சென்னையில் ஒரு கெட் டூ கெதர் பார்டி

அனைத்து தோழிகளுக்கும் கோவையில் நடந்தார் போல் சென்னையிலும் ஒரு கெட் டூ கெதர் பார்டி நடத்தலாம் என்று ஆசைப்படுகின்றேன். நீங்கள் இதில் யார் யார் கலந்து கொள்ள விருப்பம் உள்ளது? அல்லது இல்லை? என்பதை வெளிப்படையாக இங்கு கூறலாம். நீங்கள் எவ்வளவு போ் இதில் ஆவலாக இருக்கின்றீர்கள் என்பதை வைத்துதான் அட்மின் அண்ணாவிடம் கலந்துரையாட வேண்டியிருக்கும். இது சென்னையில் உள்ளவர்கள் மட்டும் தான் கலந்துக் கொள்ள வேண்டும் என்பது கிடையாது. எல்லா ஊர் மக்களும் கலந்துக் கொண்டால் நன்றாக இருக்கும். ஒருவரை ஒருவர் சந்திப்பதற்கு மிகவும் ஒரு நல்ல தருமாக இருக்கும். (தவறாக இருந்தால் உடனே தெரியப்படுத்தவும் நீக்குவதற்கு சுலபமாக இருக்கும்).

முதலில் நானே தெரிவிக்கின்றேன். நம் தோழிகள் அண்ணாக்கள் மற்றும் அட்மின் அண்ணா அனைவரையும் சந்திக்க மிகவும் ஆவலாக உள்ளதால் இதை தொடங்கினேன். நிச்சயம் இது நல்ல படி நடக்க வேண்டும் என்று இறைவனை வேண்டிக் கொள்கின்றேன்.

இதுவும் கடந்து போகும்..

அன்புடன்
ரேவதி உதயகுமார்

தோழி நானும் கலந்து கொள்ள ஆவலாக உள்ளேன்.
நன்றி.

உங்களின் முயற்சி வெற்றி பெற்று சென்னை சந்திப்பு நல்ல முறையில் நடக்க எனது வாழ்த்துக்கள்.

அன்புடன்
THAVAM

உங்களின் இந்த முயற்சி வெற்றி பெற என் மனமார்ந்த வாழ்த்துகள்

Sakthi

தோழி நானும் கலந்து கொள்ள ஆவலாக உள்ளேன்.
நன்றி.

சூப்பர் ஆனா ஒரு15நாள் கழித்துவைங்கப்பா.ஏனா அப்பதான் நாங்க சென்னைக்கு வருகிரோம்.ப்ளீஸ்.

நானும் வருவேன் பா.... april 16 முடிஞ்சி வெய்ங்க..அப்போதான் பசங்களோட எக்ஸாம் முடிஞ்சி இருக்கும்..

என்றும் அன்புடன்.....

•´ ¸.•*´¨) ¸.•*¨)
(¸.•´ (¸.•* குமாரி ♥♥♥...♪♪♪

சென்னை கெட் டு கெதர் நல்லபடியாக நடக்க என் வாழ்த்துக்கள். சீக்கிரம் வந்து யாரெல்லாம் விருப்பம்னு சொல்லுங்க. எல்லாரும் சேர்ந்து ஜாலியா சந்தோஷமா கொண்டாடுங்க.

ரேவதி, நான் சென்னையில் நடக்கும் கெட் டூ கெதர் பார்ட்டிக்காக மிக்க ஆவலோடு காத்திருக்கிறேன். இது குறித்து ஏற்கனவே அட்மின் அண்ணாவிடம் பேசினேன். ஆட்கள் நிறைய பேர் இருந்தால் இது குறித்து மேற்படி பேசலாம் என்று சொன்னார். ஆனால் நீங்கள் இவ்வளவு விரைவில் நடத்துவீர்கள் என்றால் என்னால் நிச்சயம் கலந்து கொள்ள முடியாது. ஏனென்றால் இந்தியா நான் வருவது டிசம்பர் மாதம் தான். தோழிகள் நிறைய பேர் சேர்ந்தால் நடத்துங்கள். என் அட்வான்ஸ் வாழ்த்துக்கள் :)

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

நீங்க எங்க இருகீங்க என்ன பன்றீங்க

Sakthi

மேலும் சில பதிவுகள்