வாழைக்காய் வறுவல்

தேதி: March 12, 2011

பரிமாறும் அளவு: 3

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.8 (4 votes)

 

வாழைக்காய் - 1
மிளகாய்த்தூள் - 1 1/2 டீஸ் ஸ்பூன்
மஞ்சள்த்தூள் - 1/2 டீஸ் ஸ்பூன்
தயிர் - 2 டீஸ் ஸ்பூன் (புளிப்பு தேவைப்பட்டால்)
எண்ணெய் - 1 சிறிய குழிகரண்டி அளவு
உப்பு - தேவைக்கேற்ப்ப


 

ஒரு பாத்திரத்தில் கொதித்த நீரை எடுத்துக்கொள்ளவும்.

வாழைக்காயை கழுவி தோல் நீக்கி சிறிய மெல்லிய வட்டங்களாக நறுக்கி கொதித்த நீரில் 2 நிமிடம் போடவும்.

ஒரு வாயகன்ற பாத்திரத்தில் மிளகாய்த்தூள், மஞ்சள்த்தூள்,தயிர், தேவைக்கு உப்பு போட்டு ஒன்றாக கலந்து வைக்கவும்

வாழைக்காயை கொதித்த நீரில் இருந்து வடிகட்டி தூள் கலந்த பாத்திரத்தில் போட்டு விரவி 5 நிமிடம் வைக்கவும்

வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் ஊற வைத்த வாழைக்காயை போட்டு கிளறி விட்டு மூடியால் மூடிக்கொள்ளவும் இப்படி 2 - 3 நிமிடம் மூடி வேகவைத்து முறுவலாக எடுத்துக்கொள்ளலாம்


மேலும் சில குறிப்புகள்


Comments

very nice and easy method..i like it

vazhga valamudan

thankyou so much

Think Positively U will achieve everything
மஹாபிரகதீஸ்,China