கால்களுக்கான ஹென்னா டிசைன்

தேதி: March 14, 2011

5
Average: 4.2 (12 votes)

 

ஹென்னா கோன்

 

பாதத்தின் பின் பக்கத்தில் இருந்து சின்ன சின்ன சுருள் போல் வரைந்து அதை சுற்றி முத்துக்கள் வைத்து படத்தில் உள்ளது போல் வரையவும்.
அதில் இருந்து வருவது போல் மயில் தோகைகளை வரையவும்.
அதன் தொடர்ச்சியாக கொடி போல் மீண்டும் வரைந்து அதே சுருள் மற்றும் முத்துக்கள் வரைந்து, மயில் தோகையும் வரையவும்.
இதே போல் பாதத்தின் மற்றொரு பக்கமும் வரையவும்.
கட்டை விரலில் வருவது போல் கொடியை கொண்டு வந்து விரலில் மயில் தோகை வரையவும்.
இப்போது நடுப்பகுதியில் ஒரு மயில் தோகையும், சுருள் டிசைனையும் வரைந்து கொள்ளவும்.
விரலிலும் இதே போல் கொடியும், தோகையும் வரையவும்.
இரண்டு கால்களிலும் இதே போல் வரையவும். வரைய மிக சுலபமான டிசைன் இது. கால் முழுவதும் வருவதால் திருமணம், பார்ட்டி என எல்லாவற்றுக்கும் நன்றாக இருக்கும்.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

மேலும் சில கைவினைகள்


Comments

சொல்ல வார்த்தையே இல்ல, அவளோ அழகா இருக்கு....உங்க பாதம் மருதாணியால் மேலும் அழகா இருக்கு.... :-)

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

சூப்பரான டிசைன் பா உங்க பாதங்களும் மருதானியால் அழகா இருக்கு ஆனா நீங்க என்னமோ இத ஈசின்னு சொல்லுரீங்க எனக்கு இத பார்த்தா மலையை பாக்கரா மாதிரி இருக்கு எனக்கு ஹென்னா போட வரமாட்டேங்குது பா. நீங்க போட்ருக்கரத பார்த்தா ஆசையா இருக்கு ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் போங்க பா

அன்புடன்
ஸ்ரீ

அழகா இருக்கு வனிதா.

‍- இமா க்றிஸ்

வனி எங்க வீட்டுக்கு வந்து எனக்கு ஒரு நாள் போட்டு விடுங்கள். ரொம்ப அழகா இருக்கு.

இதுவும் கடந்து போகும்..

அன்புடன்
ரேவதி உதயகுமார்

super.i will try your desin in my daughter birthday party. keep it up.regards.g.gomathi.

குறிப்பை வெளியிட்ட அட்மின் குழுவினருக்கு நன்றி :)

சுகி... மிக்க நன்றி. அது என் பாதம் இல்லை, என் தங்கயோடது.

ஸ்ரீ... மிக்க நன்றி. முயற்சி செய்துட்டே இருந்தா வராததும் வரும்.

இமா... ரொம்ப நன்றி :)

ரேவதி... வந்து போட்டுட்டா போது. மிக்க நன்றி.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

கோமதி... அவசியம் ட்ரை பண்ணிட்டு சொல்லுங்க. மிக்க நன்றி.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனிதா ரொம்ப நல்ல இருக்கு.. நானும் மெகந்தி போடுவேன்.. இந்த டிசைன் ஈசியா இருக்கு.. போட்டு பார்க்கிறேன்..

இன்று உன்னால் கூடிய மட்டும் நன்றாக செய்...
நாளை அதனினும் நன்றாக செய்யும் ஆற்றலை நீ பெற கூடும்.

லக்ஷ்மி.. மிக்க நன்றி. அவசியம் போட்டு பாருங்க. :) கூடவே உங்க டிசைன்ஸ்'ம் இது போல் படம் எடுத்து எங்களுக்கு அனுப்புங்க, நாங்களும் காண காத்திருக்கோம்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ம்ம்ம் கலக்குறீங்க....soooopperrrrrr வனிக்கா.......வாழ்த்துக்கள்....

சுமதி... மிக்க நன்றி.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனிதா சூப்பரா இருக்கு (உங்க கால் கொலுசும் அழகுதான் )

என்றும் அன்புடன்.....

•´ ¸.•*´¨) ¸.•*¨)
(¸.•´ (¸.•* குமாரி ♥♥♥...♪♪♪

வனிதா நானும் இதுபோல் அனுப்ப ஆசைப்படுகிறேன்.எப்படி இதை அட்மினுக்கு அனுப்புவது?மெயிலில் தான் அனுப்பனுமா?படத்தின் விளக்கங்களையும் போட்டோவுடன் மெயிலில் எழுதி அனுப்பனுமா?தயவுசெய்து விளக்கம் கொடுங்கள்.

Eat healthy

நீங்க அட்மின் க்கு மெயில் தான் பண்ணனும். ஸ்டேப் by ஸ்டேப் ஹ போட்டோ எடுத்து arusuvaiadmin@gmail.com இந்த ஐடி க்கு அனுப்புங்க.

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

குமாரி... மிக்க நன்றி.

ரசியா... சரியா சொல்லிட்டாங்க நம்ம சுகந்தி. அதே தான் படம் எடுத்து அந்த ஈமெயில் முகவரிக்கு அனுப்புங்க, சமையல் குறிப்பு அனுப்புவது போலவே தான். விரைவில் உங்க டிசைன்ஸ் பார்க்க நாங்க காத்திருக்கோம். வாழ்த்துக்கள்.

சுகந்தி... நேரத்துக்கு பதில் கொடுத்திருக்கீங்க. மிக்க நன்றி.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ரொம்ப அழகா இருக்கு வனி, உங்களோட மருதாணி டிசைன் & பாதம்! நல்ல கற்பனைத்திறன் உங்களுக்கு, பாராட்டுக்கள்! :)

அன்புடன்
சுஸ்ரீ

நன்றி தோழி சுகந்தி!நான் சமையல் குறிப்புகள் பல இந்த முகவரிக்கு அனுப்பியுள்ளேன்,ஆனால் நீங்களும் செய்திடலாம் பகுதிக்கு அனுப்புவது இது தான் முதல் முறை!அதனால் தான் கேட்டேன் தோழி!

Eat healthy

ஏதோ எனக்கு தெரிந்த ஒன்றை அனுப்பி வைத்திருக்கிறேன் வனி!ஆனால் உங்க லெவலுக்கெல்லாம் இருக்காதுப்பா!சரியில்லைன்னா திருத்தம் சொல்லுங்க.

Eat healthy

வனி சூப்பரா இருக்கு வாழ்த்துக்கள்(அதுசரி கையைகாமிச்சாச்சு காலையும் காமிச்சாச்சு முகத்தை எப்போ காமிக்க போறீங்க?????????)

Design is nice

your future is created by what you do today, not tomorrow &
you must be the change you want to see in the world

சுஸ்ரீ... மிக்க நன்றி. :)

ரசியா... அனுப்பிட்டீங்களா??? ரொம்ப சந்தோஷம்... ஆவளோடு காத்திருக்கோம்.

பாத்திமா... மிக்க நன்றி. அது என் கால் இல்லை... ;)

சத்யா... மிக்க நன்றி :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா