பத்தியக்குழம்பு

தேதி: March 17, 2011

பரிமாறும் அளவு: 4 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

1
Average: 1 (1 vote)

 

புளி -- எலுமிச்சை அளவு
சுண்டைக்காய் வற்றல் -- 15
மிளகா வற்றல் -- 3
சாம்பார் பொடி -- 4 ஸ்பூன்
கடுகு -- அரை டீஸ்பூன்
வெந்தயம் -- அரை டீஸ்பூன்
துவரம் பருப்பு -- அரை டீஸ்பூன்
நல்லெண்ணை -- 4 ஸ்பூன்
கறி வேப்பிலை -- சிறிதளவு
உப்பு -- தேவையான அளவு
பெருங்காயம் -- சிறிதளவு


 

கடாயில் எண்ணை ஊற்றி,கடுகு, வெந்தயம், துவரம் பருப்பு தாளித்து,பொரிந்ததும், சுண்டைக்காய்,பெருங்காயம் மிளகாய்,கறிவேப்பிலை சேர்த்து வதக்கி சாம்பார்பொடி, உப்பும் சேர்த்து வதக்கி புளியை நீர்க்க கரைத்து ஊற்றி நன்கு கொதிக்க விடவும். நன்கு கொதித்து வற்றியதும் இறக்கவும்.,


காய்ச்சலில் இருந்து சரியானவர்களுக்கு நாக்கில் ருசியே தெரியாது. அவர்களுக்கு இந்தக்குழம்பு மிகவும் ருசியைக்கொடுக்கும்.

மேலும் சில குறிப்புகள்