வெஜ் சமோசா

தேதி: March 12, 2011

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.8 (6 votes)

 

மைதா - ஒரு கப்
வெண்ணெய் - சிறிது
உப்பு - சிறிது
பொரிக்க - தேவையான எண்ணெய்
உள் வைக்க:
உருளைக்கிழங்கு - ஒன்று
வெங்காயம் - ஒன்று
பட்டாணி - கால் கப்
பச்சை மிளகாய் - ஒன்று
மஞ்சள் பொடி - சிறிது
இஞ்சி பூண்டு விழுது - அரை தேக்கரண்டி
மல்லி தழை - சிறிது
கடுகு, உளுந்து - சிறிது


 

முதலில் தேவையானவற்றை தயாராக வைக்கவும்.
மாவில் வெண்ணெய், உப்பு, தண்ணீர் சேர்த்து பிசைந்து வைக்கவும்.
கிழங்கை அவித்து நன்கு மசித்து வைத்துக் கொள்ளவும்.
வெங்காயம், பச்சை மிளகாய், மல்லி தழை ஆகியவற்றை பொடியாக நறுக்கவும்.
கடாயில் சிறிது எண்ணெய் விட்டு கடுகு தாளித்து வெங்காயம் போட்டு வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது போட்டு நன்கு வதக்கவும்.
பின்னர் பட்டாணியை போட்டு வேகும் வரை வதக்கவும்.
அதில் மசித்த உருளை, மஞ்சள் பொடி, பச்சை மிளகாய், மல்லி தழை, உப்பு போட்டு நன்கு வதக்கவும்.
வதங்கியதும் கப்பில் எடுத்து ஆற வைக்கவும்.
சமோசா செய்ய மாவை சிறிதாக படத்தில் உள்ளது போல் வளர்த்தி கிழங்கு கலவையை கொஞ்சம் உள் வைத்து மடிக்கவும்.
அனைத்தையும் இதுபோல் செய்து வைத்துக் கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி செய்து வைத்திருக்கும் சமோசாவை பொரித்தெடுக்கவும்.
கிரிஸ்பியான வெஜ் சமோசா ரெடி. குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

nice potos mam

நான் ரொம்ப நாளா எதிர்பார்த்துட்டிருந்த ரெசிபி.ஈசியா இருக்குது.படங்கள் சூப்பர்.ஆனா ஒரு வருத்தம் ருக்சானா சமோசா எப்படி மடக்குறது என்று இன்னும் ஒரு படத்தில் காட்டிருந்தால் எங்களுக்கு ரொம்ப ஈசியா இருந்திருக்கும்.வாழ்த்துக்கள்.தொடரட்டும் உங்கள் படைப்புகள்.

Expectation lead to Disappointment

ஹாய் ருக்சானா அஸ்ஸலாமு அழைக்கும் சமோசா சூப்பர்ரா இருக்குபா மீனால் சொன்னது போல மடக்குவது எப்படின்னு சொல்லி இருந்தால் ஈசியா இருந்திருக்கும் வாழ்த்துக்கள்

சலாம் ருக்சானா...,நலமா...?
மிகவும் அருமையான சமோசா குறிப்போடு வந்து இருக்கீங்க...
அழகாக செய்து இருக்கீங்க...
நானும் சமோசாவுடைய குறிப்பை படம் எடுத்து வைத்திருந்தேன்.
ஆனால் தவறுதலாக படங்கள் சில டெலிட் ஆகிவிட்டதால் போட முடியாமல் போய் விட்டது.
உங்களிடம் அந்த மடித்த ஃபோட்டோக்கள் இருந்தால் அட்மினுக்கு அனுப்பி சேர்க்க முடியுமா என்று கேட்டுப்பாருங்களேன்.அது பலருக்கும் உபயோகமாக இருக்கும்.
மற்றபடி அருமையான குறிப்பை தந்தமைக்கு பாராட்டுக்களும்,வாழ்த்துக்களும்.

என்றும் அன்புடன்,
அப்சரா.

எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.

எனக்கு சமோசா என்றால் ரொம்ப பிடிக்கும் ..
கண்டிப்பா நான் இதை செய்வேன்..சாப்பிட்டுவிட்டு டேஸ்ட் எப்படின்னு சொல்கிறேன்.

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

ருக்சானா,
சமோசா நல்லா செய்து இருக்கீங்க.பார்க்கவே சாப்பிட தூண்டுது.விளக்கமும்,படங்களும் தெளிவா இருக்கு.நல்ல குறிப்பு.வாழ்த்துக்கள்.

super recipe. i am also do like your recipe. step by step very nice photos. keep it up regards.g.gomathi.

சூப்பர் சமோசா,25 குறிப்புகள் குடுத்து கூட்டாஞ்சோறில் இடம் பிடித்தத்ற்கு பாராட்டுக்கள்.இன்னும் நிறைய குறிப்புகள் குடுத்து கோல்டு ஸ்டார் வாங்குங்க.

சூப்பரான குரிப்பு வாழ்த்துக்கள். ஈசியாகவும் இருந்தது.

அன்புடன்
ஸ்ரீ

சமோசா என்னுடைய பாப்பாவிற்க்கு ரொம்ப பிடிக்கும். அனைவரும் சொல்வது போல் சமோசா மடிப்பது எப்படி என்று தெரிந்தால் நன்றாயாக இருக்கும்

எனக்கு ரொம்பே பிடித்த ஒரு snakes ஈசியா இருக்கு செய்து பார்த்துவிட்டு உங்களுக்கு சொல்கிறேன். வாழ்த்துகள்/

இதுவும் கடந்து போகும்..

அன்புடன்
ரேவதி உதயகுமார்

ருக்சானா மேடம்,

தெளிவான படங்கள் எளிமையான குறிப்பு வாழ்த்துக்கள்

என்றும் அன்புடன்,
கவிதா

ருக்சானா சூப்பர் சமோசா வாழ்த்துக்கள்
கூட்டாஞ்சோறில் இடம் பிடித்ததுக்கு மனமார்ந்த பாராட்டுகளும் வாழ்த்துக்களும்

ருக்சனா... நானும் இப்படி தான் செய்வேன். நல்லா அழகா செய்து காட்டி இருக்கீங்க. சூப்பர். வாழ்த்துக்கள்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ரெண்டு,மூணு நாளா பதிவு போடா நினைக்கறது , முடியறதே இல்ல. ரொம்ப தெளிவான படங்கள். கண்டிப்பா டேஸ்ட் சூப்பர் ஹ இருக்கும். ஒரே ஒரு டவுட், நீங்க சமோசா அழகா மடுச்சு இருக்கீங்க. அது மட்டும் காட்டி இருந்தா, நாங்களும் அதே மாதிரி மடுச்சு பண்ணுவோம். இல்லைனா, சமோசா -> போண்டா ஆயிடும். ஹஹஹா :-)

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

NANDRI Ruksanamammu

ENAKKU SAMOSA ENDRAL MIGAVUM PIDIKKUM... SIRNTHA KURIPPUKKU NANDRI...

ஒரே ஒரு டவுட்டு # எல்லா சமோசாவும் ஏன் ஒரே மாடலா முக்கோனமாகவே செய்யுறீங்க . இங்கே பலப்பேருக்கு மடிக்கவே தெரியலன்னு சொன்னதிலிருந்து , இனி கட்டமா , வட்டமா உருளையா ஒரு மாடல் பொரித்து பதிவேற்றவும் :-)))

அன்பை ஒரு தடவை கொடுத்துப்பார் அது ஆயிரம் முறை திரும்ப வருவதை பார்ப்பாய்

boli is really superb.