எவெர் சில்வெர் பாதிரம்

Hai friends,

எங்க வீட்டில் எவெர் சில்வெர் பாதிரம் எல்லாம் துரு பிடிக்குது.

என்ன செய்வது சொல்லுங்க friends.

regards,
Suganya.G

enakum adhe problem than.adhuvum pispisu nu apina madhiri iruku.evalu kaluvinalum poga matingudhu.nan enna seivadhu.guest vandhangana parka kashtama irukunga.Please reply for this

I can do

வாங்கும் போதே நல்ல தரமான பாத்திரங்களாக வாங்கிக் கொள்ளுங்கள். துருப்பிடிக்காது.

பாத்திரங்களை உடனுக்குடனே கழுவி (கழுவுறதுக்கு என்ன யூஸ் பண்றீங்க!!) சுத்தமான துணியால் நன்கு துடைத்து வைத்துவிடுங்கள். ஈரலிப்போடு வைக்க வேண்டாம். ஜூஸ் சர்வ் செய்தால் உடனே ட்ரேயையும் கழுவித் துடைத்து வையுங்கள், வட்டம் விழுவதைத் தவிர்க்கலாம். வேலைப்பாடுகள் அதிகம் இல்லாத பாத்திரங்கள் பராமரிப்பது சுலபம். கீறல் விழாமல் கழுவித் துடைத்து வையுங்கள். எப்போதாவது பயன்படுத்தும் பாத்திரங்கள் அடுக்கும் போது நடுவே டிஷ்யூ அல்லது சுத்தமான துணி போட்டு அடுக்குங்கள்.

நிச்சயம் நல்ல எவர்சில்வர் என்று தெரிந்தால் தவிர பழங்கள் புளிப்புச் சுவையான பதார்த்தங்களை வைக்க வேண்டாம்.

பாத்திரங்கள் துருப்பிடிக்க ஆரம்பித்த பின்னால் என்ன செய்யலாம் என்று தெரியவில்லை. ;( ட்ரேயானால் துருவை மறைக்க 'டாய்லி' போட்டுப் பயன்படுத்தலாம். சாப்பிட, குடிக்கப் பயன்படுத்தும் பாத்திரங்கள் ஸ்பூன்களானால் தூக்கிப் போட்டு விட்டுப் புதிதாக வாங்கிக் கொள்வது ஆரோக்கியத்திற்கு நல்லது.

‍- இமா க்றிஸ்

ஹாய் இமா நலமா நீங்க எங்க இருக்கிங்கப்பா.எந்த ஊர் உங்களை ப்ற்றிசொல்லுங்களேன்

வித்யாவுக்கு - இந்த லின்க் போனால் ( http://www.arusuvai.com/tamil_help.html ) தமிழ்ல டைப் பண்ணலாம்.

பிசுபிசுப்புக்கு... எனக்கு இந்தப் பிரச்சினை வரல. அதனால் அதிகம் சொல்லத் தெரியல. வேற சகோதரிகள் வந்து ஐடியா சொல்வாங்க.
நீங்க சமையலுக்கு என்ன எண்ணெய் பாவிக்கிறீங்க!!

எனக்குத் தெரிந்த சில டிப்ஸ்...
# உருளைக்கிழங்குத் தோல் போட்டுத் தேய்ச்சுப் பார்க்கலாம்.
# ஒரு தடவை கொஞ்சமா வினிகர் துணில தொட்டுத் துடைச்சுப் பாருங்க.
# எலுமிச்சைத்தோல் தேய்ச்சுப் பார்க்கலாம்.
(திரும்ப உடனே சுத்தமான தண்ணில நல்லா அலம்பித் துடைச்சுருங்க. அடிக்கடி இப்படிப் பண்ண வேணாம். பிசுபிசுப்புப் போகலாம், ஆனால் துருப் பிடிக்கிற பாத்திரத்துக்கு ஆகாது இந்த முறைகள்).
# வழக்கமா கழுவ யூஸ் பண்ற பொருளோட சுடுதண்ணீர்ல கழுவிப் பாருங்க.
# அரிசி, பருப்பு கழுவின தண்ணில ஊறப் போட்டுக் கழுவினா பிசுபிசுப்புப் போகும்.
# பொங்கின தோசை, இட்லி மாவு கூட உதவும் போல. எங்கோ படித்த ஞாபகம். ட்ரை பண்ணிப் பாருங்க.
~~~~~~~~~
feroza, அரட்டைல பதில் போடுறேன். ;)

‍- இமா க்றிஸ்

என்னோட தோசை சட்டியை சுற்றி கருப்பாக இருக்கிரது அதை போக்க வழி எதவது சொல்லுஙகல் sisters.thanks

Hi sister, u can use the rice water.daily u can change the water rest for 5 days.After u can rub the tava in lemon.

kokila

thank you very much for ur reply sister i will try it.

வடசட்டி (தோசைகல்) வெளிப்பாகம் கருப்பாக இருக்குப்பா என்ன செய்ய..

என்ன பாத்திரம் என்பது சரியாகப் புரியவில்லை. ஆனாலும்... வெளிப்பக்கம் மட்டும் தானே! Mr Muscle (cream cleanser) + ஒரு துண்டு Steel wool சரியாக்கிக் கொடுக்கும். பிறகு நல்லா அலம்பிருங்க.

‍- இமா க்றிஸ்

நான் குறிப்பிட்டது கடாய். Thanx இமா நான் try செய்துட்டு சொல்றேன்.

மேலும் சில பதிவுகள்