பீட்ரூட் சலாத்(சாலட்)

வழங்கியவர் : kalpana venkatesan
தேதி : வெள்ளி, 11/03/2011 - 19:40
ஆயத்த நேரம் :
சமைக்கும் நேரம் : 15 நிமிடம்
பரிமாறும் அளவு : 3
- பீட்ரூட் - 1
- பீன்ஸ் - 10
- உருளைக்கிழங்கு - 1 அல்லது 2
- கேரட் - 2
- வெங்காயம் - 1
- முட்டை - 1
- வினிகர் - 3 மேஜைகரண்டி
- மிளகுத்தூள் - 1 மேஜைகரண்டி
- உப்பு - தேவைக்கேற்ப
- * முதலில் பீட்ரூட்,கேரட்,உருளைக்கிழங்கை தோல் சீவிக்கொள்ளவும் ,வெங்காயத்தை பொடியாக நறுக்கவும்.
- * பின்பு பீட்ருட்,கேரட்,உருளைக்கிழங்கு,பீன்ஸ் முதலியவற்றை குக்கரில் போட்டு 3 அல்லது 4 விசில் வைத்து வேகவைத்து கொள்ளவும்
- * முட்டையை தனியே வேகவைத்து தோலுரித்து கொள்ளவும்.
- * பின்பு அவித்த காய்கறிகளை ஒன்றும் பாதியுமாக மசித்து கொள்ளவும்.
- * அதில் நறுக்கிய வெங்காயத்தை போட்டு, வினிகர் ஊற்றி உப்புத்தூள்,மிளகுத்தூள் சேர்த்து கடைசியாக முட்டையை நான்காக் கீறிப்போட்டு ஒரு கிளறு கிளறி சிறிது நேரம் கழித்து பரிமாறவும்.
Note:
குறிப்பு : புளிப்பு சுவை தேவையெனில் மேலும் சிறிதளவு வினிகர் ஊற்றிக்கொள்ளலாம்.பிரியாணி,தக்காளி சாதம் போன்றவற்றிக்கு சைட்டிஷாக வைக்கலாம்.
- கருத்து தெரிவிக்கஉள்நுழைக அல்லது பெயர்ப்பதிவு செய்க.
- அச்சிடுவதற்கு ஏற்ற பக்கம்
ஒரு மணி நேரம் 55 நிமிடங்கள் முன்பு
3 மணிநேரம் 57 நிமிடங்கள் முன்பு
4 மணிநேரம் 1 min முன்பு
4 மணிநேரம் 3 நிமிடங்கள் முன்பு
4 மணிநேரம் 46 நிமிடங்கள் முன்பு
5 மணிநேரம் 37 நிமிடங்கள் முன்பு
5 மணிநேரம் 41 நிமிடங்கள் முன்பு
5 மணிநேரம் 41 நிமிடங்கள் முன்பு
5 மணிநேரம் 47 நிமிடங்கள் முன்பு
5 மணிநேரம் 52 நிமிடங்கள் முன்பு