பட்டர் பீன்ஸ் குருமா | arusuvai


பட்டர் பீன்ஸ் குருமா

food image
வழங்கியவர் : மஹாபிரகதீஸ்,
தேதி : புதன், 23/03/2011 - 19:47
ஆயத்த நேரம் : 15 min
சமைக்கும் நேரம் : 15 min
பரிமாறும் அளவு : 3

 

  • பட்டர் பீன்ஸ் - 200 கிராம்
  • சின்ன வெங்காயம் - 1 கப்
  • தக்காளி - 1
  • இஞ்சி - சிறியதுண்டு
  • பூண்டு - 5 பல்
  • பச்சைமிளகாய் - 2
  • மஞ்சள்த்தூள் - 1/4 டீஸ் ஸ்பூன்
  • மிளகாய்த்தூள் - 1 டீஸ் ஸ்பூன்
  • மல்லித்தூள் - 1/2 டீஸ் ஸ்பூன்
  • தாளிக்க:
  • எண்ணெய் - 1 சிறிய குழிகரண்டி
  • பட்டை - 1
  • ஏலக்காய் - 1
  • கிராம்பு - 1
  • அரைக்க:
  • தேங்காய்த்துருவல் - 1/4 கப்
  • கசகசா - 1/4 டீஸ் ஸ்பூன்
  • பெருஞ்சீரகம் - 1/4 டீஸ் ஸ்பூன்
  • கறிவேப்பிலை - 1 கீற்று
  • கொத்தமல்லித்தழை - சிறிது
  • உப்பு - தேவைக்கேற்ப்ப

 

  • குக்கரில் பட்டர் பீன்ஸை கழுவி அளவாக தண்ணீர் விட்டு 4 விசில் வந்ததும் இறக்கவும்
  • வெங்காயத்தை மிக்ஸியில் போட்டு நைசாக அரைத்து வைக்கவும், இஞ்சி பூண்டை தட்டி வைக்கவும்.
  • தக்காளி, கொத்தமல்லித்தழையை பொடியாக நறுக்கிகொள்ளவும், பச்சைமிளகாயை 2 ஆக கீறிவைக்கவும்.
  • தேங்காய், பெருஞ்சீரகம், கசகசா சேர்த்து நைசாக அரைத்துக்கொள்ளவும்
  • ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு அதில் கிராம்பு, பட்டை, ஏலக்காய், பச்சைமிளகாய், தட்டி வைத்துள்ள இஞ்சி, பூண்டு விழுது, கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும்.
  • அடுத்து அரைத்துவைத்துள்ள வெங்காயம் போட்டு பச்சைவாசம் போகும் வரை கிண்டவும். அடுத்து தக்காளி போட்டு நன்றாக குழையவதக்கவும்.
  • பின்னர் மஞ்சள்த்தூள், மிளகாய்த்தூள், மல்லித்தூள் சேர்த்து கிளறிவிட்டு வேகவைத்துள்ள பட்டர்பீன்ஸை சேர்த்து கிளறி தேவைக்கு உப்பு போட்டு தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும்.
  • எல்லாமும் சேர்ந்து வரும் போது அரைத்துவைத்துள்ள தேங்காய் விழுதினை சேர்த்து கெட்டியான பதத்தில் இறக்கவும்.
  • இறக்கும் முன்பு கொத்தமல்லித்தழையை சேர்க்கவும்.
  • சப்பாத்தி, பூரி, தோசை சூடு சாதத்திற்க்கும் மிகவும் பொருத்தம் இந்த குருமா



இந்தப் பிரிவில் மேலும் சில குறிப்புகள்..