ஸ்டஃப்ட் வெண்டைக்காய்

தேதி: March 18, 2011

பரிமாறும் அளவு: 5 நபர்களுக்கு.

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

3
Average: 3 (2 votes)

 

பிஞ்சு வெண்டைக்காய்கள் -- கால் கிலோ
துருவிய தெங்காய் -- ஒரு கப்
தனியா -- 4 ஸ்பூன்
மிளகாய் வத்தல் -- 5
கடுகு -- ஒரு ஸ்பூன்
மஞ்சபொடி -- அரை ஸ்பூன்
பெருங்காயப்பொடி -- ஒரு ஸ்பூன்
எண்ணை -- 4 ஸ்பூன்
உப்பு -- தேவையான அளவு


 

. வெண்டைக்காய்களை காம்பு நீக்கி சுத்தம் செய்து நடுவில் கீறி வைக்கவும்.
கடாயில் எண்ணை ஊற்றி தேங்காய்துறுவல், மிளகாய், தனியா பெருங்காயம் சிவக்க வறுத்து, ஆறியது மிக்சியில் விழுதாக அரைக்கவும்.
கீறி வைத்திருக்கும் வெண்டைக்காயில் இந்த விழுதை ஸ்டஃப் செய்யவும்.
கடாயில் எண்ணை ஊற்றி கடுகு மஞ்ச்பொடி போட்டு மேலாக ஸப் செய்த வெண்டைக்காய் களைப்போட்டு மிருதுவாக கிளறிக்கொடுக்கவும்.


மிகவும் சுவையான வித்யாசமான ஸ்டஃப்ட் வெண்டைக்காய் ரெடி.

மேலும் சில குறிப்புகள்


Comments

டைப்பிங் கொஞ்சம் பார்த்துத் திருத்திருறீங்களா? ;)

‍- இமா க்றிஸ்