ஸ்டப்டு மசால் வடை

தேதி: March 16, 2011

பரிமாறும் அளவு: 4

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

கடலை பருப்பு - 1 கப்

துவரம் பருப்பு - 1/4 கப்

உருளை - 1

காரட் - 1

பூண்டு - 3 பல்

இஞ்சி - சிறிது

காய்ந்த மிளகாய் - 4

சோம்பு - 1/2 tsp

வெங்காயம் - 1

உப்பு - தேவையான அளவு

கொத்தமல்லி - சிறிது

எண்ணெய் - பொரித்தெடுக்க தேவையான அளவு


 

பருப்பு வகைகளை இரண்டு மணி நேரம் ஊறவைத்து மிளகாய், பூண்டு, இஞ்சி மற்றும் சோம்பு சேர்த்து கொரகொரப்பாக அரைத்தெடுக்கவும்.

வெங்காயம் மற்றும் கொத்தமல்லியை பொடியாக நறுக்கி அரைத்த மாவில் உப்பு சேர்த்து பிசைந்து வைக்கவும்.

காய் வகைகளை உப்பு சேர்த்து வேகவைத்து மசித்து வைக்கவும்.

மாவை சிறிய எலுமிச்சை அளவு உருண்டைகளாக பிடித்து வைக்கவும்.

எத்தனை உருண்டைகள் அத்தனை பாகமாக மசித்த காய்கறியை பிரித்து வைக்கவும்.

ஒரு மாவு உருண்டை எடுத்து அதற்க்கு நடுவில் காயை வைத்து வடையாக தட்டி எண்ணையில் பொரித்தெடுக்கவும்.


குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். காய்கறிகளுக்கு பதிலாக வேகவைத்த எலும்பில்லாத சிக்கன் அல்லது மட்டன் இல்லை சீஸ் கூட சேர்த்து செய்யலாம்.

மேலும் சில குறிப்புகள்