எவைகள் அதிகம் உண்ண வேண்டும் எவைகள் தவிர்க்க வேண்டும்

நான் திருமணம் ஆனவன், எங்களுக்கு குழந்தை பிறந்து 40௦ நாட்கள் ஆகிறது,
எவைகள் அதிகம் உன்ன வேண்டும் எவைகள் தவிர்க்க வேண்டும் என்பது எனது மனைவிக்கு சரியாக தெரியவில்லை, தோழிகளின் உதவியை நாடி இவன்.
Siva Lathika

நீங்கள் மீன் சாப்பிடுபவராக இருந்தால் பால்சுரா மீன் சாப்பிட சொல்லுங்கள் ..இதனால் பால் நன்கு சுரக்கும் ..(தாய்ப்பால் கொடுத்தால்)..நான் மீன் சாப்பிடமாட்டேன்....ஆனால் என் குழந்தைக்காக இதை சாப்பிட்டேன்.அப்புறம் குழந்தை பெற்றபிறகு பேறுகால லேகியம் என்று ஒன்று கொடுப்பார்கள்....அதை நாம் நாட்டுமருந்து கடையில் கேட்டால் கொடுப்பார்கள்....ஆட்டு ஈரல் சாப்பிடசொல்லுங்கள் ...என்னெனில் இழந்த ரேத்ததை ஈடுசெய்ய உதவும்...

நீங்கள் அவர்களிடம் பாசமாய் இருப்பது ரொம்ப முக்கியம்....என்னெனில் சிலருக்கு இந்த நேரத்தில் விரக்கதி வருவது சகஜம் ...அதனால்தான்....

நல்லது மட்டுமே நினையுங்கள் அடுத்தவர்க்கு ..நல்லதே நடக்கும் உங்களுக்கு ..

நாற்பது நாள் ஆகிவிட்டால் எப்போதும் போல சாப்பாடு சாப்பிடலாம்.பால் மதர்ஸ் ஹார்லிக்ஸ் போட்டு குடிக்கலாம்.வாயு அதிகமுள்ள பயறுகள்,கிழங்கு வகைகளை குறைத்து கொள்ளணும்,குழந்தைக்கு வயிற்றுவலியை உண்டாக்கும்.பூண்டு நிறைய சேர்த்துக்கலாம்.சளி பிடிக்காமல் பார்த்துக்கங்க.நான் வெஜ் சூப் செய்து குடிக்கலாம்.
மேலே யாரும் சமைக்கலாமில் சைடில் ஆரோக்கிய சமையல் என்றதலைப்பில் தாய்மார்களுக்கு என்று இருக்கு அதில் நிறைய குறிப்புகள் மூன்றாம் பக்கத்தில் இருக்கு பாருங்க.

nandri...

மேலும் சில பதிவுகள்