காபூலி சன்னா குருமா

தேதி: March 23, 2011

பரிமாறும் அளவு: நான்கு நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 4 (2 votes)

 

கறுப்பு கொண்டை கடலை _ ஒரு கப்
வெங்காயம் _ ஒன்று
தக்காளி _ ஒன்று
பச்சைமிளகாய் _ ஒன்று
இஞ்சி,பூண்டு விழுது _ ஒரு தேக்கரண்டி
மிளகாய்த்தூள் _ ஒரு தேக்கரண்டி
மஞ்சள்த்தூள் _ கால் தேக்கரண்டி
மல்லி,புதினா தழைகள் _ சிறிதளவு
கறிவேப்பிலை _ ஒரு சிறிய கொத்து
எண்ணெய் _ 50 மிலி
*** அரைத்துக் கொள்ள ***
தேங்காய் துருவல் _ அரை கப்
முந்திரி _ நான்கு
பட்டை _ மிக சிறிய துண்டு
கிராம்பு,ஏலக்காய் _ தலா ஒன்று
சோம்பு _ அரை தேக்கரண்டி
மிளகுத்தூள் _ ஒரு தேக்கரண்டி
மல்லித்தூள் _ ஒரு தேக்கரண்டி


 

சன்னாவை 6 அல்லது 7 மணிநேரம் ஊறவைத்தல் வேண்டும்.
வெங்காயம்,தக்காளியை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.பச்சை மிளகாயை கீறிவைத்துக் கொள்ளவும்.
அதன் பிறகு ஒரு குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடு வந்ததும்,வெங்காயம் சேர்த்து நன்கு பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
அதன்பின் தக்காளி,பச்சைமிளகாயையும்,மல்லி புதினா,கறிவேப்பிலைகளையும் கழுவி சேர்த்து நன்கு வதக்கவேண்டும்.
தக்காளி நன்கு மசிய வதங்கியதும்,மஞ்சள்த்தூள்,மிளகாய்த்தூள் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி விட்டு ஊறிய சன்னாவை தண்ணீர் இல்லாமல் சேர்த்து நன்கு பிரட்டி விட்டு மிதமான தீயிலேயே ஐந்து நிமிடம் வதங்கவிடவும்.
அதற்க்குள் அரைக்க கொடுத்தவைகளை நன்கு நைசாக அரைத்து வைத்துக் கொள்ளவும்.
பிறகு வதங்கியவற்றில் அரைத்தவற்றை ஊற்றி தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து குக்கரை மூடி ஸ்டீம் வந்ததும் வெய்ட் போட்டு குறைந்த தீயில் பதினைந்து முதல் இருபது நிமிடம் வரை வைத்து இறக்கவும்.
சுவையான *** காபூலி சன்னா குருமா *** தயார்.
சப்பாத்தி,பரோட்டாவிற்க்கு ஏற்ற சூப்பர் சைட் டிஷ்ஷாக இருக்கும்.குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவர்.


திடீரென ஒரு மணி நேரத்திற்க்குள் சன்னா வேண்டுமெனில் ஃப்ளாஸ்க்கில் சன்னாவை போட்டு கொதித்த நீரை ஊற்றி மூடி ஒரு மணிநேரம் விட்டால்,நன்கு ஊறிய சன்னா சமைக்க தயார்.அப்புறமென்ன அடுத்த அரைமணிநேரத்தில் குருமாவும் தயார்.

மேலும் சில குறிப்புகள்