பரங்கிக்காய் பொரியல்

தேதி: March 12, 2011

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

3
Average: 3 (2 votes)

 

பரங்கிக்காய் - 100 கிராம்
வெங்காயம் - ஒன்று
இஞ்சி - சிறுத் துண்டு
பச்சை மிளகாய் - 2 (காரத்திற்கு ஏற்ப கூட்டலாம்)
கடலை பருப்பு - ஒரு தேக்கரண்டி
தேங்காய் துருவல் - சிறிது
உப்பு - தேவைக்கு ஏற்ப
எண்ணெய், கடுகு, சீரகம், பெருங்காயம், கறிவேப்பிலை - தாளிக்க
கொத்தமல்லி - சிறிதளவு


 

வெங்காயம், இஞ்சி, பரங்கிக்காய், பச்சை மிளகாய் ஆகியவற்றை நறுக்கி வைக்கவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, சீரகம், பெருங்காயம், கறிவேப்பிலை தாளிக்கவும். கடலை பருப்பு சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்
பின்னர் வெங்காயம், இஞ்சி, பச்சைமிளகாய், பரங்கிக்காய் சேர்த்து வதக்கவும்.
அதனுடன் உப்பு சேர்த்து தண்ணீர் தெளித்து வேக வைக்கவும்.
கடைசியாக தேங்காய், கொத்தமல்லி சேர்த்து இறக்கவும்.
சுவையான பரங்கிக்காய் பொரியல் ரெடி.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

ஹாய் கவிதா...,நலமா?
பார்க்கவே ரொம்ப நல்லா இருக்கு.
வாழ்த்துக்கள்.

என்றும் அன்புடன்,
அப்சரா.

எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.

கவிதா,
ரொம்ப நாட்களுக்கு பிறகு வந்து இருக்கீங்க.Welcome back.பரங்கிக்காய் பொரியல் குறிப்பு, நல்லா இருக்கு.தேங்காய்த்துறுவல் சேர்த்து செய்தது இல்லை.செய்து பார்க்கிறேன்.வாழ்த்துக்கள்.

ஹய்யா கவிதா என் தங்கையின் பெயர் நீங்க இவ்லோ சூப்பரா சமைக்கரீங்க ஆனா என் தங்கை சமைக்கவே மாட்டா அவளுக்கு தெரியவே தெரியாது . உங்க பரங்கிக்காய் பொரியல் சூப்பர் பாக்கவே அழகா இருக்கு கலர்ஃபுல்லாவும் இருக்கு.

பரங்கிக்காய் அப்படின்னா என்னது அது எப்படி இருக்கும் தோழிகளே என்ன திட்டாம ப்ளீஸ் சொல்லுங்க

அன்புடன்
ஸ்ரீ

பரங்கிக்காய் பொரியல் சூப்பர். இன்னிக்கு செய்து பாத்தேன்.

super recipe with step by step photos.regards.g.gomathi.

எனது குறிப்பை வெளியிட்ட அட்மின் அவர்களுக்கு மிக்க நன்றி

என்றும் அன்புடன்,
கவிதா

அப்சரா,அன்பரசி,கோமு மேடம்,கோமதி மேடம்
நலமா?
உங்கள் வருகைக்கும்,பின்னூட்டத்திற்கும் நன்றி

என்றும் அன்புடன்,
கவிதா

ஸ்ரீமதி,
முதல் முறையாக உங்க கிட்ட பேசுகிறேன்
பரங்கிக்காய் இப்படித்தான் இருக்கும்..
http://www.google.com/images?um=1&hl=en&rlz=1R2ADSA_enUS387&biw=1003&bih=626&tbs=isch:1&aq=f&aqi=g10&oq=&q=பம்ப்கின் பீட்டா கரோடீன் அதிகம் உள்ள
yellow pumpkin variety கொண்டு நான் செய்து உள்ளேன்.நீங்களும் செய்து பாருங்க

என்றும் அன்புடன்,
கவிதா

கவிதா... வித்தியாசமான காய்களில் பொரியல் செய்து காட்டுறதில் நீங்க சூப்பர்ங்க. பரங்கிக்காய் பொரியல் அருமை. வாழ்த்துக்கள்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

Romba Supera Iruku Sister...