வல்லாரை சாதம்

தேதி: March 17, 2011

பரிமாறும் அளவு: 4 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

ஆய்ந்த வல்லாரைக்கீரை -- 2 கப்
வெங்காயம் -- 2
பச்சை மிளகாய் -- 4
கரம் மசாலா பொடி -- 2ஸ்பூன்
இஞ்சி -- ஒரு சிறியதுண்டு
ஜீரகம் - அரை ஸ்பூன்
எண்ணை -- ஒருகரண்டி
உப்பு -- தேவையான அளவு
உதிராக வடித்த சாதம் -- 4கப்


 

கீரை,இஞ்சி, மிளகாய் இவற்றை மிக்சியில் நைசான விழுதாக அரைக்கவும்.
கடாயில் எண்ணை ஊற்றி ஜீரகம் தாளித்து பொடிசாக நறுக்கிய வெங்காயம் பொன் நிறமாக வறுக்கவும்.
நன்கு வறுபட்டதும் மசாலாபொடி,உப்பு, அரைத்த விழுது சேர்த்து கிளறவும்.
இதில் வடித்த சாதத்தைப்போட்டு நன்கு கிளறவும்.


வல்லாரைக்கீரை ஞாபக சக்திக்கு ஏற்றது. வளரும் குழந்தைகளுக்கு ஏற்ற உணவு.

மேலும் சில குறிப்புகள்