குக்கர் கேக்

தேதி: March 23, 2011

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4 (23 votes)

 

மைதா மாவு - ஒரு கப்
பொடித்த சர்க்கரை - 3 /4 கப்
வெண்ணெய் - அரை கப்
முட்டை - 2
டியூட்டி ப்ருட்டி - ஒரு கப்
பேக்கிங் பவுடர்
வெனிலா எசன்ஸ்
பட்டர் பேப்பர் - 1


 

முதலில் தேவையான பொருட்களை தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும். குக்கரில் 2 இன்ச் அளவு மணலை போட்டு கேஸில் அதிக தணலில் 30 நிமிடம் சூடு பண்ணவும், குக்கரின் மூடியை திருப்பி போட வேண்டும். அதாவது விசில் போடும் பகுதி உள் நோக்கி இருக்குமாறு வைக்க வேண்டும்.
வெண்ணெயை எக் பீட்டர் அல்லது ஸ்பூன் உதவியுடன், நன்கு அடித்து கொள்ள வேண்டும், பார்ப்பதற்கு கிரீம் மாதிரி வரும். பின்னர் அதனுடன் தூள் செய்த சர்க்கரை சேர்த்து நன்கு அடிக்க வேண்டும்.
முட்டையை பீட்டர் அல்லது மிக்ஸியில் போட்டு நுரை வருமாறு அடித்துக் கொள்ளவும். அதை இந்த கலவையுடன் சேர்த்து ஸ்பூன் உதவியுடன் நன்கு கலக்கவும்.
அதன் பின் டியூட்டி ப்ருட்டி சேர்க்கவும். டியூட்டி ப்ருட்டிக்கு பதிலாக எல்லா ட்ரை ப்ரூட்ஸும் சேர்க்கலாம்.
பின்னர் ஒரு பின்ச் பேக்கிங் பவுடர், கால் தேக்கரண்டி வெனிலா எசன்ஸ் சேர்த்து கலக்கவும்.
அதனுடன், மைதா மாவை ஒவ்வொரு கரண்டியாக சேர்த்து கொண்டே வரவும். கட்டி சேராதவாறு கலக்கவும்.
எல்லா பாத்திரத்திலும் கேக் செய்யலாம். கேக் செய்ய வேண்டிய பாத்திரத்தில், உட்பகுதியில் வெண்ணெய் அல்லது நெய் தடவி அதன் மேல் மைதா மாவை தூவவும். மாவு பாத்திரத்தின் எல்லா பகுதியிலும் நன்கு ஒட்டி கொள்ளும். பாத்திரத்தை கீழ் நோக்கி தட்டினால், மீதம் உள்ள மாவு உதிர்ந்து விடும். கேக் பாத்திரத்தில் ஒட்டாமல் வருவதற்காக இவ்வாறு செய்யப்படுகிறது. இப்போது, கேக் கலவையை அந்த பாத்திரத்தில் ஊற்றவும்.
இப்போது குக்கரை திறந்து அதனுள் பட்டர் சீட் கடைகளில் கிடைக்கும் அதனை படத்தில் உள்ளது போன்று உள்நோக்கி வைத்து, அதன் மேல் கேக் பாத்திரத்தை வைக்கவும்.
கேஸை ஸ்ம்மில் 20 -30 நிமிடம் வரை வைக்கவும். பின்னர் ஒரு கத்தியால் கேக்கினுள் விட்டு பார்த்தால் கத்தியில் மாவு ஒட்டாமல் வந்தால், கேக் ரெடி. எடுத்து பீஸ் போட்டு கொடுங்க. வெனிலா எசன்ஸ் வாசம் சூப்பராக வரும்.

கவனிக்க வேண்டியவை:
மாவின் பதம்: தோசை மாவு மாதிரி தண்ணியாகவும் இருக்க கூடாது சப்பாத்தி மாவு மாதிரி கெட்டியாகவும் இருக்க கூடாது. கொஞ்சம் ரப்பர் மாதிரி இருக்கணும். சாக்லேட் ப்ளேவர் தேவைப்படுபவர்கள், கோகோ பவுடர்/சாக்லேட் பார்/பூஸ்ட் பாக்கெட் சேர்த்து மாவு கலக்கலாம்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

ஹாய் சுகந்தி நலமா..
ம்ம்ம்ம்ம்...........யம்மி யம்மி சுபெர்ப் கேக்..
கண்டிப்பா செய்துப்பார்க்கப்போகிறேன்....
வாழ்த்துகள்...

ஹசீன்

சுகி... வழக்கம் போல படங்களும் குறிப்பும் பார்க்கவே ஆசையா இருக்கு... கேக் சூப்பர்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

சுகந்தி கேக் சூப்பரா இருக்கு...

என்றும் அன்புடன்.....

•´ ¸.•*´¨) ¸.•*¨)
(¸.•´ (¸.•* குமாரி ♥♥♥...♪♪♪

சுகி குக்கரில் கேக் செய்முறை தேடிக்கிட்டு இருந்தேன். நீங்க கொடுத்துட்டீங்க. இதே முறைப்படி முட்டை சேர்க்காமல் செய்யலாமா சுகி.

சுகி கேக் சூப்பர் கண்டிப்பா செய்றேன் அதுக்குள்ள எனக்கு பார்சல் பண்ணிடு சீக்கிரம் கூட்டாஞ்சோறுல சேர என் வாழ்த்துக்கள்டா

hi I am bagya from Malaysia.Do we need to pour some water inside the pressure cooker or leave it plain before we put the butter paper.I want to try ur recipe...Pls let me know..

சுகந்தி கேக் சூப்பரா இருக்குபா வாழ்த்துக்கள்

அவன் இல்லை அவன் இல்லைனு சொல்லிட்டு குக்கர்லேயே சூப்பர் கேக் பண்ணிட்டிங்க.. வாழ்த்துக்கள். யம்மி..

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

super sugi vazhithugal asaithra poo

வாழு இல்லை வாழவிடு

சுகந்தி சூப்பர்ர்ர்ர்.....ர்ப்பா சுலபமா. அருமையா இருக்கு நன்றிகள் என்னிடம் அவன் இல்லை குக்கரிலே அழகசெய்திருக்கிங்க நானும் செய்து பார்கிறேன்.இன்ஷாஅல்லா.

சுகந்தி,

அழகா,எளிமையா செய்து இருக்கீங்க வாழ்த்துக்கள்

என்றும் அன்புடன்,
கவிதா

ஹாய் சுகன் சூப்பர் குறிப்புடா பார்க்கவே சாப்பிடனும் போல இருக்கு. ரொம்ப யம்மியா இருக்கும் போலயிருக்கேன் அப்படியே எனக்கு 2 பீஸ் பார்சல் பண்ணேன். நிச்சயம் செய்யனும் சுகன் இதில் முட்டை இல்லாமல் செய்யலாமா சுகன். முட்டை ஸ்மெல் வராதாடா ஏன்னா அந்த முட்டை ஸ்மெல் வந்தா எனக்கு பிடிக்காது.

அட்மின் குழுவிற்கு நன்றி..
அளவே மட்டும் எல்லாரும் நியாபகம் வெச்சுக்கணும்.
கலவையின் அளவு: மைதா :: சர்க்கரை :: வெண்ணை
1 :: 75 :: 50

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

ஹாய் சுகந்தி

பட்டர் சீட் இல்லாமல் கேக் செய்யமுடியாதா

பானுகமால்

ஹாய் சுகந்தி நலமா...?
ஆஹா...,மிகவும் அருமையான எளிமையான முறையில் கேக் செய்து காட்டி அசத்திட்டீங்க போங்க.... பார்க்கும் போதே சூப்பராக இருக்கு சுகந்தி.நிச்சயம் முடிந்த போது செய்து பார்த்திடுவேன்.
எனக்கும் ஒரு சந்தேகம்தான்.பட்டர் பேப்பர் இல்லாமல் நியூஸ் பேப்பர் மாதிரி போட்டோ அது இல்லாமலோ செய்யலாமா..?மூடியும் போட வேண்டுமா?அல்லது வேண்டாமா...?கொஞ்சம் பதில் சொல்லிடுங்க.... உதவியாக இருக்கும்...
எனது பாராட்டுக்களும்,வாழ்த்துக்களும் சுகந்தி.
இன்னும் நிறைய அசத்துங்க...

என்றும் அன்புடன்,
அப்சரா.

எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.

ஹசீனா - முதல் ல வந்து பதிவு போட்டதுக்கு ரொம்ப நன்றி. செஞ்சு பாத்துட்டு சொல்லுங்க.

வனி - நான் உங்களை நினைச்சுட்டே தான் இதை பண்ணினேன், நீங்க ஒரு பதிவுல ல போட்டு இருந்தீங்க, //கேக் பண்ணனும்ன்னு ஆசை,ஆனா பயமா இருக்குன்னு // கவலயே இல்லாம பண்ணுங்க, நானே முதல் முறையா இப்ப தான் கேக் பண்றேன். ரொம்ப சூப்பர் ஹ வந்துச்சு...

குமாரி - வாழ்த்துக்கு நன்றிகள்

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

வினோஜா - தாராளமா செய்யலாம் டா, முடிக்கு பதிலா புளிக்காத தயிர் ஊத்தி நல்ல அடிக்கணும். அதுவும் நல்லா வரும் டா, கண்டிப்பா பண்ணி பாரு

பாத்திமா - கண்டிப்பா அடுத்த முறை பண்ணும் பொது ஒரு பார்சல் வந்துடும் மா.. வாழ்த்துக்கு நன்றி மா

bagya1 - தண்ணி ஒன்றும் சேர்க்க வேண்டாம், மணல் மட்டும் போதும்.

நஸ்ரின் - வாழ்த்துகளுக்கு நன்றி

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

ரம்யா - இப்பவுமே கவலை தான், அவன் இல்லையே ன்னு. இருந்து இருந்தா,இன்னும் நிறைய ட்ரை பண்ணி இருக்கலாம். இருந்தாலும் இந்த கேக் கடைல வங்கர டியூட்டி ப்ருட்டி கேக் மாதிரி அவளோ டேஸ்ட் ஹ இருந்துச்சு... :)

சுமி -- வாழ்த்துக்களுக்கு நன்றி

பெரோசா -- கண்டிப்பா பண்ணி பாருங்க, சூப்பர் ஹ வரும். சீக்கரம் பண்ணிட்டு வந்து சொல்லுங்க

கவிதா - எப்படி இருக்கீங்க?இப்ப தான் அறுசுவை க்கு வரக்கு வழி தெருஞ்சுதா? அடிகடி வாங்க பா, வாழ்த்துக்கு நன்றி

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

யாழினி - முட்டைய நல்லா பீட் பண்ணிக்கோ, அப்ப கண்டிப்பா வராது..... முட்டைக்கு பதிலா தயிர் வெச்சு பண்ணலாம் டா, நீ பண்ணி பாத்துட்டு சொல்லு டா

பானு - பட்டர் சீட் இல்லாம நான் பண்ணினது இல்ல. நீங்க வேணும்னா, நியூஸ் பேப்பர் ரெண்டா மடுச்சு வெச்சு ட்ரை பண்ணி பாருங்க. பட்டர் சீட் வைப்பதின் நோக்கம், நேரடியாக பாத்திரத்தில் ஹீட் படவேண்டாம் என்று தான்.

அப்சரா - முதல்ல உங்க வாழ்த்துக்கு ரொம்ப நன்றி. நியூஸ் பேப்பர் ரெண்டா மடுச்சு வெச்சு ட்ரை பண்ணி பாருங்க, கண்டிப்பா மூடி போடணும். எப்பவும் மூடர மாதிரி மூடி, விசில் போடா வேண்டாம், சிம் ல வெச்சுடுங்க. ஒரு 20 -30 கலுச்சு பாத்தா ஹ்ம்ம்ம் பேக்கிங் வாசம் வீட்டையே தூக்கும்.யம்மி :) :)

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

சுகி... என்னை நினச்சுகிட்டே பண்னீங்களா??? அதுக்ககவே செய்துடறேன் சுகி. நான் நிறைய கேக் செய்திருக்கேன், ஆனா குக்கரில் தான் இதுவரை செய்ததில்லை. இங்கே அவன் இல்லை, மாலே போனால் தான். உங்களுக்காக இதை அவசியம் செய்துடறேன். உடல் நலமில்லை... அம்மா அடுப்படிக்கே விடாம ரெஸ்ட் குடுத்திருக்காங்க. கொஞ்ச நாள் போகட்டும்... செய்துடறேன்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

HAI SUGANTHI ,HOW R U? UNGA COOKER CAKE SEYTHU PARTHEN,ROMBA NALLA VANTHATHU, ROMBA THANKS PA!

HAI SUGI,

TRY TO POST SOME MORE BAKED ITEMS SO THAT WE CAN TRY NA?

சுகி இந்த கேக்- ல் 2 முட்டைக்கு எவ்வளவு தயிர் சேர்க்கனும்.

hi,

i am new joinee,

god is love

hi,

i am new joinee , i read your cake receipe by cooker method

so easy and very nice , i will sure to try this receipe , thank u so much

god is love

Hai suganthi sister... i tried your cake... its came well... but can you help me? i have some doubts... pls pls pls....

அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.