்றி கடுகு, உளுந்து போட்டு வெடித்ததும் கறிவேப்பிலை போட்டு சட்னியில் கொட்டி இறுக மூடி வைத்து ஐந்து நிமிடம் கழித்துத் திறந்து பரிமாறவும்.


மேலும் சில குறிப்புகள்