தக்காளி சாஸ்

தேதி: March 14, 2011

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.3 (4 votes)

இந்த தக்காளி சாஸ் செய்முறையை திருமதி. இமா அவர்களின் மகன் திரு. அலன் க்றிஸ் அவர்கள் செய்து காட்டியுள்ளார்.

 

தக்காளி - 2 கிலோ
வொய்ட் வினிகர் - 175 மி.லி
மால்ட் வினிகர் - 175 மி.லி
சீனி - 250 கிராம்
உப்பு - ஒரு மேசைக்கரண்டி
வெங்காயம் - ஒன்று
ரோஸ்மேரி - 2 நெட்டு
பூண்டு - 4,5 பல்லு
ஆல்ஸ்பைஸ் (whole allspice) - 8 கிராம்


 

மேற்சொன்ன பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
தக்காளியைக் கழுவி கொதி நீரில் ஒரு நிமிடம் போட்டு எடுக்கவும்.
தோலை உரித்து இரண்டாக நறுக்கி வைக்கவும்.
ரோஸ்மேரியை சுடுநீரில் கழுவி எடுத்து சிறிதாக நறுக்கி வைக்கவும்.
ரோஸ்மேரி, ஆல்ஸ்பைஸ் இரண்டையும் சேர்த்து சுத்தமான துணியில் முடிச்சாகக் கட்டி வைக்கவும். பூண்டு, வெங்காயம் இரண்டையும் நறுக்கி வைக்கவும்.
அடி கனமான பாத்திரம் ஒன்றில் சிறிது பட்டர் தடவி எடுக்கவும். அதில் நறுக்கின தக்காளி, பூண்டு, வெங்காயத்துடன் இரண்டு வகை வினிகரையும் சேர்க்கவும். அத்துடன் சீனியும் உப்பும் சேர்த்து ரோஸ்மேரி, ஆல்ஸ்பைஸ் முடிச்சினையும் போட்டு மிதமான தீயில் வைக்கவும்.
இடையிடையே அடிப்பிடிக்காமல் கலக்கி விடவும். நடுவே ஒன்றிரண்டு முறை கலவையை பீட்டரினால் அடித்துவிட்டால் தக்காளி கரைந்துவிடும்.
ஒன்றரை மணி நேரம் கழித்து அடுப்பிலிருந்து இறக்கவும்.
சாஸ் சூடாக இருக்கும் போதே பாட்டில்களில் நிரப்பி மூடி வைக்கவும்.

தக்காளி மலிவாகக் கிடைக்கும் காலத்தில் வாங்கி இதுபோல் தயாரித்து வைத்துக் கொள்ளலாம். இந்த அளவுக்கு ஒன்றரை லிட்டருக்கும் சிறிது அதிகமான அளவு சாஸ் கிடைக்கும். சரியானபடி சுத்தமாகத் தயாரித்தால் ப்ரிஜ்ஜுக்கு வெளியே ஒரு வருட காலம் வரை கெடாது இருக்கும். சமைக்கப் பயன்படுத்தும் பாத்திரம், கரண்டி உலர்வாக இருத்தல் வேண்டும். சாஸ் சேமிக்கும் பாட்டில் மூடிகளை முன்பாகவே சுத்தமாகக் கழுவி எடுக்கவும். பாட்டில்களை இறுதியாக வெந்நீரில் ஒருமுறை அலம்பி அவனில் வைத்து மெல்லிய சூட்டில் உலர விடவும். அல்லது வெயிலில் காய விடலாம். சாஸை நிரப்பும் போது பாட்டில்களை ஒரு மரத்தாலான வெட்டும் பலகையில் வைத்து நிரப்பவும். பாட்டில்களைத் திறந்த பின்னால் ப்ரிஜ்ஜில் வைத்துப் பாவிக்கவும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

சாஸ் செம சூப்பர், பாத்தாலே தெரியுது.... ரொம்ப அழகா தெளிவா பண்ணி காட்டி இருக்கார். வாழ்த்துக்களை சொல்லிடுங்க
எனக்கு ஒரே ஒரு பெரிய டவுட். நீங்க சொல்லி இருக்க பொருள் எல்லாம் தமிழ்நாடு ல கிடைக்குமா?
வைட் வினிகர்,மால்ட் வினிகர்,ரோஸ்மேரி,ஆல்ஸ்பைஸ்???

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

ஹாய் இமா...,உங்கள் மகனின் கைத்திறனா இது!!!!!
மிகவும் தெளிவாகவும் அழகான முறையிலும் செய்து காட்டியிருக்கின்றார்.
நல்லா இருக்கு.ஆஹ டோட்டல் ஃப்பெமிலியும் கலக்குறீங்கப்பா...
பாராட்டுக்களையும்,வாழ்த்துக்களையும் உங்கள் மகனுக்கு தெரிவித்துவிடுங்கள் இமா...

என்றும் அன்புடன்,
அப்சரா.

எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.

ஆஹா எவ்லோ சூப்பரா இருக்கு பாக்கும் போதே அட இந்த வாரம் எல்லாம் பிடித்த அயிட்டங்களா வருதே இமா உங்க பைய்யன் சூப்பரா செய்துகாட்டி இருக்காங்க எனக்கும் சுகிக்கு இருக்கர அதே டவுட் தான் அதெல்லாம் சென்னையில் கிடைக்குமா

அன்புடன்
ஸ்ரீ

super sauce. keep it up.regards.g.gomathi.

முகப்பில் பார்த்தவுடன் இது இமாவின் குறிப்பா இருக்குமோ என்று நினைத்தேன்?? நீங்களே தான்....தாய் எட்டடி பாய்ந்தால் குட்டி பதினாறடி பாயும் என்பார்களே அது இது தானோ??

லாவண்யா

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

எல்லாம் நம்ப ஊரிலேயும் கிடைக்கும். நீங்கள் நீல்கிரிஸ் அந்த மாதிரி பெரிய சூப்பர் மார்க்கட்டில் தேடி பார்க்கவும்.

லாவண்யா

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

இமா மேடம்,

தக்காளி சாஸ் குறிப்பு அருமை கண்டிப்பாக செய்து பார்க்கிறேன்
உங்களது மகனுக்கு எனது வாழ்த்துக்கள்

என்றும் அன்புடன்,
கவிதா

இமா... உங்க மகன் சூப்பரா செய்திருக்கார். எல்லாம் உங்க ட்ரெயினிங்'ஆ??? ;) கலக்கறார். வாழ்த்துக்கள் சொன்னேன்னு சொல்லுங்க. அடுத்த முறை வீட்டுக்கு வரும்போது இதில் ஒரு பாட்டில் கொண்டு வரணும். சரியா??? :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

very nice, what will happen to the seeds in Tomato,
sauce we buy doesn't contain seeds.
please bring me one bottle as well!!!!!!!!

your future is created by what you do today, not tomorrow &
you must be the change you want to see in the world

இமா,
தக்காளி சாஸ் செய்முறையும்,படங்களும் அழகா,தெளிவா இருக்கு.உங்க மகனுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்.ஃபோட்டோ எடுத்து அனுப்பிய உங்களுக்கும் தான்.

சுகிக்கும், ஸ்ரீமதிக்கும் எனக்குப் பதிலாக அவர்களுக்குப் பதில் சொல்லிய லாவண்யாவுக்கும் நன்றி. பழமொழி நல்லாருக்கு லாவண்யா. பழமொழியில... தந்தைகள் பாயுறதைப் பற்றி ஏன் சொல்லல!! ;))

சொல்றேன் அப்சரா. தாங்ஸ். இங்க முன்னாலயே ஒரு குறிப்பு இருக்கு.

சரி.. கோமதிக்காக சாஸ் பாட்டிலை மேல வச்சாச்சு. ;))) நன்றிங்க.

நன்றி கவிதா. ;)

ட்ரெய்னிங் எல்லாம் கிடையாது. ஆர்வம் இருக்கு, பண்றார். கட்டாயம் கொண்டுவரேன். கிளம்ப முன்னால நினைவு படுத்துங்க வனி.

ம்... ;)) இன்னும் எ கலப்பை இன்ஸ்டால் பண்ணலயா சத்யா? ;) இது Wattie's மாதிரி எல்லாம் இல்ல, சீட்ஸ் இருக்கும் ஆனால் டேஸ்ட்டா இருக்கும். வீட்ல பண்றதால ப்ரிசர்வேடிவ்ஸ் இருக்கும் என்று பயம் இல்லை. எல்லாம் ப்ரென்ட்சுக்கு டிஸ்ட்ரிப்யூட் பண்ணிட்டு கடைசி பாட்டிலோட இருக்கார் சார். அடுத்த பாட்ச்ல நிச்சயம் உங்களுக்கு ஒரு ஷேர் உண்டு. உங்கள் வேண்டுகோள் நினைவு இருக்கு. விரைவில் சந்திக்கிறேன். ;)

மிக்க நன்றி ஹர்ஷா. ;)

‍- இமா க்றிஸ்

இமா மேடம், குறிப்புக்கு மிகவும் நன்றி. உங்க மகனுக்கும் என் நன்றிகள். என் பொண்ணுக்கு தக்காளி சாஸ் ரொம்ப இஷ்டம். இனி வீட்டிலயே ப்ரிசர்வேடிவ்ஸ் எதுவும் இல்லாம ஆரோக்கியமா செய்து தரலாம்.

அன்புடன்
திவ்யா அருண்

விழாமல் இருப்பது பெருமையன்று. விழும் போது எல்லாம் எழுவது தான் பெருமை.