பனீர் பராத்தா

தேதி: March 19, 2011

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

3
Average: 2.8 (4 votes)

 

துருவிய பனீர் - அரை கப்
துருவிய வெங்காயம் - ஒன்று
பச்சை மிளகாய் - ஒன்று
கரம் மசாலா, சீரக தூள், மிளகு தூள் - தலா ஒரு தேக்கரண்டி
கோதுமை மாவு - ஒரு கப்
எண்ணெய் - தேவைக்கு ஏற்ப
உப்பு, கொத்தமல்லி - தேவைக்கு ஏற்ப


 

கோதுமை மாவை தண்ணீர், உப்பு சேர்த்து பிசைந்து 2 மணி நேரம் ஊற வைக்கவும்.
பேனில் எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயம், பச்சைமிளகாய் சேர்த்து வதக்கவும்.
பின்பு துருவிய பனீர் சேர்த்து நன்கு வதக்கவும்.
மிளகு தூள், சீரக தூள், கரம் மசாலா தூள், உப்பு சேர்த்து கிளறவும். கொத்தமல்லி சேர்த்து ஆற வைக்கவும்.
சூடு ஆறிய பின்பு தான் இட வேண்டும்
சப்பாத்திகளாக மாவை இட்டு கொள்ளவும். நடுவே பனீர் கலவை வைக்கவும்.
வெளிவராத வண்ணம் மூடி லேசாக தேய்த்து எடுக்கவும். தோசைக்கல்லில் பராத்தாக்களை எண்ணெய் அல்லது நெய் விட்டு சுட்டு எடுக்கவும்.
பனீர் பராத்தாவுடன் தயிர் பச்சடி, தால் சேர்த்து சாப்பிட ஏற்றது.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

பார்க்கவே சாப்டனும் போல இருக்கு

வித்தியாசமான குறிப்பு வாழ்த்துக்கள்

Different recipe.i added to my favorite list. regards.g.gomathi.

கவிதா அருமையான குறிப்பு
வாழ்த்துக்கள்
அன்புடன்
இளவரசி

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

சுவையான குறிப்பு நாளையே செய்துடுவேன்.

நல்ல ரெசிப்பி கவிதா.. ரொம்ப நாளைக்கு அப்பறம் அறுசுவை வந்து பாக்குறேன். வாழ்த்துக்கள்.

நலமா கவிதா?

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி

கவிதா... ஹையா... நானும் இது போல் செய்வனே. எனக்கு ரொம்ப பிடிக்கும், நல்ல சுவை. வாழ்த்துக்கள்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

சூப்பரான குறிப்பு.. முன்னமே வந்திருந்தால் பார்ட்டிக்கு செய்து இருப்பேன். கண்டிப்பாக அடுத்த பார்ட்டிக்கு இந்த டிஷ் உண்டு.வாழ்த்துக்கள்

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

எனது குறிப்பை வெளியிட்ட அட்மின் அவர்களுக்கு நன்றி

என்றும் அன்புடன்,
கவிதா

@ ganelaya , ஹமீது பாத்திமா ,கோமதி ,இளவரசி மேடம்,கோமு மேடம்,வனிதா மேடம் :

வருகைக்கும்,வாழ்த்திற்கும் மிக்க நன்றி

ராதா அக்கா,

நான் நலம் நீங்க நலமா? கண்டிப்பாக செய்து பாருங்க

ரம்யா,

செய்து பாருங்க பார்ட்டிக்கு ஏற்ற ரெசிபி தான்

என்றும் அன்புடன்,
கவிதா

கவிதா, எப்படியிருக்கீங்க? அறுசுவைல உங்களை பார்த்தே ரொம்ப நாளாச்சு பா. பனீர் பராத்தா ரொம்ப சூப்பர் பா. பச்சை மிளகாய்க்கு பதில் மிளகாய் தூள் சேர்த்தால் நன்றாக இருக்குமா? நான் செய்து பார்த்து விட்டு சொல்கிறேன் பா. வாழ்த்துக்கள் :)

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

கல்பனா,
நான் நலம். நீங்க நலமா?
மிளகாய் தூள் சேர்த்து செய்தாலும் அதிக வித்தியாசம் தெரியாது
செய்து பாருங்க உங்கள் வருகைக்கும்,வாழ்த்திற்கும் நன்றி

என்றும் அன்புடன்,
கவிதா