கோபி ஃப்ரை

தேதி: March 18, 2011

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.8 (16 votes)

 

காலிஃப்ளவர் - 1(சிறியது)
கடலை மாவு - 7 தேக்கரண்டி
சோளமாவு - 7 தேக்கரண்டி
சோயா சாஸ் - ஒரு மூடி
மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி
சக்தி கறிமசாலாதூள் - ஒரு தேக்கரண்டி
ரெட் கலர் - சிறிது
எலுமிச்சை - பாதி பழம்
உப்பு - தேவைக்கு
எண்ணெய் - தேவைக்கு


 

காலிஃப்ளவரை சுத்தப்படுத்தி தண்ணீரில் சிறிது உப்பு போட்டு காலிஃப்ளவரை போட்டு கொதிக்க விடவும். பின்னர் தண்ணீரை வடிக்கட்டி காலிஃப்ளவரை தனியாக பாத்திரத்தில் வைத்து அதில் உப்பு, லெமன் சாறு, சோயா சாஸ் போட்டு நன்கு பிரட்டி அதில் மிளகாய் தூள், கறிமசாலா தூள், கடலை மாவு, சோளமாவு, ரெட் கலர் பொடி சேர்க்கவும்.
அதில் சிறிது தண்ணீர் தெளித்து பிசைந்துக் கொள்ளவும்.
அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பிசைந்து வைத்திருக்கும் காலிஃப்ளவரை போட்டு சிவக்க எடுக்கவும்
சுவையான கோபி ஃப்ரை ரெடி


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

so nice

மிகவும் சுவையான குறிப்பு. நாளையே செய்து பாத்துடரேன்.

கோபி ஃப்ரை நல்லா இருக்கு ..இதில் நான் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து செய்வேன்...வாழ்த்துக்கள்..

என்றும் அன்புடன்.....

•´ ¸.•*´¨) ¸.•*¨)
(¸.•´ (¸.•* குமாரி ♥♥♥...♪♪♪

சுலபமான குறிப்பு. என் தங்கைக்கு ரொம்ப பிடிக்கும், செய்து கொடுக்கறேன். வாழ்த்துக்கள்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

பார்க்கவே ரொம்ப அழகாக இருக்கின்றது. சுவையாகவும் இருக்கும் என்று தெரிக்கின்றது. நாளை விடுமுறை என்பதால் நாளையே செய்து பார்த்துச் சொல்கின்றேன்.

இதுவும் கடந்து போகும்..

அன்புடன்
ரேவதி உதயகுமார்

எனக்கு ரொம்ப நாளாவே இது செய்யனும்ன்னு ஆசை ஆனா நான் செய்தா மட்டும் மசாலா காளிஃப்லொவரில் ஒட்டவே மாட்டேங்குதும்மா அடம்பிடிக்குது இதுக்கு என்ன பன்ரது

அன்புடன்
ஸ்ரீ

எனது குறிப்பை வெளியிட்ட அட்மின்குழுவினருக்கு நன்றி

varsa_ela வருகைக்கு மிக்கநன்றி

கோமு வருகைக்கு மிக்க நன்றி சீக்கிரம் செய்துட்டு சொல்லுங்கள்

குமாரி வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி

வனி வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி தங்கைக்கு செய்துகுடுத்துட்டு சொல்லுங்கள்

ரேவதி நல்ல சுவையாக இருக்கும் செய்துட்டு சொல்லுங்கள் வருகைக்கு மிக்க நன்றி

ஸ்ரீ தண்ணீரை தெளித்து பிசையனும் பஜ்ஜி மாதிரி முக்கி போடகூடாது நான்குடுத்தமாதிரிசெய்துபார் நல்லாவேவரும் வருகைக்கு மிக்கநன்றிடா

கடலை மாவு சேர்த்து நான் இதுபோல் செய்ததில்லை.

பார்க்க ரொம்ப அழகா இருக்கு

எளிமையான அருமையான குறிப்பு

வாழ்த்துக்கள் அம்மா

அன்புடன்
இளவரசி

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

பாத்திமா அம்மா நலமா?

நல்ல குறிப்பு. நானும் இதே மாதிரி தான் செய்வேன். ஆனால் லெமன் சேர்த்தது கிடையாது.... வாழ்த்துக்கள் அம்மா

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி

அஸ்ஸலாமு அழைக்கும் அக்கா நலமா ரொம்ப நல்லா செய்து இருக்கீங்க ஸ்ரீமதி சொன்னது போலத்தான் எனக்கும் காலிபிலோவேர்ல மாவு ஒட்டாது நானும் இது போல செய்து பார்த்து விட்டு சொல்லுறேன்கா

இளவரசி கடலைமாவு போட்டு செய்து பாருங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றிமா

ராதா நான் நலம் வீட்டில் அனைவரும் நலமா?பையன் என்ன செய்றான்? லெமன் சேர்த்து செய்து பாருங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றிமா

வலைக்கும் சலாம் நஸ்ரின் வீட்டில் அனைவரும் நலமா?
என் தங்கை பொண்ணு பேரும் நஸ்ரின்
நான் குடுத்த மாதிரி செய்து பாருமா தண்ணீயாக பிசையகூடாது வருகைக்கு நன்றி

கலக்கலா இருக்கு.. மணம் இங்கே வரை வீசுது.. சூப்பர்.கண்டிப்பா செய்து பார்க்கிறேன்..வாழ்த்துக்கள்

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

அம்மா, எப்படியிருக்கீங்க? காலிபிளவர் இந்த காளிக்கு பிடிச்ச அயிட்டம் ;) நல்ல சிக்கன் 65 மாதிரி இருக்குங்கம்மா. எனக்கு காலிபிளவர் கிடைச்சா செய்து பார்க்கிறேன். அதுவரைக்கும் படத்துல இருக்க அந்த கோபி ப்ரையை எனக்கு அனுப்பிடுங்க. லேட்டாய்ட்டா நம்ம கோழிங்க பங்குக்கு வந்துருவாங்க ;)) ரொம்பவே டேஸ்டா இருக்கும் போல. வாழ்த்துக்கள்ங்கம்மா :)

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

ரம்யா செய்துட்டு சொல்லுங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி

கல்ப்பா அம்மாவை மறந்துவிட்டாயா?காளிக்கு புடிச்சதை பார்சல் பண்ணிட்டேன்
குழந்தைகள் எப்படி இருக்காங்க ரொம்ப நாளாச்சு பேசி வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிடா

KALAKKI TINGA KALIFLOWERAI ...??

எல்லாம் நன்மைக்கே..!!

i love kaliflower recipes, thank you mam