முட்டை தொக்கு

தேதி: March 15, 2011

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.1 (20 votes)

 

முட்டை - 3
வெங்காயம் - 3
தக்காளி - 2
பச்சை மிளகாய் - 2
கறிவேப்பிலை - சிறிது
சக்தி கறி மசாலாதூள் - ஒரு தேக்கரண்டி
மிளகாய்த்தூள் - ஒரு தேக்கரண்டி
மஞ்சள்தூள் - கால் தேக்கரண்டி
இஞ்சி பூண்டு விழுது - அரை தேக்கரண்டி
பட்டை, கிராம்பு, ஏலக்காய் தூள் - கால் தேக்கரண்டி
உப்பு - தேவைக்கு
மல்லி இலை - சிறிது
கடலை மாவு - ஒரு தேக்கரண்டி
எண்ணெய் - ஒரு குழிக்கரண்டி


 

வெங்காயம், தக்காளி, பச்சைமிளகாய் ஆகியவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
முட்டையை ஒரு பாத்திரத்தில் உடைத்து ஊற்றி நன்கு அடித்துக் கொள்ளவும்.
அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் வெங்காயம், கறிவேப்பிலை, தக்காளி, மிளகாய் போட்டு வதக்கவும். அதனுடன் மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், கறிமசாலாதூள், பட்டை, கிராம்பு, ஏலக்காய்தூள், இஞ்சி பூண்டு விழுது போட்டு வதக்கவும்.
பின் அடித்து வைத்த முட்டையை ஊற்றி கிளறி விட்டு தண்ணீர் உப்பு சேர்த்து வேக விடவும்.
வெந்ததும் கடலை மாவை சிறிது தண்ணீர் விட்டு கரைத்து ஊற்றி ஒரு கொதி வரவும் இறக்கவும்.
மல்லி தழை தூவி பரிமாறவும். சப்பாத்தி, பரோட்டாக்கு நல்ல காம்பினேஷன்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

நாக்கு ஊருது போங்க, விருப்பபட்டியல்ல சேர்த்தாச்சு. இன்னைக்கு நைட் இது தான் பண்ண போறேன். நாளைக்கு வந்து எப்படி இருந்துச்சுன்னு சொல்றேன்....

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

இன்று இரவு சப்பாத்திக்கு இதுதான் பண்ண போறேன்.நல்ல குறிப்பு.வாழ்த்துக்கள்.

சூப்பரா இருக்கு ,செய்து பார்கிறேன் நல்ல குறிப்பு வாழ்த்துக்கள்

Thanks..ma'm.. Its a delicious receipie..
and it will be made easily by everyone ..

EGG SMELL WON'T BE THERE WHEN SERVING HTE DISH KNOW MAM AND DID THE EGG WILL GET BOILED NICELY.. CLEAR MY DOUBT MAM...

பாத்திமா... என்ன தான் சொல்லுங்க அனுபவம் உள்ளவர்கள் சமையல் தனி தான். வித்தியாசமான குறிப்பு. வாழ்த்துக்கள்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஹாய் பாத்திமா,
சூப்பர் குறிப்பு பார்த்தாலே சாப்பிடனும் போல் உள்ளது. கண்டிப்பா செய்து பாத்துட்டு வந்து சொல்லுரேன். வாழ்த்துக்கள்..........

உன்னை போல பிறரையும் நேசி.

பாத்திமா.. சூப்பரா இருக்கு.. நாங்க முட்டைல கிரேவி,பொரியல் தான் பண்ணுவோம்.. பார்த்தாலே சாப்பிடனும் போல் இருக்கு.. கண்டிப்பா செய்து பாத்துட்டு சொல்றேன்.. குறிப்புக்கு வாழ்த்துக்கள்...

இன்று உன்னால் கூடிய மட்டும் நன்றாக செய்...
நாளை அதனினும் நன்றாக செய்யும் ஆற்றலை நீ பெற கூடும்.

பார்த்தவுடனே சமைத்து, சுவைக்கத் தூண்டுகிறது. மிக்க நன்றி.
ஹலீமா.

அன்புடன்,
ஹலீமா

எனது குறிப்பை வெளியிட்ட அட்மின் குழுவினருக்கு நன்றி

சுகி வருகைக்கு நன்றிடா சீக்கிரம் சொல்லு எப்படி இருந்ததுன்னு
ரீம் வருகைக்கு வாழ்த்துக்கும் நன்றி செய்துட்டு சொல்லுங்கள்

கல்பனா வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி

ரிஃபானியா உங்கள் பெயரை சரியா எழுதி இருக்கேனா வருகைக்கு நன்றி
தமிழில் பதிவிடுங்கள்

ஹேமலதா வருகைக்கு நன்றி முட்டை ஸ்மெல் வராது சீக்கிரம் வெந்துவிடும்
தமிழில் பதிவிடுங்கள்

வனி நான் உங்களைகாட்டிலும் ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்பசின்ன பொண்ணு
உங்கள் அளவுக்கு எனக்கு அனுபவம் கிடையாது நீங்கள் ஆல்ரவுண்டர் வனியாச்சே
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி(அப்பாடி எப்படியோ வனியக்காட்டிலும் சின்ன பொண்ணுன்னு சொல்லிட்டேன்ஹாஹா ஹா ஹா)

தேவி வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி கண்டிப்பா செய்துட்டு சொல்லுங்கள்

லெட்சுமி வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி கண்டிப்பா செய்துபார்த்துட்டு சொல்லுங்கள்

சலாம் ஹலிமா வருகைக்கு நன்றி

சலாம் ஹமீதம்மா ... நலமா ..?? முட்டையில் தொக்கு வித்யாசமான குறிப்பு .. சீக்கிரம் செய்துடரேன் .. வாழ்த்துக்கள் ..!!

Express Yourself .....

வித்தியாசமா இருக்கு
வாழ்த்துக்கள்

என்றும் அன்புடன்,
கவிதா

அஸ்ஸலாமு அலைக்கும் ஃபாத்தி அக்கா..,
தாங்களும்,தாங்கள் வீட்டினரும் நலமா?
நேற்றே உங்கள் குறிப்பை பார்த்துவிட்டு செய்து பார்த்துவிட்டு அக்காவை சந்திக்கலாம் என்று போய்விட்டேன்.
இன்று குப்பூஸுக்கு தொட்டுக்கொள்ள செய்து ருசித்து சாப்பிட்டுதான் வந்து எழுதுகிறேன்.
மிகவும் அருமையாக இருந்தது அக்கா....
கறி மசாலா,கடலை மாவைதவிர்த்து நான் அடிக்கடி இதை செய்வதுண்டு.
இன்று கடலை மாவு கரைத்து சேர்ப்பதில் தளர்வாக அதுவும் குப்பூஸுக்கு மிகவும் சூப்பராக இருந்தது அக்கா...
நல்ல குறிப்பை எங்களோடு பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி அக்கா...

என்றும் அன்புடன்,
அப்சரா.

எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.

வலைக்கும் சலாம்...நான் நலம் நீலமா?வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி சீக்கிரம் செய்துட்டு சொல்லுடா

கவிதா வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றிமா

வலைக்கும் சலாம்.........அப்சரா
வீட்டில் அனைவரும் நலம், நீயும் குழந்தைகளும் நலமா?
உடனே செய்துவிட்டாயா? மிக்க நன்றிடா

this site is useful to people like me

ஹலோ தோழிகளே..
இன்னைக்கு இந்த குறிப்பு தான் முயற்சி செஞ்சேன் .. ஆனா வேற மாதிரி வந்துருச்சு..
அதாவது, தொக்கு வரைக்கும் சரியா வந்துச்சு , ஆனா முட்டைய சேர்த்து கிளரும் போது முட்டை பொரியல் மாட்ரி ஆகிடுச்சு :(
பக்குவமா கிளறல ன்னு நினைக்கிரேன் . எப்படி தொக்கு பதத்துலயே அடித்த முட்டையை கிளறனும் ப ..?

குறிப்பு : சமையலில் நான் ஆரம்ப நிலை.

வலி விலகியதை அனுபவி . பிரச்சினை தீர்ந்த பின் பாடல்கள் இனிக்கும் . :)

ஆகா என்ன அருமையான சமையல் ஒரு நாளைக்கு இரண்டு முட்டையாவது சாப்பிட வில்லை என்றால் எனக்கு சாப்பாடே இறங்காது முட்டை தொக்கு நான் கண்டிப்பா செய்து சாப்பிடுவேன் அக்கா ஹமீத் பாத்திமா வுக்கு நன்றி.

உப்பிட்டவரை உள்ளவுநினை

இந்த டிஷ் செய்தேன்...ரொம்ப நல்லா இருந்தது.நன்றி

ungal kurippu miga arumagayaga irunthathu... nalai kandippaga seithu parkirane... valzthukkal

EggThokku dish is very excellent. yesterday only i did it,my husband gave good comments. Thank you mam.

Dear Hameed Fathima,

நேற்று இந்த தொக்கு செய்தேன்..ரொம்ப நல்லா இருந்தது..Different சுவையோடு! நன்றி!

-Akhila