பிடி கொழுக்கட்டை (காரம்)

தேதி: March 21, 2011

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (2 votes)

 

பச்சரிசி மாவு -1 /4 கிலோ
உப்பு-தேவைக்கு ஏற்ப
பெருங்காய தூள் மஞ்சள் தூள் -1 சிட்டிகை
தேங்காய் துருவல்- விருப்பபட்டால்.
தாளிக்க:
கடுகு-1 ஸ்பூன்
உளுத்தம்பருப்பு-1 ஸ்பூன்
எண்ணெய் தேவைக்கு
வரமிளகாய்-2
சின்ன வெங்காயம்-10
கருவேப்பிலை -தேவைக்கு


 

அரிசி மாவில் உப்பை சேர்த்து பெருங்காய தூள் மஞ்சள் தூள் , தேங்காய் துருவலை சேர்த்து தண்ணீர் ஊற்றி பிசையவும்..

மாவை கையால் பிடிக்கும் பதம் வந்ததும் மாவை ஒரு கைப்பிடி அளவிருக்கு பிடிக்கவும்..

பிடித்த மாவை இட்லி பாத்திரத்தில் 5 நிமிடம் வேக வைக்கவும்....வெந்ததும் கடாயில் தாளிக்க கொடுத்தவற்றை தாளித்து பிடித்து வைத்துள்ளு கொழுக்கட்டையில் சேர்த்து கிளறவும் ..

சூடான பிடி கொழுக்கட்டை ரெடி


மஞ்சள் தூள் விருப்பபட்டால் சேர்க்கவும் ....

மேலும் சில குறிப்புகள்