கிராமம் பற்றி அறிய......உதவுங்கள்.

தோழிகள் உதவவும்....
எனக்கு ஒரு கிராமம் வரலாறு பற்றி அறிய விரும்புகிறேன்..Net-la search பண்ணா கிடைக்கல...இந்த மாறி வரலாறு பற்றி அறிய எதாது Web address, கிடைக்குமா? இந்த கிராமம் என் ஊருக்கு அறிகில் தான் இருக்கு....இருந்தும் என்னக்கு அதை பற்றி அறிய முடியவில்லை..எனக்கு ஒரு 100 வருட்ங்களுக்கு முந்தைய வரலாறு வேண்டும்.

Kiraamaththooda name sollung meedam.waan muyarchi seikirein.

எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.

அன்புடன்
ஷேக் முஹைதீன்

Kiraamaththooda name sollung meedam.naan muyarchi seikirein.

எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.

அன்புடன்
ஷேக் முஹைதீன்

நானும் நாமக்கல்தான் ,எந்த ஊர் என்று சொன்னால் நலம்,பொதுவாக அந்த ஊறுகேன்று தனி சிறப்புகள் இருந்தால்தான் netல் இருக்கும்.

B Good,C Good

தோழிகளுக்கு...........
அந்த ஊரின் பெயர் நன்செய் இடையார்.......இங்கு மாரியம்மன் பண்டிகை விசேசமாக கொண்டாடபடும்....இதை பற்றிய வரலாற்று குறிப்பை அறிய நினைக்கிறேன்.

பரமத்தி வேலுர் பக்கம் உள்ள ஊர்தானே அது. விரைவில் உங்களுக்கு குறிப்புகளை தருகிறேன்

அன்புடன்
THAVAM

தோழிகளுக்கு...........
அந்த ஊரின் பெயர் நன்செய் இடையார்.......இங்கு மாரியம்மன் பண்டிகை விசேசமாக கொண்டாடபடும்....இதை பற்றிய வரலாற்று குறிப்பை அறிய நினைக்கிறேன். இந்த ஊரின் வரலாற்று பெயர் சதுர்வேதி மங்கலம் என்று கூருகிறார்கள். ஆனால் சதுர்வேதி மங்கலம் என்று search-பன்னா ஈழத்தில் இருக்க சதுர்வேதி மங்கலம் தான் வருகிர்து.pls help me

ஆமாம்.... நானும் பரமத்தி வேலூர் தான்...... எனக்கு அந்த ஊரின் வரலாறு வேண்டும்....Thanks for ur reply

பரமத்தி வேலூரில் இருந்து நான்கு கிலோமீட்டர் தூரம். அங்குள்ள மாரியம்மன் கோவில் சுற்றுவட்டாரங்களில் மிகவும் பிரசித்தி பெற்ற ஸ்தலம். விழாக் காலத்தில் பால் குடம் எடுத்தல் விமரிசையாக நடைபெறும். பூக்குழி இறங்குதல் எனும் அக்கினி குண்டம் இறங்கும் நிகழ்ச்சி அங்கே மிகவும் சிறப்பு வாய்ந்தது. அக்கினி குண்டம் இறங்கும் பக்தர்கள் கைகளில் கங்கனம் எனும் காப்பு கட்டிக் கொண்டு விரதம் இருந்து அக்கினி குண்டம் இறங்குவர். பரமத்தி வேலூரில் இருந்து விழாக்கால பேருந்துகள் அப்போது இயக்கப்படுகின்றன.

அரசாங்க கெசட் பதிவேடுகள் சேலம் பாராமஹால் - திருமணிமுத்தாறு பற்றி கூறும் தகவல்கள்............... திருமணிமுத்தாறு என்பது ''புனித முத்துக்களை உடைய ஆறு'' என பொருள். இவ்வாறு பொருள்கொள்ள காரணம், திருமணிமுத்தாற்று நன்னீரில் நவரத்தினங்களில் ஒன்றான முத்துக்கள் வளரும் சிறப்புடையது. சிவன் கோயில் பெண் தெய்வத்தின் அணிகலனில் பதிக்கப்பட்டுள்ள முத்துக்கள் திருமணிமுத்தாறு நதியில் விளைந்ததாகும். அந்த முத்துக்கள் கோதுமை தாணிய வடிவில் ஆறுமடங்கு பெரிய அளவில் இருந்ததாக சொல்லப்படுகிறது. இதனாலேயே இந்நதி, திருமணிமுத்தாறு என அழைக்கப்பட்டது. திருமணிமுத்தாறு சேர்வராயன் மலையில், மஞ்சவாடி கணவாய் அருகே உற்பத்தியாகிறது. இந்த ஆறு இரு துணைநதிகளை கொண்டுள்ளது, திருமணிமுத்தாற்றின் முதண்மையான துணை நதி, போதமலையின் தெற்கு சரிவில் உற்பத்தியாகும் ''ஏளூர் நதி''யாகும். கஞ்சமலையின் சிற்றோடையான ''பவுனாறு'' அல்லது ''தங்கநதி'' திருமணிமுத்தாற்றின் இரண்டாவது உபநதியாகும். பஞ்சாக்ஷர நாதம் அல்லது திருமணிமுத்தாறு என்ற நதி சேர்வராயன் மலையிலிருந்து உற்பத்தியாகி, செல்லும் வழிகளில் பல ஏரிகளை நிரம்பச் செய்து தடுப்பணைகளை எல்லாம் கடந்து சுமார் 120 கிலோ மீட்டர் பயணத்திற்கு பிறகு நன்செய் இடையார் என்னும் இடத்தில் காவிரியில் கலக்கிறது.

மேலும் சில பதிவுகள்