தூங்காத அரட்டை என்று ஒன்று!!!

மக்களே... நான் இல்லாம புது அரட்டை துவங்காம இருந்த உங்க நல்ல மனசை நான் என்னன்னு சொல்ல...!!! என்னை தேடினீங்களான்னு நான் போய் பழைய அரட்டைய பார்துட்டு வரேன்... நீங்க அது வரைக்கும் இங்க அரட்டை அடிங்க.

இதனால் அறுசுவையில் எல்லாருக்கும் தெரிவிக்கிறது என்னனா.... நாங்க நலமாக ஊரை சுற்றிட்டு வந்துட்டோம்!!! மிச்ச கதையை வந்து சொல்றேன். அதே போல் தோழிகள் எல்லாரும் நலமாக அரட்டை அடித்தீர்கள் என் நம்புகிறேன்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

காலை வணக்கங்கள். எப்படி இருகின்றீர்கள் வனி. பயணம் எல்லாம் முடிஞ்சதா? அனைத்து தோழி அண்ணாகளும் எங்கே போனீர்கள். ஒவ்வொருவராக வாருங்கள் நான் attendence எடுக்கணும்.

இதுவும் கடந்து போகும்..

அன்புடன்
ரேவதி உதயகுமார்

3 நாட்களாக டிவியில் ஜப்பான் செய்தியை பார்த்து மனது கனத்து போய் இருக்கிரது.
நம் தோழிகள் யாரேனும் அங்கு உள்ளனரா அங்கு இருக்கும் கதீஜா எப்படி இருக்கீடரார் தகவல் தெரிந்தவர் சொல்லவும் pls

கொட்டும் புலி ரேவதிக்கு காலை வணக்கம்... நான் பிரசெண்ட்... அட்னென்ஸ் போடுங்கோ.

அன்புடன்
THAVAM

நலமா? இந்தியர்கள் அனவருமே நலமுடன் உள்ளதாக தூதரகம் தெரிவித்துள்ளது... கவலை வேண்டாம். கடவுள் அருளால் கதீஜாவும் நலமுடன் இருப்பார்.

அன்புடன்
THAVAM

என்னை யாருமே தேடலன்னு தெரிஞ்சுகிட்டு வந்திருக்கேன் ;(

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

அனைத்து தோழிகளுக்கும் இனிய காலை வணக்கங்கள்.

ரே,அண்ணா,வனி,

ரே என்ன வீக் எண்ட் எல்லாம் எப்படி போச்சு .

அண்ணா நலமா அண்ணி நலமா

ஹாய் வனி பயணம் எல்லாம் இனிமையாக முடிந்ததா

அன்புடன்
ஸ்ரீ

வாங்க அண்ணா. நீங்க ரொம்ப நல்லவருன்னு எனக்கு தெரியும். எப்படி இருக்கீங்க. அண்ணி பிள்ளைகள் எல்லாம் எப்படி இருகாங்க? உங்க பிள்ளைகளுக்கு எக்ஸாம் தொடங்கிவிட்டதா?
ஸ்ரீ ரொம்ப நல்ல முடிச்சது. நீ எப்படி இருக்க?
வனி நானும் இரண்டு நாள் lineku வரவில்லை அதனால் தான் தேடலை.

இதுவும் கடந்து போகும்..

அன்புடன்
ரேவதி உதயகுமார்

சகோதரி வனிதா நலமா?.
ரேவதி, நான் தேர்தல்ல நிற்கப் போவது உங்களுக்கு எப்படி தெரியும்!!! அண்ணன் நல்லவர்னு சான்றிதழ் வழங்கிய உங்கள் நல்ல மனதுக்கு தேங்சு! எக்ஸாம் மார்ச் கடைசி வாரத்தில் தொடங்குகின்றன.
ஸ்ரீமதி, நலமா? நாங்கள் ந்ல்ல நலம்.

அன்புடன்
THAVAM

அய்யோ தேர்தலா சொல்லவே இல்லை. எந்த கட்சி. எங்கள் ஓட்டு தவதிற்கே!
எல்லோரும் மறக்காம அண்ணன் சின்னத்திற்கே ஓட்டு போடுங்கள். எப்புடி ஓட்டு நல்ல கேட்குறேனா?

இதுவும் கடந்து போகும்..

அன்புடன்
ரேவதி உதயகுமார்

மேலும் சில பதிவுகள்