இனிப்பு காராமணி சுண்டல்

தேதி: March 9, 2011

பரிமாறும் அளவு: 6 நபர்களுக்கு.

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

Average: 4 (1 vote)

 

சிகப்பு காராமணி - ஒருகப்
வெல்லம் - ஒரு கப்
பல்,பல்லாக நறுக்கிய தேங்காய் - அரை கப்
ஏலப்பொடி - ஒரு டீஸ்பூன்
நெய் - ஒருஸ்பூன்


 

சிகப்பு காராமணியை லேசாக வறுத்து முதல் நாள் இரவே ஊறப்போடவும்.
மறு நாள் காராமணியை நன்கு, கழுவி குக்கரில் குழைய வேக விட்டு,தண்ணிரை வடியவைக்கவும்.
வெல்லத்தைகொஞ்சமாக தண்ணீரில் கரைய விட்டு கல் மண் போக வடிகட்டி கெட்டி பாகு காய்ச்சவும்.
நல்ல திக் பாகு வந்ததும் வெந்த காராமணி,தேங்காய்,ஏலம், நெய்சேர்த்து
சுருள கிளறி இறக்கவும்.


இந்தச்சுண்டல் அனைவருமே விரும்பி உண்பார்கள்.

மேலும் சில குறிப்புகள்