காய்கறி கட்லெட்

தேதி: May 19, 2006

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 4 (2 votes)

 

உருளைக்கிழங்கு - 2
சிறிய காரட் - ஒன்று
பீன்ஸ் - 7
நடுத்தர அளவு வெங்காயம் - 2
பச்சை மிளகாய் - 3
சோம்பு - ஒரு தேக்கரண்டி
பிரட் துண்டுகள் - 2
ரஸ்க் பொடி - அரை கப்
மைதா - ஒரு கரண்டி


 

மைதாவுடன் சிறிது தண்ணீர் சேர்த்து கலக்கி வைக்கவும். கிழங்கினை வேக வைத்து எடுத்து, தோல் உரித்து வைக்கவும்.
மற்ற காய்களை மிகவும் பொடிதாக நறுக்கிக் கொள்ளவும்.
பிறகு வேக வைத்த காய்களையும், கிழங்கையும் சேர்த்து ஒன்றாக பிசையவும்.
அதன் பிறகு, பிரட் துண்டங்களின் ஓரங்களை நீக்கி, தண்ணீரில் நனைத்து பிழிந்து அதையும் கலவையுடன் சேர்த்துப் பிசையவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காயவிடவும்.
மசித்து வைத்துள்ள கலவையை சிறு உருண்டைகளாக உருட்டி, விரும்பிய வடிவத்தில் தட்டிக் கொண்டு, மைதா மாவில் நனைத்து, பிறகு ரஸ்க் தூளில் பிரட்டி எண்ணெய்யில் போட்டுப் பொரித்து எடுக்கவும்.
தக்காளி சாஸுடன் சூடாக பரிமாறவும். சுவையான மாலை நேர சிற்றுண்டி இது.


மேலும் சில குறிப்புகள்